மும்பையின் காவல் தெய்வம்

downloadபம்பாய் என்ற பெயர் மும்பை என மாறுவதற்கு காரணமான மும்பாதேவி இந்த நகரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். மும்பார்க் என்ற அசுரன் இந்த பகுதியில் சக்தி மிக்கவனாக இருந்தான் அவன் பிரம்மனை வணங்கி சாகாவரம் பெற்றான். அதன்பிறகு தேவர்களையும் பூலோக மக்களையும் துன்பப்படுத்தி வந்தான். அனைவரும் விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணுவும் சிவனும் இணைந்து அந்த அரக்கனை அழிக்கத் திட்டமிட்டனர். தங்கள் உடலிலிருந்து ஒரு தேவியை உருவாக்கினர். மும்பார்க்கை வதம் செய்யுமாறு அவளுக்கு உத்தரவிட்டனர். அதன்படியே அம்பிகை மும்பார்க்கை கொன்று அனைவரையும் பாதுகாத்தாள் இதன் காரணமாக இந்த தேவி மும்பாதேவி எனப்பட்டாள்.

T_500_730மும்பை பகுதியிலுள்ள மீனவ இனத்தினர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது இயற்கை சீற்றங்களால் மிகவும் அல்லல்பட்டனர். அதிலிருந்து தங்களைக் காக்க அம்பிகையை வேண்டினர். அதன்பின் இயற்கை சீற்றம் தணிந்தது. இதன்பின் முங்கா என்ற மீனவ இனத்தினர் அம்பிகைக்கு கோயில் எழுப்பினர். மற்றொரு கதையின்படி முங்கா என்பவர் மீனவ பெண்கள் என்றும் தங்கள் கணவர்மார்கல் கடலுக்கு சென்றுவிட்டு நல்லபடியாக திரும்ப அம்பிகையை வேண்டினர்  முங்கா என்ற பெயர் த்ரிந்து மும்பா என மாறியதாகவும் சொல்கிறார்கள். அதற்கேற்ப தேவிக்கும் முங்காதேவி என்றே பெயர் இருந்தது காலப்போக்கில் மும்பாதேவி என மாறிவிட்டது.

OLYMPUS DIGITAL CAMERAதமிழகத்தில் அம்பாளுக்கு சிம்மவாகனம் அளிப்பது வழக்கம். மும்பாதேவி சிவனிடம் இருந்து உருவானதால் அவருக்குரிய ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறாள். அம்பிகையின் முன்பு இரண்டு விளக்குத்தூண்கள் உள்ளன. ஒன்று செங்கல்லாலும் மற்றொன்ரு கல்லாலும் ஆனது. கருவறை வெள்ளை மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. வாசலில் வெள்ளி கவசமிட்ட துவாரபாலகர்கள் உள்ளன்ர். இடையில் ஆங்கிலேயரால் பம்பாய் என வழங்கப்பட்டு இப்போது இந்த அம்பாளின் பெயரால் மும்பையாக மாறிவிட்டது. இந்த தேவிக்கு மராத்திய பெண்கள் அணியும் ஆடை அணிவிக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் மும்பாதேவி கோயில் எஸ்பிளத்டு தீவிலுள்ள பாரிடாலோ என்ற இடத்தில் இருந்தது.  ஒரு காலத்தில் அங்கிருந்த வீடுகள் ஆட்சியாளர்களால் அகற்றப்பட்டன. எனவே கோயிலை கவனிக்க ஆளில்லாமல் போனது.  அதன்பிறகு அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அரசும் புதிய இடத்தில் கோயில் கட்டித்தந்தது.  இந்தக் கோயிலில் அன்னபூரணிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கும் ரிஷப வாகனமே தரப்பட்டுள்ளது.  செவ்வாய்க்கிழமைகளில் அதிக கூட்டம் வரும்.

அம்பிகை சன்னதி முன் நவராத்திரியன்று முதல்  நாள் காலையில் ம்ண்ணால் செய்யப்பட்ட விளக்கை வைக்கின்றனர். நவ தானியங்கள் மற்றும் அரிசியை பரப்புகின்றனர். பானைக்குள் ஐந்து வெற்றிலை பாக்கு செம்புத்தகடு ஒரு காய்ந்த பேரீக்சைபழத்தை போடுகின்றனர். இந்த அமைப்பை காட் ஸ்தாபனா என்று சொல்கிறார்கள்.  நவதானியங்களை தரையில் தூவி தண்ணீர் தெளிக்கின்றனர். முகல் நாள் இரவில் மராத்திய இசைக் கலைஞர்கள் குழல் மற்றும் சாவ்கதா என்ற டிரம்களால் இசை எழுப்புகின்றனர்.

Maa Durgaஏழாம் நாள் அன்று கோயில் முன் சதுரவடிவ குழி தோண்டி சுற்றிலும் செங்கல் அடுக்கி அதில் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய்களைப் போட்டு குறைந்த அளவு தீயில் வெண்ணெய் ஊற்றி எரிக்கின்றனர். இதில் கிடைக்கும் சாம்பலை ஆண்களும் பெண்களும் தங்கள் புருவத்தில் கண் மை போல இட்டுக் கொள்கின்றனர். பத்தாம் நாள் தசரா திரு நாளில் அம்மன் முன் ஆறு அங்குல உயரத்திற்கு வளர்ந்துள்ள நவதானிய செடிகளை வேரோடு பிடுங்கி  படைக்கின்றனர். இதை பக்தர்களுக்கு தருகிறார்கள். பெண்கள் இதை தலையில் சூடிக்கொள்கிறார்கள். ஆண்கள் தலைப்பாகை கட்டி அதில் செருகிக்கொள்கிறார்கள்.

Advertisements

One thought on “மும்பையின் காவல் தெய்வம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s