பூனாவுக்கு பெருமை சேர்த்த தமிழர்

பூனாவில் பாலய்யர் என்று சொன்னால் எல்லோரும் மதிப்புடனும் மரியாதையுடனும் அவரை சிலாகித்து பேசுவார்கள். நம் தமிழர்களுக்காக அவர் செய்திருக்கும் தொண்டு போற்றத்தக்கது சுமார்  70-80 வருடங்களுக்கு முன்னால் பூனாவில் அம்மை நோயால் தமிழர்கள் பெரிதும்  அவதிப்பட்டனர். தமிழர்களில் துயரம் தீர்க்க ஆபந்பாந்தவனாக செயல்பட்டார் பாலய்யர். அம்மனின் உக்கிரத்தைத் தணிக்க சீதளாதேவி கோயிலில் பங்குனி சித்திரையில் அபிஷேகம் பூஜை செய்ய முடிவுசெய்தார். அனைவரிடமும் உதவிகள் பெற்று பூஜையை வெற்றிகரமாக முடித்தார். அன்று அவர் தொடங்கிய பூஜை இன்று பத்து நாட்கள் விழாவாக வெகு விமரிசையுடன் நடந்து வருகிறது.

பூனாவில் தமிழர்கள் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் பாலய்யர் தன் சீடர்களுடன் அந்த இடத்திற்கு ஆஜராகிவிடுவார். இறந்தவரின் அந்திம யாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்வார். இப்படி பிரதியுபகாரம் பாராமல் சேவை செய்து வந்த பாலய்யரை தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே பூனா தமிழர்கள் கருதினார்கள்.

பூனாவில் பஜனை மடம் தோன்ற காரணகர்த்தாவாக இருந்தவர் இவர்தான். ஒரு காலத்தில் அங்கு மரத்தடியில் சுயம்புவாக வீற்றிருந்த பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்று தோன்ற பாலய்யருடன் சேர்ந்து ஏ கே மஹாதேவய்யா எம் கே ராமசந்திரய்யா அடாணா பாகவதர் போன்றவர்களின் முயற்சியால் ஒரு கோயில் கட்டப்பட்டது.

100 வருடங்களுக்கு முன்னால் பூனாவில் தமிழ் பள்ளிக்கூடம் கிடையாது. பாலய்யரை போன்ற சில தமிழர்கள் ஒன்று சேர்ந்து சரஸ்வதி வித்யாலயா என்ற ஒரு பள்ளியைத் தோற்றுவித்தார். பாலய்யர் ஒரு தூண் மாதிரி இருந்து இந்தப் பள்ளியை முன்னுக்கு கொண்டுவந்தார். மாற்றலாகி பூனாவிற்கு வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கு இந்தப் பள்ளிக்கூடம் பேருதவியாக இருந்தது.

பாலய்யரின் சமூக சேவையைப் பாராட்டி மகாராஷ்டிர மானில அரசு அவரை கௌரவித்தது. அவரை ஸ்மால் காஸஸ் கோர்ட்டில் ஜூரராக நியமித்தது. பிறகு போர்மென் பதவிக்கு உயர்ந்தார்

நன்றி   இந்திரா ராகவன்   பூனா

Advertisements

One thought on “பூனாவுக்கு பெருமை சேர்த்த தமிழர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s