கூலியல்ல         குருதட்சணை

imageresizer

ஜமீன்தார் ஒருவர் தன் நண்பரை சந்தித்து விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். காட்டுப்பாதையில் வண்டி பழுதானது. ஒரு தச்சுக்கூடத்திற்கு வண்டியை ஒரு வழியாகக் கொண்டு வந்து சேர்த்தார். அங்கே தச்சர் ஒருவர் இருந்தார்.  “ சக்கரம் பழுதாகி விட்டது  அவசரமாக ஊர் போக வேண்டும் சீக்கிரம் பழுது பாருங்கள்´என்றார் அதிகாரத்துடன்.

Carpenter_01“ ஐயா வேலையாட்கள் அவசரமாக வெளியூர் சென்றுவிட்டனர். துருத்தி போடுவதற்கு ஆள் யாருமில்லை. நான் மட்டுமே இருக்கிறேன் “ என்றார் தச்சர் தயக்கத்துடன். “ சரி வேண்டுமானால் நான் துருத்தி போடுகிறேன்  சீக்கிரமாக வேலையை ஆரம்பியுங்கள் “ என்று தேவைக்காக இறங்கி வந்தார் ஜமீன்தார்.  வேலை செய்ய ஆரம்பித்ததும் ஜமீன் தார் உடலில் வியர்வை பெருகியது. அங்கவஸ்திரத்தால் துடைத்துக்கொண்டர்.  சிறிது நேரத்தில் சக்கரம் சரி செய்யப்பட்டு வண்டியில் பூட்டப்பட்டது. தன் உழைப்பில் வண்டி தயார் ஆனதைக் கண்ட ஜமீன்தாருக்கு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது  தச்சரிடம் என்ன கூலி கேட்கிறீர்கள்? என்று கேட்டார்.  “ வழக்கமாக ஒரு வெள்ளிப்பணம் கேட்பேன் “ என்றார் தச்சர்.  பையில் துழாவிய ஜமீன் தார் ஒரு தங்கக் காசை எடுத்து நீட்டினார். ஆச்சரியப்பட்ட தச்சரிடம் “ இது வேலைக்கான கூலி இல்லை  பணத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட உழைப்பால் கிடைக்கும் மகிழ்ச்சி உன்னதமானது என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தீர்களே அதற்கான குருதட்சணை “ என்றார்

Advertisements

2 thoughts on “கூலியல்ல         குருதட்சணை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s