நியூ[ஸ்]மார்ட்

.

download (1)அண்மையில் உலகை உலுக்கிய நேபாள நாட்டு நில நடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் சுருங்கியுள்ளது தெரியவந்துள்ளது. ஐரோப்பாவை சேர்ந்த சென்டினல் 1 ஏ ராடார் செயற்கைக்கோள் சமீபத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளப் பகுதி வழியாக சென்றுள்ளது. அப்போது எவரெஸ்ட் சிகரத்தின் அளவு 2.8 செமீ குறைந்துள்ளதை செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது.

download (2)ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வரிசைப் படங்கள் உலக அளவில் சக்கைப்போடு போடுபவை. இந்த வரிசையில் வின் டீசல் மறைந்த பால் வாக்கர் ராக் ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள பியூரியஸ் 7 அண்மையில் வெளியாகி ஒரே வாரத்தில் இந்தியாவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்த ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

wp81af998c_05_06 வெறும் ரத்தப் பரிசோதனை மூலமே OVARIAN CANCER என்று அழைக்கப்படும் கருவகப்புற்று நோய் வந்திருப்பதைக் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். பதினான்கு ஆண்டுகள் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கருவகப்புற்று நோயைக் கண்டறியும் தற்போதைய பரிசோதனையைவிட இரத்தப்பரிசோதனை மூலம் இரண்டு மடங்கு துல்லியமாக கருவகப்புற்று நோயைக் கண்டறியமுடியும் என்று தெரியவந்துள்ளது.

downloadபாகிஸ்தானில் மலாலாவை கொல்ல முயற்சித்த குற்றத்துக்காக 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு அருகே பள்ளி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமி மலாலா மீது தாலிபன் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கழுத்து மற்றும் தலையில் குண்டுகள் பாய்ந்து மலாலா உயிருக்குப் போராடினார். ராவல்பிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத நிலை மற்றும் தாலிபான்களின் தொடர் மிரட்டல்களை அடுத்து பாகிஸ்தான் அரசு மற்றும் இங்கிலாந்து அரசு உதவியோடு பர்மிங்ஹாமின் எலிசபெத் மருத்துவமனையில் மலாலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

atmercury_lgபுதன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மெசெஞ்சர் என்ற விண்கலத்தை 2004 ம் ஆண்டு அனுப்பியது. இது 2011ம் ஆண்டு மார்ச் மாதம் புதனில் சுற்று வட்டப் பாதையை அடைந்தது. புதனின் பாதையில் பிரவேசித்த முதல் விண்கலமான இது இருமுறை தனது திட்டப்பயணத்தை நீட்டித்துக்கொண்டு 270 லட்சத்துக்கும் அதிகமான புகைப்படங்களையும் பத்து டெராபைட் அளவுக்கு தகவல்களையும் அனுப்பி வைத்தது. புதன் கிரகத்தில் நீரால் ஆன பனிக்கட்டிகள் இருப்பதற்கான தடயத்தையும் கண்டுபிடித்தது. புதன் கிரகத்தை 4104  முறை சுற்றி வந்துள்ள மெசெஞ்சர் சில சமயங்களில் புதனுக்கு மிக அருகில் அதாவது 300 முதல்  600 மீட்டர் வரை  நெருங்கி உள்ளது. இது அண்மையில் தனது பயணத்தை நிறைவு செய்து புதனில் மோதி விழுந்தது. அங்கே அடர் காற்று மண்டலம் இல்லாததால் நுழையும் பொருட்கள் உராய்வு காரணமாக பற்றி எரிவது மிகக் குறைவு. வடதுருவம் அருகே மணிக்கு 14000 கிமீ  வேகத்தில் மோதியதில் சுமார் 16 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தை உண்டாக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

வித்தியாசமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள் அமெரிக்காவில்.  அங்குள்ள சான்ப்ரான்சிஸ்கோ அகாடமியில் கட்டப்பட்டுள்ள 27 மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் மேலும் கீழும் நகருகின்றன. குடியிருப்பே 360 டிகிரிக்குச் சுழலுகிறது. கீழ் தளத்தில் உள்ளவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மேல் தளத்துக்கு சென்றுவிடுவார்கள். மேல் தளத்தில் உள்ளவர்கள் கீழ்த்தளத்துக்கு வருவார்கள். இதன் மூலம் எல்லோருக்கும் எல்லா தளங்களிலும் வசிக்கும் வாய்ப்பு சமமாகக் கிடைக்கும்  நகரின் நான் கு திசைகளை ரசிக்கவும் முடியும். ஒரே அடுக்குமாடி குடியிருப்புகளில்கூட பணம் படைத்தவர்கள் மிகச் சிறந்த தளத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இந்த ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கும் விதத்தில் புதிய கட்டுமானத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். தைவானைச் சேர்ந்த டிசைனர் ஷின் குவோ என்பவர்

2 thoughts on “நியூ[ஸ்]மார்ட்

Leave a reply to திண்டுக்கல் தனபாலன் Cancel reply