உஷ்ணம் தணிக்கும் உணவுகள்

கோடை காலத்தில் உடலில் உள்ள நீர்ச் சக்தி அதிகமாக வெளியேறுவதால் தாகமும் வறட்சியும் உடல் சோர்வும் ஏற்படுகிறது.

sl377தாகத்தைத் தணிக்க இள நீர் மோர் பிரஷ்ஜூஸ் வகைகள் போன்றவற்றை அருந்துவது நல்லது. ஜூஸ் மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவற்றுடன் சிறிது மிளகு தூளைச் சேர்த்துக்கொண்டால் சளியிலிருந்து தப்பிக்கலாம்.

downloadஇள நீர் உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியூட்டுவதில் முதலிடம் வகிக்கிறது. நீர்க்கடுப்பை சரி செய்கிறது. மோருக்கு ரத்தக்குழாய்களிலுள்ள அழுக்கை கரைக்கும் சக்தி உள்ளது. பச்சரிசி உணவு சாப்பிடுபவர்கள் கோடை காலங்களில் புழுங்கல் அரிசியைச் சாப்பிட வேண்டும்.

sl369இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் வழக்கத்தைவிட கூடுதலாக பிரச்னைகள் ஏற்படும். எனவே அவர்கள் உடல் வெப்ப  நிலையை சீராக வைத்துக்கொள்ள தண்ணீரில் சீரகம் மல்லிவிதை இரண்டையும் சிறிதளவு சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய பிறகு வடிகட்டி குடிக்கலாம். அல்லது நன்னாரி வேரை [ நாட்டும்ருந்துக் கடைகளில் கிடைக்கும் ] குடி தண்ணீரில் போட்டு வடிகட்டிக் குடிக்கலாம்.

sl1029சர்க்கரை நோய் உள்ளவர்கள் புளிப்பில்லாத ராகி கம்பு போன்ற கூழ் வகைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். நெல்லிக்காய் ஜூஸ் அருந்தலாம். நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய்  முள்ளங்கி வெள்ளை பூசணி இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு கீரை வகையை எடுத்துக்கொள்வது நல்லது. பசலைக்கீரை மணத்தக்காளி கீரை பருப்புக் கீரை அதிக குளிர்ச்சியைத் தரும்.

download (3)கோடைக்காலங்களில் கனரக ஆலைகளில் வாகனங்களில் பணிபுரிபவர்களுக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து அனேகப் பிரச்னைகள் ஏற்படும். இதற்கு வெந்தயத்தைப் பொடி செய்து வைத்துக்கொண்டு மோரில் கலந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும் அல்லது கசகசாவை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து பருகலாம்.

download (2)சப்போட்டாவை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொட்டைகள் நீக்கி சிறிது பாலும் நீரும் சேர்த்து வடிகட்டி  சர்க்கரை சேர்த்து பருகினால் மலச்சிக்கல் வராது. இரத்தம் விருத்தியாகும். கோடைக்கேற்ற சிறந்த பழம் சீதாப்பழம்  இதிலுள்ள குளுக்கோஸ் உடலுக்கு எனர்ஜி தரும்  தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலின் வெப்ப நிலையை சீராகவைத்துக்கொள்ள உதவும்.

download (1)தர்பூசணி கிர்ணி பழங்கள் இருந்தால் கொட்டைகளை நீக்கி ஜூஸாக்கி பால் சர்க்கரை சேர்த்து பருகலாம். இவற்றி/ற்கு சர்க்கரை அதிகம் தேவையில்லை.

hqdefaultமாம்பழத் துண்டுகளுடன் பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட உடம்புக்கு நல்லது. மாம்பழத்திலுள்ள சூட்டைப் பால் தணித்துவிடும்.  முதல் நாள்  சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறு நாள் அந்தத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் உடம்புக்கு குளிர்ச்சி தருவதோடு சக்தியும் தரும். முதல் நாளே சிறிது உப்புக் கலந்து வைத்தால் அதிகம் புளிப்பு இருக்காது.

முளைகட்டிய பயறு பச்சடிஅன்றாட சமையலில் கண்டிப்பாக நீர்ச் சத்து மிகுந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். காரம் மற்றும் எண்ணெயை வழக்கதைவிட குறைவாகப் பயன்படுத்தவும். மாலை வேளைகளில் முளைக்கட்டிய பயறை பச்சையாகவோ சுண்டலாகவோ செய்து சாப்பிடலாம்.

நன்றி   எஸ் ராஜகுமாரி  போரூர்

Advertisements

2 thoughts on “உஷ்ணம் தணிக்கும் உணவுகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s