வையம் கண்ட வைகாசி திருவிழா

தல வரலாறுT_500_633

மகாவிஷ்ணுவி அர்ச்சாவதார தரிசனம் வேண்டி பிரம்மா இங்கு யாகம் நடத்தினார். அவர் முன்னால் சுவாமி புண்ணியகோடி விமானத்துடன் காட்சி தந்து எழுந்தருளினார். பின்பு பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார். வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர் ‘வரதராஜர்’ எனப் பெயர் பெற்றார். பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி  முகத்தில் தழும்புடன் இருக்கிறார். இதனால் இவருக்குப் படைக்கும் நைவேத்தியத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் என்பதால் பக்தர்கள் இவரை தரிசித்த பின்னரே  மூலவரை தரிசிக்கிறார்கள் காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள் மதிலில் பதிக்கப்பட்ட கற்கள் தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன. தாயாரை பெருந்தேவி என அழைக்கின்றனர்.

தீர்த்தத்தில் பெருமாள்laskhmi1

பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும்  அப்போது இந்தச் சிலையை வெளியில் எடுத்து 48 நாட்கள் விசேஷ பூஜை செய்வர்.  1938, 1979 ல் வெளியில் எடுக்கப்பட்ட இவரை மீண்டும் 2019ம் ஆண்டு தரிசிக்கலாம்.

ஒரு வினாடி தரிசனம்download

வரதருக்கு எடுக்கப்படும் வைகாசி பிரம்மோற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது இதை வையம் கண்ட வைகாசி திரு நாள் என்பர். இவ்விழாவின் மூன்றாம் நாள் அதாவது இன்று  ஜூன் முதல் தேதி  சுவாமி கருடசேவை சாதிப்பார். இந்த கருட சேவையைக் குறிப்பிட்டு சங்கீத மும்மூர்த்தி தியாகராஜர்  கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். சோளிங்கரில் வசித்த தொட்டாச்சாரியார் என்ற பக்தர் இந்த கருடசேவையை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவரால் வரமுடியவில்லை. மனம் வருந்திய அவர் சோளிங்கரில் இருந்தபடி மனமுருகி வழிபட்டார். அப்போது ஒரு வினாடி மட்டும் சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் கருட சேவையின் போது இப்போதும் சுவாமியை ஒரு வினாடி குடையால் மறைத்து எடுத்து விடுவர்.g1

இருப்பிடம்   காஞ்சிபுரம் பஸ் நிலயத்திலிருந்து 4 கிமீ.

நன்றி  ஆன்மீக மலர்

Advertisements

One thought on “வையம் கண்ட வைகாசி திருவிழா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s