எல்லா நோய்களுக்கும் ஏற்ற வல்லாரை

download

தரையோடு படரும் செடி வகையைச் சார்ந்தது வல்லாரை. இது ஆசிய நாடுகளில் நீர் நிலைப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. வல்லாரைக் கீரை சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும். மூளை நரம்புகள் வலுப்பெறும்.  தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும். பல் ஈறுகளை வலுப்படுத்தும். இருமல் தொண்டைக்கட்டு குணமடையும். காச நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.vallaraikoottu

வல்லாரைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து அத்துடன் சின்னவெங்காயம் பூண்டு மிளகு  சேர்த்து அரைத்து [ புளி சேர்க்காமல் ] சட்னியாக்கி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாணவர்களுக்கு மூளைச் சோர்வு நீங்கி ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வல்லாரைக் கீரையுடன் சம அளவு கீழா நெல்லி இலையைச் சேர்த்து அரைத்த விழுதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறு நீர் எரிச்சல் குறையும். குழந்தைகளுக்குத் தினந்தோறும் பத்து இலையை சுத்தம் செய்து பச்சையாக சாப்பிடக்கொடுத்து வந்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும்.

download (1)வல்லாரை கீரை துளசி இலை மிளகு சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து மை போல அரைத்து மிளகு அளவுக்கு உருட்டி அதை நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தி கொள்ளவேண்டும். இது காய்ச்சல் சளி இருமல் சிறு நீர் கட்டுதல் உடல் சூடு தோலில் ஏற்படும் அரிப்பு போன்றவற்றுக்கு மருந்தாகப்பயன்படும்.

வல்லாரைக்கீரையை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி  தைலமாக வைத்துக்கொண்டு தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் உடல் எரிச்சல் குணமாகும்.

07-vallarai-keerai-chutneyவல்லாரைக் கீரையுடன் சம அளவு வெந்தயத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பத்து கிராம் அளவிற்கு சாப்பிட்டால் உடல் சூடு கண் எரிச்சல் தலைவலி மட்டுப்படும்.

நன்றி    பிரேமா தியாகராஜன்   திருச்சி

Advertisements

3 thoughts on “எல்லா நோய்களுக்கும் ஏற்ற வல்லாரை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s