விஷயமுள்ள விடுகதை

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?

என்னது இது அர்த்தம் புரியாத அபத்தமான கேள்வி அசட்டுத்தனமாக ஏதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது/ என்றெல்லாம் யோசிக்கிறீங்களா/

உண்மையில் இந்த வினா விஷயபூர்வமானது. மகாவிஷ்ணுவின் மகிமையைச் சொல்வது என்ன ஆச்சர்யமா இருக்கா? இதோ பதிலைத் தெரிஞ்சுக்குங்கஓணம் கொண்டாடக் காரணம்!

தட்டான் அப்படின்னா தட்டாதவன் கொடுத்த வாக்கை மீறாதவன்னு அர்த்தம். சட்டை எதுக்குப் போட்டுக்கறோம்? நெஞ்சை அதாவது மார்பை மறைக்க. குட்டைங்கறதை குறிக்கிற இன்னொரு சொல் வாமனம். அப்போ குட்டைப்பையன்னா வாமனன்.

தட்டான் அரக்க குலத்தவனாக இருந்தாலும் அறநெறி தவறாம யாகங்கள் நடத்தி யார் எதைக்கேட்டாலும் தட்டாம தந்த மகாபலிதான் இங்கே தட்டான் அதாவது தட்டாதவன். அவனுக்கு சட்டை போட்டவர் யார்/ ஈகை   நெஞ்சம்  கொண்ட அவனை ஈன மனதோட தடுத்தாரே அசுரகுரு சுக்ராச்சாரியார் அவர்தான் தட்டானுக்கு சட்டை போட்டவர். அதாவது மூன்றடி இடம் தர்றதா திருமாலுக்கு அவன் தந்த வாக்கை மறுக்கறத்துக்காக மனசை மூடி சட்டைபோட முயற்சி செஞ்சார்.  கமண்டல நீரை தடுக்க வண்டாக மாறி கமண்டலத்தின் மூக்குக்குள்ளே நுழைஞ்சு அடைச்சுக்கிட்டார். வாமனர் அவரிக் கட்டையால அடிச்சது எப்படி? தர்ப்பைப் புல்லுல்  நுனி இல்லாம கொஞ்சம் கனமா இருக்கறதை கட்டைப்புல்லுனு சொல்வாங்க  அப்படி ஒரு புல்லை எடுத்து கமண்டல மூக்கு துவாரத்துல செருகி உள்ளே அடைச்சுகிட்டு இருந்த சுக்ராச்சாரியாரை அடிச்சார் வாமனர் அதுல அசுரகுருவோட ஒரு கண்ணு போயிடுச்சு. அதான் தட்டானுக்கு சட்டைப்போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்  இன்னொரு விஷயம் நல்லமனசோட பிறருக்கு உதவி செய்யறவங்களைத் தடுக்கிறவங்களை தெய்வம் நிச்சயம் தண்டிக்கும்கறதை உணர்த்தறதுதான் இந்த விடுகதை.

நன்றி   பக்தி

Advertisements

One thought on “விஷயமுள்ள விடுகதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s