ஐந்து ரூபாயில் கீமோதெரபியை விட அதிக பலன்

Chemo-logo

கீமோதெரபி போல் பத்தாயிரம் மடங்கு பலன் தரும் கற்பக விருக்ஷம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?  வெறும் ஐந்து ரூபாய் செலவுதான். நோயைவிட சிகிச்சை அதிக வலி நிறைந்தது என்ற பயம் கிடையாது. பக்கவிளைவு என்பதும் அறவே கிடையாது. மெயின் உபாதை போய் புதிதாக வந்து சேரும் இடைஞ்சலுக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உபத்திரவம் கிடையாது. தலைவலி போய் திருகுவலி வந்தது என்பார்களே அந்த கதை மாதிரி இல்லாமல் தடபுடல் முன்னுரையை நிறுத்தி விஷயத்தைப் பார்ப்போமா?

நம் தோட்டத்து பச்சிலையான எலுமிச்சை பற்றி புதிய விஷயங்கள் தெரியவந்துள்ளன. நமக்கு இது பற்றி தெரிந்தவை எல்லாம் ஓரம் கட்டி அவைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும்படி இருக்கிறது புதிய தகவல்கள். மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள்தான்.images

பொதுவாக ஸிட்ரஸ் பழங்களில் இயற்கையாகவே லிமொனாய்ட் எனும் வேதிபொருள் இருக்கிறது. இது  ER+   ER_  எனும் இருவித கேன்ஸர்களையும் தடுத்து நிறுத்தக்கூடியதாம். குறிப்பாக மார்பகபுற்று நோய்க்கு மிகவும் அருமருந்து. இப்பொழுது நாம் செய்யவேண்டியது எல்லாம் எலுமிச்சையின் சாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தோலியை எறிந்துவிடும் பழக்கத்தை நிறுத்தி விட்டு பழத்தை முழுவதுமாக தோலியுடன் பயன்படுத்த வேண்டும். அவ்வளவுதான். எப்படித் தோலியை அன்றாட சமையலில் பயன்படுத்த முடியும் என்ற கேள்வி பின்னாலேயே எழும்.

எலுமிச்சம் பழத்தை வாங்கி நன்றாகக் கழுவி அப்படியே முழுதாகவோ துண்டங்களாகவோ ஃப்ரீசரில் வைத்துவிடவேண்டும்  நன்றாக கெட்டியானதும் தேவைப்படும்போது கேரட் துருவியில் துருவியோ துண்டங்களாகவோ சாப்பிடும் உணவுப்பண்டங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டியது. புதுவிதமான அபாரமான ருசியும் கிடைக்கும்.

சரி    ஏன் தோலுடன் பயன்படுத்த வேண்டும்? அங்கேதான் விஷயமே இருக்கிறது. சாற்றைவிட தோலியில் பத்து பங்கு அதிகமாக விட்டமின்களும் சத்துக்களும் உடலிலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் திறன் கொண்டது. டாக்ஸிங்கள் மட்டுமிலை கேன்சர் உண்டாக்கும் செல்களை கவனிக்கவும் கேன்சர் உண்டாக்கும் செல்களை மட்டும்தான்  பக்கத்திலேயே இருக்கும் ஆரோக்கியமான செல்களை கொஞ்சம்கூட சேதப்படுத்துவதில்லை. கீமோதெரபியைவிட பத்தாயிரம் மடங்கு செயல்திறன் பெற்றது.  இந்தச் செய்தியை கேன்ஸர் மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் தங்கள் ஆராய்ச்சியின்போது கண்டுபிடித்திருந்தாலும் வெளியுலகத்திற்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டன.

downloadஆனால் பெயர் வெளியிட விரும்பாத ஒரு மருந்து கம்பெனி தன்னையறியாமலேயே விஷயத்தை லீக் செய்து விட்டது. மனித குலத்துக்கு இவ்வளவு எளிய சிக்கனமான முறையில் மிகப் பெரும் பலன் தரக்கூடிய உலகமே வரவேற்கக்கூடிய ரகசியத்தை அவர்கள் ஏன் வெளிப்படுத்த வில்லை?   விடை மிகவும் சிம்பிள்.  அப்பொழுதுதானே அவர்கள் விலையுயர்ந்த மருந்துகளை தயாரித்து லாபம் பெறமுடியும்?

கேன்சரை குணமாக்குவதோடு இலவச இணைப்பாக வேறு பல நன்மைகளையும் செய்கிறது தோலுடன் கூடிய எலுமிச்சை. பல்வேறுவிதமான கட்டிகள் ட்யூமர்கள் என அனைத்துவிதமான கேன்சரையும் அழிக்கும் பிரும்மாஸ்திரம் தான் இது. வயிற்றில் ஏற்படும் புழுக்களையும் அழிக்கிறது. பிபி குறையும். மனச்சோர்வு நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு கூட டாடா சொல்லிவிடலாம்.

இப்போது கேன்ஸர் சிகிச்சையில்  adriannycim சேர்ந்த மருந்து மாத்திரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை அலட்சியமாக ஒதுக்கித்தள்ளி அதனைப் போன்று பத்தாயிரம் பங்கு நிவாரணம் தர அதுவும் பணச்செலவு உடல் உபாதை இல்லாமல் காத்திருக்கிறது நமது மஞ்சள் நிற படைவீரர்களின் படை. இனியும் காலதாமதம்  பணவிரயம் செய்யாமல் எலுமிச்சையை தோலுடன் பயன்படுத்தி மகத்தான பலன் பெற வேண்டியவர்கள் நாம்தான்.

நன்றி  கமலா சுப்ரமணியன்    சினேகிதி

Advertisements

2 thoughts on “ஐந்து ரூபாயில் கீமோதெரபியை விட அதிக பலன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s