ஆஹா தகவல்

download (4)

2012 ஆம் ஆண்டு  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த சினோரியஸ் மொர்னா பறவை அமேசானில் வாழ்கிறது. இது குஞ்சு பொரித்தவுடன் உணவு தேடி கிளம்பி விடுகிறது   முட்டையிலிருந்து வந்தவுடன் குஞ்சின் உடல் முழுவதும் கம்பளிப்பூச்சியைப் போல கூர்மையான விஷமுள்ள முட்கள் ஆரஞ்சு நிறத்தில் நீட்டிக்கொண்டிருக்கும். எதிரிகளிடமிருந்து தப்பிக்க இயற்கை தந்த பாதுகாப்பு இது. இப்பறவை வளர்ந்த பின் ஆரஞ்சு வண்ண முடிகள் மறைந்து விடுகின்றன.

Baruch_Samuel_Blumberg_by_Tom_Trower_(NASA)மஞ்சள் காமா;லை ஓர் அபாயகரமான நோயாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்த நோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை கண்டறிந்து அதற்கு மருந்து கண்டுபிடித்தவர் அமெரிக்க மருத்துவரான சாமுவேல் பிளம்பெர்க்  இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி உலக மஞ்சள் காமாலை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Pig-14உலகிலேயே முதன்முதலில் போலீஸ் நாய்கள் போன்று துப்பறிவதில் ஈடுபட்ட மற்றொரு பிராணி பன்றியாகும். லூயில் என்ற பன்றிதான் முதன்முதலாக இப்பயிற்சியில் பயன்படுத்தப்பட்டது. சுமார் 70 செ மீ ஆழத்தில் போதை மருந்துகள் புதைக்கப்பட்டாலும் இவ்வகைப் பன்றிகள் அவற்றைக் கண்டு பிடித்துவிடுமாம்.

download (6)குளியல் சோப்புகளில் TFM என்று குறிப்பிட்டு 75 சதவீதம் என்று அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். அதாவது டோட்டல் ஃபேட்டி மேட்டர் என்பதாகும். சோப்புகளில் எந்த அளவு எண்ணெய் சேர்ந்துள்ளது என்பதைக் குறிக்கிறது இது.

download (2)தமிழ் நாட்டில் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள மாவட்டமாக விளங்குகிறது சென்னை. இங்கு சதுர கிலோ மீட்டருக்கு 26903 பேர் வசிக்கிறார்கள். மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டமாக சிவகங்கை உள்ளது. இங்கு சதுர கிலோ மீட்டருக்கு 324  பேர் மட்டுமே வசிக்கிறார்கள்.

download (1) வெனிசுலா நாட்டில் உள்ளது   ‘ தி சால்டோ ஏஞ்சல் ‘[ ஏஞ்சல் ஃபால்ஸ் ] என்ற நீர்வீழ்ச்சிதான் உலகிலேயே மிக அதிக உயரத்திலிருந்து விழுகின்ற நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 3212 அடி   இந்த நீர்வீழ்ச்சி அந்த நாட்டில் பாயும் கர்ரோ நதியின் ஒரு கிளையாகும்.

downloadபெண் எழுத்தாளர்களில் அதிக நாவல் எழுதிய பெருமைக்குரியவர்  வை மு கோதை நாயகி அம்மாள்தான்.  அவர் எழுதிய நாவல்களின் எண்ணிக்கை 115.  நகைச்சுவையாகப் பேசிக்கொண்டே எழுதும் ஆற்றல் பெற்றவர் தனது 38 வது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

download (3)இந்தியப் பிரதமராக இருந்த மொராஜி தேசாய் தனது 81 வயதில் பிரதமனார். பிரதமர் பதவியை ராஜினமா செய்த முதல் பிரதமரும் இவரே. இந்தியாவின் மிக உயரிய விருதான் நிஷான்—ஏ—பாகிஸ்தான் விருதையும் ஒரு சேரப் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர்.

download (5)கேரட்டில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ க்கு ஆதாரமாய் இருப்பது க்ரிஸ்லைன் ஹைட்ரோ கார்பன்ஸ்  இந்த அணுக்கள் கரோட்டின் என்ற பொருளால் ஆனவை. இதன் நிறம் சிவப்பு அதனால்தான் கேரட் க்கு இந்த பெயர் ஏற்பட்டுள்ளது.

மாமன்னர் இரண்டாம் ராமேசஸ் எகிப்தை 66 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.  எகிப்தை ஆட்சி செய்த ராஜாக்களிலேயே சிறந்த ராஜாவாக விளங்கிய இவர் கட்டடக் கலையில் மிகப் பெரிய நிபுணர். இவருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. 90 ஆண்டுகள் வாழ்ந்த இவருக்கு   96 ஆண் குழந்தைகளும்  60 பெண் குழந்தைகளும் இருந்தனர். மனைவியர் எண்ணிக்கைக்கும் கணக்கில்லை.

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s