தாடகை மலை

download

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது தாடகை மலை. ஒரு பெண் தலைவிரிகோலமாக செங்குருதி தோய படுத்திருப்பது போல காட்சி தரும் இந்த மலை ராமாயண காலத்துடன் சம்பந்தப்பட்டது. அரக்கி தாடகையும் அவளது கூட்டத்தினரும் முனிவர்களை யாகம் நடத்த விடாமல் பலவிதங்களில் இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரத மஹாராஜாவிடம் யாகம் இடையூறின்றி நடைபெறுவதற்கு ராம லட்சுமணர்களை சில காலம் தம்முடன் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். தசரதரும் அவர்களை அனுப்பி வைத்தார்.

Thaadagai-200x300செல்லும் வழியிலேயே தாடகை தோன்றி இடையூறு செய்தாள்  அவள் பெண் என்பதால் அவள் மீது கணை தொடுக்க யோசித்தார்  இதைக் கவனித்த விசுவாமித்திரர் ராமனிடம் “ இவள் பெண் அல்ல அரக்கி அவளை வதம் செய்வதால் தர்மம் நிலைத்து நிற்கும் “ என்றார்.

ராமர் தரையில் ஊன்றியிருந்த வில்லை உயர்த்தி நாணேற்றி அம்பு தொடுத்தார். தாடகை வீழ்ந்தாள். ராமர் வில் ஊன்றி இருந்த இடம் “ வில்லுக்கீறி “ என்ரு அழைக்கப்படுகிறது. அம்பு துளைத்து தாடகை வீழந்த இடத்தை திருச்சனம் கோப்பு என்பர்.  திருச்சரம் கோப்பு என்ற பெயர்தான் சிதைந்து திருச்சனம் கோப்பு ஆனது. இதற்கு ஆதாரமாக யாக குண்டங்களும் ராமரின் பாதச் சுவடுகளும் இங்கு காணப்படுகின்றன. தாடகையை வதம் செய்த பாவம் நீங்க ஸ்ரீ ராமர் இவ்வூரில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டார். ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத்தின் பெயர்  ராகேஸ்வரர்.  ராமர் முதன் முதலில் லிங்கம் நிறுவி வழிபட்ட கோயிலை இன்றும் இங்கு தரிசிக்கலாம்.

நன்றி  பொன்மலை  பரிமளம்     திருச்சி

Advertisements

2 thoughts on “தாடகை மலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s