ஆஹா தகவல்

download

வான ஊர்திகளில் ஹெலிகாப்டருக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அது நின்ற நிலையில் உயரே கிளம்பும் முன்னோக்கி பின்னோக்கி பறக்கும் பக்கவாட்டில் திரும்பும். ஒரே இடத்தில் நின்றபடி இயங்கும். hummingbirdஇதேபோல் ஹம்மிங் பேர்டு எனப்படும் தேன்சிட்டு என்னும் பறவைக்கு இந்த ஆற்றல்கள் உண்டு. அதனால் அதை ஹெலிகாப்டர் பேர்டு என்றும் கூறுவர்.

download (3)பூச்சி வகையைச் சேர்ந்த ஈசலின் ஆயுள் ஒரு நாள் மட்டுமே. அதற்கு ஜீரண உறுப்புக்கள் இல்லை ஆகவே உணவு உட்கொள்ளாது. எளிதில் உதிர்ந்து விடும் இறக்கைகள் உண்டு. ஆனால் பறக்காது. மண் புற்றிலிருந்து கூட்டமாய் கிளம்பும். புதிராய் மறைந்துவிடும் அரிய வகை உயிரினம் இது.

download (1)பூ பூத்ததிலிருந்து காயாகி பழுக்க பத்து மாதங்கள் எடுத்துக்கொள்ளும் பழம் எது தெரியுமா? அது புளியம்பழம்தான்  ஆடிக்காற்றில் தப்பிக்கும் புளியம்பூ பிஞ்சாகி மழையில் விளைந்து பனியில் பருத்து வசந்தத்தில் பழுக்கும்

Temple_de_Mînâkshî0133000 சிற்பங்களை தன்னகத்தே கொண்ட ஒரே கோயில் தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில்தான்.

imagesலண்டனில் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மிகப்பெரிய கோபுரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் கடிகாரம் பிக்பென் கடிகாரம். 1941ல் இரண்டாவது உலகப்போர் நடந்தபோது குண்டுவீச்சில் அருகில் உள்ள பல கட்டிடங்கள் பழுதடைந்தாலும் இந்தக் கடிகாரத்தில் உள்ள கோபுரமும் கடிகாரமும் மட்டும் சேதமடையாமல் துல்லியமாக நேரம் காட்டியது. இந்தக் கடிகாரத்தில் 13 டன் எடையுள்ள ராட்சச மணி பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள முட்களும் எழுத்துக்களும் மிகப் பெரிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

Picture 2816புதுச்சேரி அரசினர் பொது மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறந்த 48 மணி நேரத்திற்குள் பெயர் சூட்டிவிட வேண்டும். குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து அனுப்பும்போது அதன் பெயரை சான்றிதழில் குறித்துவிடுகின்றனர். பெயர் சூட்டுவதற்கு வசதியாக மருத்துவமனையின் நுழைவு வாயிலில் சுமார் 200 தமிழ் பெயர்களை எழுதி வைத்திருக்கிறது தமிழ்ப் பேரவை ஒன்று

download (2)ஸ்ரீ ரங்கத்தில் ரங்க நாதர் ஆலயத்தில் வாகனங்களுக்கும் நைவேத்தியம் செய்கிறார்கள். யானை வாகனத்தி/ர்கு வாழைத்தாரையும் கரும்பையும்  குதிரை வாகனத்திற்கு பாலால் தயாரிக்கப்பட்ட சர்க்கரை பொங்கலை நைவேத்தியம் செய்கிறார்கள்.

singapore4_2061875bஉலகின் மிகப் பெரிய விளையாட்டரங்கம் சிங்கப்பூரில் உள்ள மெரீனாபே கடற்கரையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை நீரிலேயே மிதக்கும்படி வடிவமைத்து இணைத்திருக்கிறார்கள். நீளம் 120 மீட்டர் அகலம்  8.3 மீட்டர் இந்த அரங்கில்  9000 பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்க முடியும்.

tallestindianstatue6சிம்லாவில் 108 அடி உயர அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில்  2455 அடி உயரமுள்ள ஜாகூ மலையில் தேவதாரு மரங்களுக்கு மத்தியில் உள்ள கோயிலில் இந்த அனுமன் சிலை உள்ளது. சிம்லாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இந்த சிலையை தரிசிக்கலாம். தினசரி ஆரத்தி பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை என்று விமரிசையாக நடைபெறுகிறது.

ஓணம் கொண்டாடக் காரணம்!மேகாலயாவில் உள்ள மாலிநாங் ஆசியாவின் சுத்தமான கிராமம் என்ற விருதைப் பெற்றுள்ளது. மூங்கில் வீடு மூங்கில் பாலம் ஆறு தூசி குப்பைகள் இல்லாத சாலை மூங்கிலால் ஆன குப்பைத் தொட்டிகள் என நம்மை வியக்க வைக்கும் விஷயங்கள் இங்கு ஏராளம்.  ஷில்லாங்கில் இருந்து எழுபது கிமீ தூரத்தில் எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் உள்ளது இந்த கிராமம்.

Advertisements

3 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s