எது பலம்?

2

துறவி ஒருவரைக் காணவந்த பயில்வான் ஒருவன் தன்னால் செய்யமுடியாத செயல் எதுவுமே இல்லை என்று பெருமை பேசினான். துறவி அவனை அழைத்துக்கொண்டு வெளியே நடந்தார். சற்று தோலைவில் இருந்த பட்டுப்போன மரம் ஒன்றைக்காட்டி அதனைப் பிடுங்கி எறியச் சொன்னார். பயில்வான் சில நிமிடங்களிலேயே அதனைச் செய்துவிட்டு அடுத்தது என்ன என்பது போல் கர்வமாக பார்த்தான்.

கொஞ்ச தொலைவில் பாதையை மறித்துக்கிடந்த  பெரியதொரு பாறையை அவனைத் தூக்கி வீசும்படி சொன்னார் துறவி. அதையும் செய்துவிட்டு மார்தட்டிக்கொண்டான் பலசாலி. மேலும் கொஞ்ச தூரம் சென்றதும் ஆறு ஒன்று குறுக்கிட்டது. அதன் கரையில் நின்ற துறவி சிறிய துணித்துண்டு ஒன்/றை அவனிடம் தந்து அதனை ஆற்றின் மறுகரைக்கு வீசச் சொன்னார். பயில்வான் வெகு அலட்சியமாக அதனை வாங்கினான். ஆனால் பலமுறை முயன்றும் அவனால் அந்தத் துணித்துண்டை மறுகரைக்கு எறிய முடியவில்லை.

boxer-coloring-pageதலைகுனிந்து நின்ற பயில்வானை பார்த்தார் துறவி. “ பயனின்றி இருந்த மரத்தையும்  பாதையை மறித்துக் கிடந்த பாறையையும்  நீ எடுத்துப் போட்டதற்கு நன்ற்  இந்த துணியை எவ்வளவு பெரிய பலசாலியாலும் மறுகரைக்கு தூக்கி எறிய முடியாது. ஆனால் அதை உனக்கு சொல்லித்தருகிறேன் “ என்று சொல்லிவிட்டு அந்தத் துணித்துண்டுக்குள் ஒரு சிறு கல்லை வைத்து முடித்துவிட்டு தூக்கி எறிந்தார் அது மறுகரையில் விழுந்தது.  உடல்பலத்தைவிட அறிவில் பலம் பெற்றிருப்பதே சிறந்தது என்பதை உணர்ந்த பயில்வான் அவரைப் பணிந்து வணங்கிவிட்டு சென்றான்.

Advertisements

2 thoughts on “எது பலம்?

 1. வணக்கம்
  அம்மா.
  அறிவுக்கு விருந்தாகும் கதை .
  புத்திமான் பலவான்…..
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s