ஆஹா தகவல் 

DSC_0277

பூட்டுகளில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் காலப்பூட்டு என்பது பாதுகாப்பான ஒன்று. இந்தப் பூட்டு எல்லா நேரத்திலும் திறக்காது. குறிப்பிட்ட  நேரத்தில்தான் இந்தப்பூட்டை திறக்கமுடியும். இந்த வகைப் பூட்டு வங்கிகளிலும் விலை மதிப்பு மிக்க பொருட்களைப் பாதுகாத்துவைக்கும் இடங்களிலும் உபயோகப்படுகிறது.

download (1)உடுமீன் எனும் நட்சத்திர மீன் எட்டுக்கைகள் கொண்டது. ஒரு கையில் காயம் பட்டால் அதை தானாகவே வெட்டி தனியே விட்டுவிடும். இவ்வகை மீன்கள்  தம் வயிற்றை வாயருகில் கொண்டு வந்து வெளியே உள்ள இரையைக் கவ்விக்கொள்ளும். இவ்வின மீன்களில் பெண் மீன்களுக்கு  பஞ்சம் ஏற்பட்டால் ஆண் மீன்கள் பெண் மீன்களாக மாறிவிடும்.

14_-_woman_antarcticaஅண்டார்டிகாவிற்குச் சென்ற முதல் பெண் நார்வேயைச் சேர்ந்த கரோலின் மிக்கெல்சன்  ஆவார். அண்டார்டிகா உறைபனி நிலத்தின் கிழக்கு கடற்கரையில் 770 அடி உயரம் கொண்ட ஒரு மலையையும் இவர் கண்டுபிடித்துள்ளார். அதற்கு கரோலின் மிக்கெல்சன் என்று பெயர் சூட்டப்பட்டது.

download (2)குற்றாலத்திலுள்ள திருக்குற்றால நாதர் திருக்கோயிலின் தல விருட்சம் பலாமரம். இந்த பலாமரத்தின் கீழ் ஆதி குறும்பலா நாதர் பூட வடிவில் காட்சி தருகிறார். இந்த மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் பலா காய்த்துக்கொண்டிருக்கும். ஆனால் இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகல் லிங்க வடிவில் இருப்பது அதிசயமாகக் கருதப்படுகிறது. இது பற்றி சுளையலாஞ் சிவலிங்கம் என்று குற்றாலக் குறவஞ்சியிலே குறிப்பிடப்பட்டுள்ளது

a08245059ad66144d5bf9bc2e469e06aஇன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் விமானத்தை இயக்கி வருகிறார்கள். ஆனால் 1910 ஆண்டிலேயே விமானம் ஓட்டுவதற்கு உரிமம் பெற்றார் பிரான்ஸின் ராய்மண்டி டி லாரோசி. இதன் மூலம் உரிமம் பெற்ற உலகின் முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றார். முதலாம் உலகப்போரில் ராணுவ விமான பைலட்டாகவும் இவர் பணியாற்றினார்.

ThreeGorgesDam-China2009மத்திய சைனாவில் கட்டப்பட்டுள்ள த்ரீகோர்ஜன் டேம் அணைக்கட்டுதான் உலகிலேயே மிகப்பெரியது எனக் கருதப்படுகிறது. இந்த அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 70000 க்யூபிக் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சீறிப்பாயும் தண்ணீரைக் காண கணக்கற்ற சுற்றுலாப்பயணிகள் இங்கே வருகின்றனர்.

07_07_2009-bat_400x159ஸ்விட்சர்லாந்து நாட்டின் அரசுத் தொழில் நுட்ப நிலைய விஞ்ஞானிகள் வவ்வால் வடிவிலான ரோபோவை வடிவமைத்துள்ளனர். டலேர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ நடக்கும் பறக்கும் பறந்தபடியே கண்காணிப்பது ஆபத்தில் இருப்பவர்களை மீட்பது போன்ற பணிகளுக்கு இந்த ரோபோவை பயன்படுத்தலாம் என்கின்றனர்

gas03102013நாடு முழுவதும் ஐந்து கிலோ காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனத்துக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அனுமதி அளித்துள்ளது. நிரந்தர காஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு மானியம் இல்லாத விலையில் விற்பனை செய்ய  சகஜ் இ வில்லேஜ் என்ற நிறுவனத்துடன் IOC ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 27000 மையங்கள் உள்ளன. இங்கு அடையாள அட்டையைக் காட்டி காஸ் பெற்றுக்கொள்ளலாம்.

downloadவாஷிங்டனிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் 8 கோடி புத்தகங்கள்  உள்ளன.  26 ஹெக்டேர் பரப்புள்ள இந்நூலகம் 1800 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

maxresdefaultஉலகில் சுமார் 86 நாடுகளில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. உலகில் தென்னை சாகுபடி செய்யும்பரப்பில் 16 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளம் முதல் இடத்திலும் தமிழ் நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளன.

Advertisements

One thought on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s