வாழைமரம்

banana_tree2

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் வாழை மரம் கட்டுவது ஏன்?  வாழையின் மகிமையை வர்ணிக்க முடியுமா?  குலை தள்ளிய வாழை என்பது பூரண  அயுள் பெற்றுவிட்ட வாழைமரத்தின் நிலை. திருமண வீடுகளில் வாழையடி வாழையாக மணமக்களின் சந்ததி  தழைக்கவேண்டும் என்ற மரபிலே வாழைமரம் கட்டப்படுகிறது. அதுமட்டுமல்ல. இனிமையற்ற மனம் உடையோரின் வெறுப்பு சூட்டினை தான் ஏற்றுக்கொண்டு நல்ல வாழ்த்துக்களை நிலை நிறுத்தச் செய்கிறது.

வெப்பத்தையும் குளிரையும் அதீத அலை தாக்கத்தையும் சம நிலை படுத்தி சரியான ஆற்றலை வெளியிடும் சக்தி வாழை மரத்துக்கே உரிய தனிச்சிறப்பு. அதனாலேயே எல்லாப் பருவங்களிலும் வாழை விளைகிறது.

banana-stem6-586வாழை மரத்தின் உட்பகுதி ஆயிரமாயிரம் நுண்ணறைகள் உள்ளது. தீமையை உள்ளிழுத்து வடிகட்டி வாழைத்தண்டு முழுவதும் நல்ல நீரை தீர்த்தமாக சேமித்து வைக்கிறது. வாழைத்தண்டு ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளது. சிறு நீரக கல்லையே கரைக்கும் அக்னி இதனுள் அடக்கம். நெருப்பையே அணைக்கும் குளுமையும் இதனுள் அடக்கம். சிவாம்சமும் விஷ்ணு அம்சமும் ஒரே இடத்தில் இணைந்ததே வாழை மரம். வேறு மரங்களை வெட்டினால் கசடு அல்லது பருவ ரேகைகள் காணப்படும். வாழை மரத்தை வெட்டினால் வெள்ளை வெளேரென தெய்வாம்சமாக பூரணத்துவமாக பளீரிடுகிறது.

downloadவாழை இலை ஓர் அற்புதமான இயற்கை கொடை. வாழையிலையில் சாப்பிடுவதினால் உண்ணும் உணவு உடலின் தன்மைக்கேற்ப மாறுவதோடு சுவையும் மணமும் கூட்டி ருசியாக்கி தருவதால் மகத்துவமிக்கதாக மாறுகிறது.

download (1)வாழையிலையிலுள்ள குளோரோபில் உணவுடன் கலந்து நம் வயிற்றுக்குள் செல்வதால் ஜீரணசக்தி அதிகரிக்கிறது. இளமை அழகைத் தருகிறது. உண்டபின் எறியும் இலையும் ஆடு மாடுகளுக்கு உணவாகிறது. தீப்புண் பட்டவர்களை வாழை இலையில் படுக்க வைப்பதால் எரிச்சல் தணிகிறது. உடல் முழுதும் எண்ணெய் பூசி சூரிய ஒளியில் படுத்து மேலே வாழை இலை கொண்டு மூடிய வாழை இலைக் குளியலால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கி புத்துணர்ச்சி மேலிடுகிறது.

download (2)எல்லா மரக்கனிகளும் பூமியை நோக்கியே இருக்கும். ஆனால் வாழைக்குலைக் கனியோ வான் நோக்கியே வளர்கின்றன. வாழை இலைகள் பூமியை நோக்கி வணங்குவது போல் இருக்கும். பூஜைக்கு  உகந்த வாழைப்பழத்தில் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கும் கனி வாழைப்பழம்தானே

IMAGE1MtpSeithi8585வாழை நார் பூத்தொடுக்கப் பயன்படுகிறது. உடை தயாரிக்கவும் பயன்படுகிறது. சருகாகியும் பலன் தரும் வாழை மாத்தை கன்றாக இருக்கும்போதே வெட்டி ஆயுத பூஜை  வினாயகர் சதுர்த்தி என அலக்கரிக்கும்போது வலிக்கவில்லையா?  நம் குலம் தழைக்க குலை தள்ளிய வாழை மரங்களை திருமணம் கும்பாபிஷேகம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கட்டுவதோடு நிறுத்திக்கொள்வோமா?

நன்றி   ப்ரவீணா அருண்

Advertisements

3 thoughts on “வாழைமரம்

 1. வணக்கம்
  அம்மா

  வாழைமரம் பற்றிய தகவலை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ….இறுதியில் சொன்னது போல குலையுடன் உள்ள வாழை மரத்தை வெட்ட வேண்டாம் என்றால் நம்ம ஆக்கள் வெட்டியே தீருவார்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s