ஆஹா தகவல் 

spt_p_arur

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் 9 ராஜ கோபுரங்கள்  80 விமானங்கள்  12 பெரிய மதில்கள் 13 பெரிய மண்டபங்கள் 15 தீர்த்த கிணறுகள் 365 லிங்கங்கள் 100க்கு மேற்பட்ட சன்னதிகள் 86 வினாயகர்கள் 24 உட்கோயில்கள் ஆகியவற்றைக்கொண்டு பிரம்மாண்டமாக விளங்குகிறது. இந்தக் கோயிலை முழுமையாகக் கண்டு களிக்க ஏழு நாட்கள் ஆகும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள வின்பிட்டோ பறவை ஒன்பது நிறங்களைக் கொண்டது. இந்தப் பறாவிக்கு நீலம் சிவப்பு வெள்ளை மஞ்சள் பச்சை கருப்பு ஆரஞ்சு சாம்பல் ரோஸ் என ஒன்பது  நிறங்கள் உள்ளன.

brinjal_long நம் பாரமபரிய உணவான கத்திரிக்காய்க்கு தமிழில் வேறு பெயர்களும் உண்டு. அவை வழு  துணை  லங்கணம்  வங்கம்  நமைக்காய்  பிருகதி  காளினியம் வர்த்தாகம் பிரு என்பன.

பிரான்ஸ் நாட்டில் டான்டெஸ்டோர்க் என்ற இடத்திலுள்ள குகையில் நீர் ஊற்று உள்ளது. இதில் உள்ள அதிசயம் முப்பத்தாறு செகண்டுக்கு தொடர்ந்து  நீர் வரும் அடுத்த செகண்டிலேயே நின்றுவிடுவதுதான். பின்னர் சரியாக முப்பத்திரண்டு நிமிடம் முப்பது செகண்டுக்கு நீர் வராது  மீண்டும் முப்பத்தாறு நிமிடம் முப்பத்தாறு செகண்டிற்கு நீர் வரும். முப்பத்தி இரண்டு நிமிடம் முப்பது செகண்டிற்கு  நீர் நின்றுவிடும்.

இப்படியே தினமும் ஆண்டாண்டு காலமாக இந்த நீர் ஊற்றில் நீர் வந்துகொண்டும் நின்றுகொண்டும் இருக்கிறது. இயற்கையின் இந்த மாற்றமில்லாத செயல் அதிசயம் அல்லாவா?

maglev_trainரஷ்யாவின் ஒரு முனையிலுள்ள மாஸ்கோவிலிருந்து மற்றொரு முனையிலுள்ள விளாடிவாஸ்டாக் நகருக்கு இடையே 9313கிமீ தூரத்துக்கு போடப்பட்டுள்ள டிராஸ் சைபீரியன் ரயில் பாதைதான் உலகிலேயே மிகவும் நீளமானது. இந்த ரயில் பாதையிலுள்ள 97 நிறுத்தங்களைக் கடக்க ஐந்து நாட்களாகின்றன.  இந்த ரயில் பாதை அமைத்திட 13 ஆண்டுகளானதாம்.

25817_origமொகலாயப் பேரரசர் பாபர் பீரங்கிகள் துப்பாக்கிகள் ஆகியவற்றை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியதில் முக்கியமானது பெண்களின் மனம் கவர்ந்த ரோஜாப்பூக்கள்தான்.

42423110குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் மலை மீது ஒரு முருகன் கோயில் மூவாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சுனையில் எந்தக் கோடைக்காலத்திலும் வற்றாது நீர் சுரந்துகொண்டேயிருக்கும். இந்த நீரைத்தான் கோயில் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் தோவாளை சொக்கர்கிரி  என்பவையும் அதே வரிசையில் மலை மீது அமைந்து இருக்கின்றன.

download (1)இந்தியாவின் மிகப்பெரிய நுழைவு வாயில் பதேபூர் சிக்ரி நகரில் உள்ள புலந்த் தர்வாஸா  மசூதியின் நுழைவுவாயில்தான். இதை நிர்மாணித்தவர் முகலாயப்பேரரசர் அக்பர்.

downloadகுலசேகரப்பட்டினம் சிவன் ஆலயத்தில் ஸ்தல விருட்சம் மாமரம் ஆகும். வருடம் முழுவதும் 365 நாட்களும் இங்கு மாம்பூ பூத்திருக்கும்  தினமும் ஒரு பூவும் மாவடுவும் கண்டால்தான் உச்சிக்கால பூஜை.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s