ஆஹா தகவல் 

3165671252_a67bdb0c91 - Copy

பஞ்சாபில் ஆடப்படும் தீப நடனத்திற்கு ஜாகோ என்று பெயர்  திருமணங்களின் போது மட்டுமே இதை ஆடுவார்கள். திருமணமான ஒரு பெண்மணியே தலையில் கலச விளக்கை வைத்துக்கொண்டு ஆட வேண்டும்.

hqdefaultஇந்தியாவிலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களிலேயே மிகச் சிறிய பெயர் கொண்ட ஸ்டேஷன் IB என்பதாகும். ஒடிசா மானிலத்திலுள்ள ஜார்ஸூகுடா எனும் இடத்தில் உள்ளது இந்த ரயில்வே ஸ்டேஷன். அது போல மிகப்பெரிய பெயர் கொண்ட ரயில் நிலையம் வெங்கட நரசிம்ஹாராஜூ வாரிப்பேட்டை என்பதாகும். இது ஆந்திரமானிலம் சித்தூர் அருகே உள்ளது.

220px-புரவி - Copyபாண்டிய மண்டலத்தில் கிராம தேவைதைகளுக்கு திருவிழா நடைபெறும்போது புரவி எடுத்தல் என்றொரு நிகழ்ச்சி நடக்கும். மண்ணால் குதிரை செய்து கோயிலுக்கு அருகே நிறுத்தி விடுவது வழக்கம்.  ஒரு காலத்தில் குதிரை வீரர்களை கௌரவிப்பதற்காக வந்த இந்தப் பழக்கம்  நாளடைவில் எல்லா சிறு தெய்வங்களையும் கௌரவிக்கும் விதமாக அமைந்துவிட்டது.

Hagia-Sophia-Mosque-in-Istanbul-Turkey-1 - Copyஇஸ்தான்புல் நகரில் புனிதசோபியா மசூதியிலுள்ள ஒரு தூணில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணீர் வடிப்பது போல சிறுகச் சிறுக நீர் வடிந்து கொண்டே இருக்கிறது. இந்த நகரத்தை துருக்கியர்கள் கைப்பற்றியது முதல் இன்றுவரை இத்தூண் கண்ணீர் வடித்துக்கொண்டே இருக்கிறது.

download - Copyமுதன்முதலில் இன்ஸ்டண்ட் காபியை தயாரித்தவர் ஜப்பானியரான சடோரி கட்டோ என்பவர்தான். அமெரிக்காவில் வாழ்ந்த கட்டோ 1901ல் இதை தயாரித்தார்.

fan - Copy சினிமா விசிறிகள் கிரிகெட் விசிறிகள் என்றெல்லாம் சொல்கிறோம். ரசிகர்களை குறிக்கும் இவ்வார்த்தை fan என்ற ஆங்கிலசொல்லின் நேர் மொழிபெயர்ப்பாகும். அளவுக்கு மீறிய ஆர்வம் உடையவனைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான FANATIC என்பதன் சுருக்கமே   FAN என்பது. அதனை விசிறி என்று சம்பந்தமே இல்லாமல் நாம் உபயோகித்து வருகிறோம்.

paramapadam-300x217 - Copyதிருச்சி முசிறி சாலையில் வேத நாராயணன் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் வேதங்களைத் தன் தலைக்கு தலையணையாக வைத்து படுத்துப் பள்ளி கொண்டிருக்கிறார்

RUR_Dibblingசித்திரை பத்தாம் நாள் குமரி மாவட்டத்தி விதைகளை ஊன்றுவதற்கு மிகச் சிறந்த நாளாக கருதுகின்றனர். அன்றைய தினம் தென்னை நடுதல்  வயலில் விதை விதைத்தல் போன்றவை செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

download (1) - Copyவேத காலத்தில் தொடர்ந்து 300 மைல்கள் மற்றும்  3000 மைல்கள் வரை  பறக்கக்கூடிய விமானங்கள் இருந்தன. அவை அக்னியாலும் நீராலும் இயக்கப்பட்டன என்று ரிக் வேதத்தில் குறிப்பு உள்ளது. வேத கால ஆய்வாளர்களின் ஆய்வுகள் பிரம்மிக்கத்தக்க விதத்தில் இருந்தன என்பதற்கு இதுவே சான்று.

ana1 - Copyஇங்கிலாந்தில் ஜூம்புலன்ஸ் என்ற வாகனம் உள்ளது. மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை வெளியில் அமைத்துச் சென்று திரும்பக் கூட்டிவரும் இந்த வாகனத்தில் மருத்துவ வசதிகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. மருத்துவமனை சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்தி நோயாளிகளுக்கு நோய் விரைவில் குணமாக ஜூம்புலன்ஸ் பயணம் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Advertisements

One thought on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s