ஆஹா தகவல் 

africanGreyParrot_2435290kஉலகம் முழுவதும் 316 வகையான கிளிகள் உள்ளன. ஆப்பிரிக்காவிலுள்ள  க்ரே பாரட்  [GREY PARROT ] என்ற கிளிக்கு நான்கு வயதுக்குரிய அறிவு உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளும். இவை 50 ஆண்டுகள் வாழும். மனிதர்களின் பேச்சை அப்படியே இமிடேட் செய்து பேசும் ஆற்றல் கொண்டவை.

download (3)உலகிலேயே ஆபத்தான கடற்கரை ஹவாய் தீவின் அருகில் உள்ள வெய்சி வளைகுடாப் பகுதிதான். இங்கு சாதாரணமாக 30 முதல்  36 அடிவரை அலை ஆர்ப்பரித்து எழுவதால் இங்கு யாரும் குளிக்க முடியாது. வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். இந்தத் தீவில் பாம்புகளே கிடையாது என்பது தனிச்சிறப்பு.

download (4) அல்லாமா முகமது இக்பால் ‘ என்பவர் பிரிட்டிஷ் இந்தியாவின் இஸ்லாமியக் கவிஞர். உருது மற்றும் பாரசீக மொழிகளில் கவிதைகள் எழுதியுள்ளார். ‘ ஸாரே ஜகான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ‘ என்ற அற்புதமான பாடலை இயற்றிய கவிஞர் இவர்தான். 1904 ல் இப்பாடலை எழுதினார். 1947 ஆகஸ்ட் 15ல் நமது நாடு  சுதந்திரம் அடைந்தபோது டெல்லி அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்ட முதல் பாடல் இதுதான்.

pandavasமஹாபாரத போரின் இறுதியில் பத்துபேர் மட்டுமே உயிரோடு இருந்தனர். கிருஷ்ணர்  பஞ்ச பாண்டவர்கள் அஸ்வத்தாமர்  கிருபர் கிருதவர்மா சாத்யகி ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் மாண்டனர்.

napoleon-bonaparte_2763098bபொதுவாக ஓர் இடத்தில் நான்கு அல்லது ஐந்து வீதிகள் தான் சந்திக்கும் ஆனால் உலகிலேயே பாரீஸ் நகரில் தான் ஒரே இடத்தில் பத்து தெருக்கள் சந்திக்கும் இடம் அமைந்துள்ளது. இப்படித் தெருக்களை அழகாக திட்டமிட்டு அமைத்தது யார் தெரியுமா? மாவீரன் நெப்போலியன் தான்.

download (2) உலகில் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் தான். வேறு எந்த இந்தியருக்கும் கிடைக்காத சிறப்பு இது.

downloadபாரிஜாதம் எனப்படும் பவள மல்லிகை மலரின் மணம் 100 அடி வரை வீசும். கோயில் நந்தவனங்களில் அதிகமாக இதை வளர்ப்பார்கள். வறட்சியைத் தாங்கி வளரும் இதன் இலைகள் வீடுகளுக்கு முன்புள்ள தூசிகளை வடிகட்டி நல்ல பிராணவாயுவை வழங்கும். இதில் சென்ட்டும் தயாரிக்கப்படுகிறது.

download (1)அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளிலும் மெக்சிகோவிலும் காணப்படும் ரோடு ரன்னர் என்ற பறவை பறக்காது. ஆனால் மணிக்கு 40 கிமீ வேகத்தில் ஓடும்.  இந்தப் பறவை பாம்பு பல்லி மற்றும் மண்ணூக்குள் இருக்கும் பூச்சிகளைப் பிடித்துப் பாறையில் அடித்துக்கொன்று அதன் பிறகே உண்ணும்.

200px-Tagore3கொல்கத்தா பல்கலைக்கழகம் 1857ல் தொடங்கப்பட்டது.  தெற்காசியாவின் முதல் பல்கலைக்கழகமான இதில் வெளி நாட்டு மாணவர்கள் உட்பட 22000  மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். 138 கல்லூரிகள் இதன் கீழ் இயங்கி வருகின்றன. இங்கு மாணவர்களாகப் பயின்ற ரொனால்டு ரோஸ்  ரவீந்திர நாத் தாகூர்  சர் சி வி ராமன் மற்றும் அமர்த்தியா சென் போன்ற அறிஞர்கள் நோபல் பரிசு பெற்றவர்கள்.

ba937570-9d17-4f2c-b652-ba7821ac1f32_S_secvpfமன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலயத்தில் 16 கோபுரங்கள் உள்ளன. இங்குள்ள  11  நிலை ராஜகோபுரத்தில் கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை சிற்பங்கள் இல்லை. ஏழாவது நிலையில் இருந்தே சிலைகள் வடிக்கப்பட்டிருக்கின்றன.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s