சுயநலவாதி

ramakrishna_seated_midsizencdas

பகவான் ராமகிருஷ்ணரிடம் ஓர் இளைஞன் “ சுவாமி நான் பல சாதனைகள் புரிந்திருக்கிறேன் ஆனாலும்ம் நான் முன்போலவே அஞ்ஞானம் நிறைந்தவனாகவே இருக்கிறேன். என்னைப் போன்றவர்களுக்கு இந்தச் சாதனைகளால் யாதொரு பயனும் இல்லையே “ என்றான்.

அவனைப்பார்த்து புன்முறுவல் பூத்த சுவாமிகள் “ வருஷம் தவறாமல் உழவுத்தொழிலை செய்து வரும் விவசாயி சில வருடங்கள் மழை பெய்யவில்லை என்பதற்காக உழவுத்தொழிலை விட்டு விடுவதில்லை. ஆனால் விவசாயி வம்சத்தில் பிறக்காமல் வியாபாரத்துக்காகப் பயிர்த்தொழில் செய்பவர்கள் ஒரு வருடம் மழையின்றி இழப்பு ஏற்பட்டாலும் அத்தொழிலை விட்டு விடுவார்கள். அவர்கள் சுயநலவாதிகள்.  அதே போல் தன் ஆயுள் முழுவதும் பக்தி செய்தும் கடவுளைக் காணாவிட்டாலும் கூட உண்மையான பக்தன் பகவானின் திரு நாமங்களையும் அவனது மகிமைகளையும் கூறாமல் இருப்பதில்லை. காரியம் ஆவதற்காக மட்டுமே இறைவனை வேண்டுபவர்கள் சுய நலவாதிகள் பயனை எதிர்பார்த்து சாதனைகள் புரிபவர்களும் சுய நலவாதிகளே “ என்றார் ராமகிருஷ்ணர். இளைஞனின் மனதில் தெளிவு பிறந்தது.

நன்றி   கே என் மகாலிங்கம்    பாண்டிச்சேரி

Advertisements

4 thoughts on “சுயநலவாதி

  1. பலனை எதிர்பார்க்காமல் நமது கடமையைச் செய்ய வேண்டும். வெகு எளிமையாக விளக்கிவிட்டார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s