ஆஹா தகவல்

download (1)

இந்திய ரூபாய் நோட்டுக்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தகவல்களைச் சொல்கின்றன. ஐந்து ரூபாய் நோட்டில் விவசாயத்தின் பெருமை. பத்து ரூபாய் நோட்டில் விலங்குகள் பாதுகாப்பு. [புலி யானை காண்டா மிருகம் ]  இருபது ரூபாய் நோட்டில் கடற்கரை அழகு [ கோவளம் ] ஐம்பது ரூபாய் நோட்டில் அரசியல் பெருமை   நூறு ரூபாய் நோட்டில் இயற்கையின் சிறப்பு[ இமயமலை ]  ஐநூறு ரூபாய் நோட்டில் சுதந்திரத்தின் பெருமை. [தண்டி யாத்திரை ]

54f3d0b8-22b7-452f-bb65-f25fca18ca61_S_secvpfதிருக்கோடிக்காவல் என்ற தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சனி பகவானின் தலையில் சிவலிங்கம் காணப்படுகிறது. மேலும் சனி பகவானுக்கு வாகனமாக காகத்துக்கு பதில் கருடன் உள்ளது. இத்தலத்தில் சனி பகவானுக்கு எதிரில் எமதர்மன் காட்சி தருகிறார் இதுபோல் வேறெங்கும் இல்லை.

download (2)சென்னை கடற்கரையில் பல சிலைகள் உள்ளன. இவற்றில் பழமையானதும் முதன்முதலில் வைக்கப்பட்டதும்  உழைப்பாளர் சிலைதான். நான்கு உழைப்பாளிகள் ஒரு பெரிய பாறையைக் கட்டை உதவியால் நெம்பித் தள்ள முயற்சிக்கும் இந்த சிலையை வடிவமைத்தவர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி என்ற சிற்பக் கலைஞர். இவர் சென்னை ஓவியம் மற்றும் சிற்பக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர். இதனை உருவாக்கியதற்காக லட்ச ரூபாய் சன்மானமாகப் பெற்றார் ராய் சௌத்ரி.

downloadபாலைவனக் கப்பல் எனப் போற்றப்படும் ஒட்டகம் ஒரு நாளில் 40 லிட்டர் பால் தரும். பசுவின் பால் 4 டிகிரி சென்டிக்ரேட் வெப்ப நிலையில் 14 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஆனால் அதே வெப்ப நிலையில் ஒட்டகப்பால் 60 நாட்கள் வரை கெடாது.

benjamin_franklin_005உலகிலேயே அறிவியல் அறிஞர் ஒருவருக்கு சிலை வைக்கப்பட்டது. தபால் தலைகள் வெளியிட்டது. ரூபாய் கரன்ஸியில் அச்சிடப்பட்டது என்றால் அது அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற விஞ்ஞானிக்குத்தான். மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் தான் இந்த பெஞ்சமின் பிராங்க்ளின்.

nicco-park-images-photos-50cb32f3e4b00cef5bf60aca கொல்கத்தாவில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிக்கோ பூங்காதான் இந்தியாவில்  ISO—9001 தரச் சான்றிதழ்  பெற்ற முதல் பூங்கா. மேலும் இப்பூங்கா சுற்றுச்சூழலுக்காக   ISO—14001 தரச் சான்றிதழும் பாதுகாப்பிற்காக  OSHAS —18000  [SAFETY MANAGEMENT SYSTEM ] தரச் சான்றிதழும் பெற்றுள்ளது.

Muttam1கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி கிராமம் முட்டம். இங்குள்ள கலங்கரை விளக்கம்தான் தமிழகத்தின் முதல் கலங்கரை விளக்கம்  இது 1882 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் உயரம் 15.22 மீட்டர்.

05newswater_191317பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ டி எம்மில் பாதுகாக்கப்பட்ட குடி நீர் கிடைக்கிறது. ப்ரீபெய்டு ஸ்மார்ட் கார்டு மூலம் ஐந்து ரூபாய்க்கு இருபது லிட்டர் குடி நீர் வழங்கப்படுகிறது.

downloadகொடுக்காபுளியே பழங்களுள் மிகவும் சத்துடையது. ஒன்றே கால் கிலோ ஆப்பிள் தரும் புரதத்தை 100 கிராம் கொடுக்காப்புளி தந்துவிடும். பி காம்ப்ளக்ஸ் சத்துக்களும் கொடுக்காபுளியில் அதிகம்

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s