ஆஹா தகவல் 

boxJellyFish

ஆஸ்திரேலியா கடற்கரைகளில் காணப்படும் ஜெல்லி பிஷ் எனப்படும் உயிரனங்கள் கொடிய விஷம் கொண்டவை. தற்காப்புக்காக இவை கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான விஷமுட்களை வெளியிடும். இதன் தாக்குதலுக்கு ஆளானவர்கள் பயங்கர வலியை அனுபவித்தவாறு ஒரு மணி நேரத்தில் உயிரை விடுவார்கள்.

download (2)வாழைக்காய்  உருளைக்கிழங்கு ஆகியவற்றை சமையலுக்குப் பயன்படுத்தும்போது தோல் நீக்கக் கூடாது. கழுவி சுத்தம் செய்தாலே போதும். அவற்றின் தோல்களை அவற்றிலுள்ள வாய்வுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

7620101_f520மஹாராஷ்டிர மானிலம் சிங்கனாப்பூர் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு கதவே கிடையாது.  கதவு பொருத்தினால் கிராம தேவதையால் சனி பகவானின் [ ஷானி தேவ் ] கோபத்திற்கு ஆளாக  நேரிடும் என இந்த கிராமமக்கள்  அஞ்சுகின்றனர். வெளியூரிலிருந்து வாகனத்தில் இங்கு வருபவர்களும் தங்களின் வாகனத்தைப் பூட்டக்கூடாதாம்.

Tamarindus_indica,_leaves,_pod நம் நாட்டில் உள்ளது போலவே தாய்லாந்து நாட்டிலும் புளிய மரங்கள் உள்ளன. அந்த மரத்தின் பிஞ்சுகளும் காய்களும் கடுமையாகப் புளிக்கின்றன. ஆனால் பழுத்தவுடன் முற்றிலும் இனிப்பாக மாறி விடுகின்றன. மற்ற பழங்களைப்போலவே மக்கள் இந்தப் பழத்தையும் உண்கின்றனர்.

download (3)ஏர்னெஸ்ட் வின்சென்ட் ரைட்ஸ் என்பவர் புகழ் பெற்ற எழுத்தாளர். இவர் 1939,ம்  ஆண்டில் காட்ஸ்பி என்ற நாவலை எழுதினார். இதில் 50110 சொற்கள் உள்ளன. ஒரு சொல்லில் கூட ஆங்கில எழுத்து E இடம் பெறவில்லை. ஈ மொய்க்காத நாவல் இது.தானோ?

cs-jay2மெக்ஸ்கோவின் வடபகுதியில் கான்குன் என்னுமிடத்தில் கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியாத்திலுள்ள ராட்சஷ் மீன்களை மிக அருகில் இருந்து பார்க்கலாம்.  டால்பின் போன்ற மீன் களுடன் நாமும் விளையாடலாம். இதுதான் உலகிலேயே மிகப்பெரிய அக்வேரியம்.

download (1)ஆமையின் வேகத்தை நாம் கேலி செய்கிறோம். ஆனால் ஆமை தண்ணீரில் மணிக்கு 20 மைல் தூரத்தைக் கடக்கும். மனிதனின் சராசரி நீச்சல் வேகம் மணிக்கு 10 மைல்கள்தான்.

download உலகம் முழுவதிலும் மதச்சார்பில்லாமல் இசையை வழங்கியவர் எம் எஸ் சுப்புலட்சுமி  ரோமில் போப்பாண்டவர் முன்னிலையிலும் பாடியிருக்கிறார். காஞ்சி பரமாச்சாரியார்  முன்பாக குரு வந்தனமும் பாடியிருக்கிறார்.  சீக்கியர்களின் கோயில்களில் பாடப்படும் ஷ்பத் தும் பாடியிருக்கிறார். தமிழ் சமஸ்கிருதம் இந்தி குஜராத்தி பெங்காலி மலையாளம் உருது மராத்தி கன்னடம் தெலுங்கு போன்ற பல மொழிகளில் பாடும் திறன் பெற்றிருந்த ஒரே கர்னாடக இசைப் பாடகி எம் எஸ் மட்டுமே.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s