ஆஹா தகவல்  

download

ஒரு மானிலத்தின் முதல்வராக அதிக காலம் இருந்தவர்  மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு. இவர் 1977 முதல் 2000 வரை தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் ஆட்சி செய்தார். தற்போது சிக்கிம் முதல்வராக உள்ள பவங்குமார் சாம்லிங் 1994 முதல் ஆட்சி செய்து வருகிறார். இவருக்கு 2019 வரை பதிவிக்காலம் உள்ளது.

download (3)கடல் சாமந்தி என்பது ஒரு விலங்கு. பார்க்க சாமந்திப்பூ போல இருக்கும். வெள்ளை பச்சை நீலம் சிவப்பு ஆரஞ்சு எனப் பல நிறங்களில் காணப்படும். மிக வெப்ப மண்டல கடற்கரை ஓரங்களில் இவை வாழ்கின்றன. தமிழ் நாட்டில் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இதைக் காணலாம். விசித்திர தோற்றமுள்ள உயிரினம் இது.

download (2)உலகில் அதிகமான பொருட்களை கண்டு பிடித்து பேடண்ட் ரிஜிஸ்டர் செய்து இருப்பவர் தாமஸ் அல்வா எடிசன். 1069 கண்டுபிடிப்புகளை இவர் ரிஜிஸ்டர் செய்துள்ளார். மின்சாரம் சினிமா புரொஜெக்டர் போன்றவையும் இதில் அடங்கும்.

058459f0932ae30015c01a210037a647கொரியாவில் திருமணச் சடங்கு நடக்கும்போது மணப்பெண் கண்களை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமாம். இதற்கென பிளாஸ்திரி போட்டு ஒட்டி விடுவார்களாம்.

09-1423462931-gold-bars-3தங்கமாகவோ வெள்ளியாகவோ நகைகளாகவோ நாணயங்களாகவோ இல்லாமல் கட்டியான பாளங்களாக இருப்பதற்குப் புல்லியன் என்பது பெயராகும்.

download (6)உலகிலேயே மிக அதிக அளவில் வருமானத்தை தருவது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களே. இவை ஆண்டுக்கு 1691 கோடி  டாலர் வரை வருமானம் தருகின்றன.

download (4) முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி ஒரு முறை ஆர்கன்சாஸ் மானிலத்தின் லிட்டில் ராக் பகுதியிலுள்ள ஒரு பள்ளீக்கு சென்றிருந்தார். அங்குள்ள மாணவர்களைப் பார்த்து “ எதிர்காலத்தில் நீங்கள் யாராக வர விரும்புகிறீர்கள் ?” என்று கேட்டார். அப்போது ஒரு மாணவன் மட்டும் நான் உங்களைப்போலவே அமெரிக்க ஜனாதிபதி ஆவேன் என்றான். அந்த சிறுவன் தான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்ட பில் கிளிண்டன்.

TN_111213171552000000காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பொய்கையாழ்வார். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. முதலின் திருமாலின் பத்து அவதாரங்களையும் பாடியவரும் இவரே.

download (5)அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் சிட்டி யில் அமைந்துள்ள ஹார்லி டேவிட்சன் நிறுவனமே உலகின் அதிவேகமாகச் செல்லக்கூடிய பைக்குகளையும் அதிக விலையுடைய பைக்குகளையும் தயாரித்து வருகிறது. நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை 10 லட்சத்தில் தொடங்கி அதன் மாடல் மற்றும் திறனுக்கேற்ப ரூ இரண்டு கோடி வரை விற்கப்படுகிறது.

download (1)பணம் உடல் உழைப்பு புத்தகம் உணவு துணி ரத்தம் கல்வி என மனிதன் தானம் அளிக்கக்கூடியவை பல உண்டு. தன் உடலிலிருந்து ரத்தத்தைத்தவிர உறுப்பாய் இருப்பவைகளில் ஏழு பாகங்களை அவன் தானமாகத் தர முடிய்ம் . இரண்டு கண்கள்  இரண்டு சிறு நீரகங்கள் கல்லீரல்  கணையம் இதயம் போன்றவற்றை தானமாகக் கொடுக்கமுடியும்/.

Advertisements

One thought on “ஆஹா தகவல்  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s