ஆஹா தகவல் 

download

கடந்த நூற்றாண்டுவரை இரு கால்களுக்கும் [ வலது  இடது ] ஒரே மாதிரியான பூட்ஸ்களே இருந்தன.

019-GMRT- Puneஉலகின் மிகப்பெரிய ராட்சத மீட்டர் அலை ரேடியோ டெலஸ்கோப் புனேவுக்கு அருகில் நாராயங்கன் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எல்லாப் பக்கமும் திருப்பக்கூடிய டிஸ்க் ஆன்டெனாக்கள் உள்ளன. பூமியில் நிறுவப்பட்டுள்ள  ரேடியோ டெலஸ்கோப்களிலேயே இது மிகப்பெரியதாகும்.  இதை உருவாக்க 22 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இது அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் உள்ள டெலஸ்கோப்பை விட பல மடங்கு பெரியது.

2008092358010202_424953gசெட்டி நாட்டு அரசர் அண்ணாமலைச் செட்டியாரின் மகன் முத்தைய்யா செட்டியார்தான் இந்தியன்  பேங்கை நிறுவியர். புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தும் பழக்கத்தையும் இவரே ஏற்படுத்தினார். மிகக்குறைந்த வயதில்  [28] சென்னை மேயரானார்.

download (1)அட்டைப்பூச்சி இருபது நிமிடம் ரத்தத்தை உறிஞ்சினால் அதனுடைய எடை ஐந்து மடங்கு அதிகமாகிவிடும். அதற்குப்பிறகு அது ஓராண்டிற்கு எந்த உணவும் சாப்பிட வேண்டியிருக்காது.

download (2)நைஜீரியாவில் அந்த நாட்டு தேசியகீதம் தெரியவில்லை என்றால் பிரம்மச்சாரியாகவே இருந்துவிட வேண்டியதுதான். திருமணப்பதிவாளர் அலுவலத்தில் திருமணத்தைப் பதிவு செய்யும் முன்பாக தம்பதிகள் இருவரும் தேசிய கீதத்தை கட்டாயம் பாட வேண்டும்.

download (4)தென்னாப்பிரிக்க நாட்டிற்கு மூன்ரு தலை நகரங்கள் உண்டு. அரசியல் மற்றும் நீதித்துறை விவகாரங்களுக்கு பிரிட்டேரியாவும் தொழில் துறைக்கு ஜோஹன்னஸ்பர்க் நகரமும்  சுற்றுலா மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக கேப்டவுன் நகரமும் தலை நகரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மூன்று தலை நகரங்களைக் கொண்ட ஒரே நாடு தென்னாப்பிரிக்கா மட்டுமே.

mother-teresaஅன்னை தெரசா தனக்கும் தன் சபைக் கன்னியர்களுக்கும் உடையாக நீலக்கரைப் புடைவையைத் தேர்ந்தெடுத்தார். காரணம் அக்காலத்தில் கொல்கத்தாவில் தெருக்களை சுத்தம் செய்யும் நகராட்சி பெண்கள் அணிந்த புடைவையைப் போன்றதாக இருக்கவேண்டும் என்பதே. அதைப்போலவே தேர்ந்தெடுத்து 1948ம் ஆண்டு ஆகஸ்டு 17ம் நாள் முதன்முதலில் அணிந்தார்.

logoநமது நாட்டில் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நடைபெற்றபோது 82 சமஸ்தானங்கள் தங்களது தபால் சேவைகளை தாங்களே நிர்வகித்து வந்தன. பின் 1837ல் இந்திய தபால் சட்டம் இயற்றப்பட்டதால் அனைத்து சமஸ்தானங்களும் படிப்படியாக பிரிட்டிஷ் அரசின் சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

download (3)ஸ்ரீமத் ராமாயண காவியத்தை எழுதிய வால்மீகி முனிவர் முதலில் சிவனை வணங்கிய பின் தான் ராமாயண காவியம் எழுதினார். இவர் வணங்கிய சிவபெருமான் சென்னை திருவான்மியூரில் மருந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் வால்மீகி முனிவர் தனிசன்னதியில் தெந்திசை பார்த்து வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இவரது பெயராலேயே இத்தலம் திருவான்மியூர் என்று மருவியது.

tender-coconuts-1062401 தொடர்ந்து நாற்பது நாட்களுக்கு இள நீர் பருகி வர நீர்க்கடுப்பு சொறி சிரங்குகள் கொப்புளம் குடல்புண்கள் தீராத வயிற்று போக்கு போன்றவை நீங்கும். இளமையும் ஆண்மையும் பெருகும்.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s