நீங்கள் எலியா புலியா /

எனக்கு அது தெரியும்  இது அத்துப்படி  அதில் அசத்துவேன் எனக்கு ஏராளமான திறமைகள் இருக்கின்றன இப்படியெல்லாம் சும்மா பட்டியல் இடாமல் உங்களுடைய தகுதி லட்சித்தை அடைவதற்காக நீங்கள் செய்யக்கூடிய அல்லது செய்த முயற்சிகள் எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் எழுதுங்கள். எழுதி வைத்துவிட்டு இதோ இப்போது சொல்லப்போகிற கதையைப் படியுங்கள்.download

அடர்ந்த காடு ஒன்றில் பலகாலமாக தவம் செய்துகொண்டிருந்தார் ஒரு முனிவர்.  ஒரு நாள் அவர்முன்னால் எலி ஒன்று வந்து மூச்சு இறைக்க நின்றது. எதைப்பார்த்து அது பயப்படுகிறது என்பதை உணர்ந்த முனிவர் அதன் பாஷையில் பேசினார். பூனை ஒன்று துரத்தியதால் அஞ்சி ஓடி வருவதாக சொன்ன எலி தன்னையும் பூனையாக மாற்றிவிடும்படி வேண்டியது. இரக்கப்பட்ட துறவி அப்படியே செய்தார்.  download (1)இரண்டு மூன்று நாட்கள் ஆனது. நடு நடுங்கியபடியே ஒரு பூனை அவர் முன் வந்து நின்றது.  பூனையாக மாறிய எலி அது என்பதைப் புரிந்துகொண்ட முனிவர் இப்போதைய பயத்துக்கு காரணம் என்ன என்று கேட்டார். காட்டு நாய்கள் துரத்துவதாக சொல்லி தன்னையும் நாயாக மாற்ற வேண்டியது  மாற்றினார் முனிவர்.

images ஒரு வாரம் போனது. படபடக்க ஓடிவந்த நாய் புலியால் மிரண்டு போவதாகக் கூறியது. கெஞ்சிக்கேட்டு புலியானது.

download (2)அடுத்த மாதம் கிலியோடு ஓடிவந்த புலி வேடன் அம்போடு  அதனைத் துரத்துவதாக அலறியது. அன்போடு அதை வேடனாக மாற்றினார். இனி அது பயப்படாது என்ற முனிவரின் எண்ணத்துக்கு மாறாக அடுத்த மாதமே அவர் முன் வந்து நின்றான் வேடன்.  காட்டுப்பக்கமாக வரும் நகரத்து மக்கள் தன்னை வித்தியாசமாகப் பார்ப்பதாகவும் எனவே தன்னை நகரவாசியாக மாற்றிவிடுமாறு ரொம்பவே கெஞ்சினான்.

bw_stencils_fullsize_hunterபோனால் போகட்டும் என்று அப்படியே செய்தார் முனிவர். மேலும் சில நாட்கள் கழிந்தது. அய்யா அய்யா குரல்கேட்டு தவம் கலைந்து எழுந்த துறவி எதிரே அந்த நகரவாசி நிற்பதை பார்த்தார். தயவுசெய்து என்னை மன்னியுங்கள் நான் குடியிருக்கும் வீட்டில் கொழுத்த எலிகள்  சில ரொம்பவே தொந்திரவு செய்கின்றன  என்ன செய்தும் விரட்ட முடியவில்லை. என்னை மீண்டும் எலியாக மாற்றினால் நான் அவற்றோடு பேசி விரட்டிவிடுவேன். அதன் பிறகு இந்த உருவுக்கு மாறிக்கொள்கிறேன்.  தவமுனிக்கே கொஞ்சம் கோபம் வந்தது.என்றாலும் அடக்கிக்கொண்டார்.  எலி மீண்டும் எலியானது  வீட்டு எலிகளுடன் பேசியது. கொஞ்ச நேரம் கழித்து முனிவர் முன் வந்தது. என்ன மனிதனாக மாற்றிவிடவா கேட்டார் முனிவர்.

வேண்டாம் வேண்டாம்  நான் எலியாகவே இருந்துவிடுகிறேன்  இத்தனை உருவங்கள் மாறியதில் எலியாக இருப்பதே நல்லது என்று புரிந்தது. இனி நான் உங்களைத் தொல்லை செய்யமாட்டேன். பதறிய எலியை பரிவுடன் பார்த்தார் முனிவர். அஞ்சாதே எலியான உன்னை எத்தனை உருவங்கள் மாற்றினாலும் எலியின் மனம்தான் உனக்குள் இருக்கிறது அதனால்தான் எல்லாவற்றுக்கும் பதறுகிறாய். எனவே நீ எலியாகவே இருப்பதுதான் நல்லது போய் வா  என ஆசியளித்து அனுப்பினார்.

இப்போது நீங்கள் எழுதிவைத்த பட்டியலை எடுத்துப்பாருங்கள். நீங்கள் எத்தனை வேஷம் போட்டிருந்தாலும் அத்தனைக்குள்ளும் உங்கள்  மன நிலை ஒரேமாதிரிதான் இருக்கிறது என்பது புரியும்.

நேற்றுவரை வறுமையில் வாடிய ஒருவனுக்கு திடீர் என்று பலகோடி பணம் கிடைத்தால் அதனை என்ன செய்வது என்று கூட அவனுக்குத்தெரியாது. அதே ஏழை பணக்காரன் ஆகவேண்டும் என்று முயற்சியில் ஈடுபடும்போது  வரப்போவதை எப்படி கையாள்வது என்று ஆழ்மனதில் பதித்து வைத்திருந்தால் கிடைக்கும் பணத்தை எளிதாக கையாளத் தெரியும்.

இது பணத்துக்கு மட்டுமல்ல  பெயர் பதவி புகழ் பணம் என்று உங்கள் லட்சியம் எதுவாகவும் இருக்கலாம். உங்கள் லட்சியத்தை நீங்கள் அடைந்ததும் அதை சரியாகப் பயன்படுத்தைக்கொள்ள வேண்டுமானால் அதற்கு உங்கள் ஆழ்மனம் வழிகாட்டவேண்டும். இல்லையென்றால்  எலி புலியாக மனிதனாக என்று பல உருவில் மாறியபிறகும் அதன் மனம் மட்டும் எலியாகவே இருந்த நிலைதான் ஏற்படும்.

நன்றி  விஜயலட்சுமி பத்தையன்

Advertisements

One thought on “  நீங்கள் எலியா புலியா /

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s