ஆஹா தகவல் 

download (4)

மொட்டை மாடியில் தோட்டம் போட்டிருந்தால் கீரை பூ மூலிகை செடிகள் காய்கறிகளுக்கு இடையில் ஒரு தொட்டியில் வெங்காயத்தையும் பயிர் பண்ணுங்கள் இதனால் பூச்சிகல் தாக்கம் வெகுவாக குறையும்.

download (1)1973 ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்டின் கூப்பர். செல்போனின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார். மேரி கிறிஸ்துமஸ் என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி  இதை அனுப்பியவர் நீல்பேப்வொர்த்   [டிசம்பர் 22 ]

bal-gangadhar-tilakஅரசியல் பேசக்கூடாது அப்படி மீறிப்பேசுவோர் அந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். என விடுதலைப் போராட்டக்காலத்தில் ஆங்கிலேய அரசு இயற்றியதுதான் வாய்ப்பூட்டு சட்டம். இந்தியாவிலேயே இச்சட்டத்தின்படி கைதாகி சிறை புகுந்தோர் இருவர் மட்டுமே ஒருவர் பாலகங்காதர திலகர். இன்னொருவர் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்.

auditoriumஇந்திய பாதுகாப்புப் படைக்கு ஏற்ற வீரர்களை உருவாக்குவதற்காகத் துவக்கப்பட்ட பள்ளியின் பெயர் சைனிக் ஸ்கூல்  இந்தியாவில் 18 இடங்களில் கெயல்படும் இப்பள்ளி தமிழ் நாட்டில் உடுமலைப்பேட்டைக்கு அருகே உள்ள அமராவதியில் உள்ளது.

images (2)அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிலும் இத்தாலியிலும் புறாக்களுக்கு உணவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

download (3)ஆசியாவிலேயே மிகப் பழமையான கல்லூரி கிண்டி பொறியியல் கல்லூரிதான்  இக்கல்லூரி கவர்மென்ட் சர்வே ஸ்கூல் என்ற பெயரில் 1794ல் ஆரம்பிக்கப்பட்டது.

downloadகடிதம் எழுதும்போது முகவரியில் குறிப்பிடும் பின் கோடு எண்ணின் முதல் எண் மானிலத்தையும் இரண்டாவது எண் துணைப்பகுதியையும் மூன்றாவது எண் மாவட்டத்தையும் கடைசி மூன்று எண்கள் தபால் நிலையங்களையும் குறிப்பிடுகின்றன. பின் கோடு என்பது போஸ்டல் இன்டெக்ஸ் நம்பர் கோடு ஆகும். 1972 ஆம் ஆண்டு முதல் இம்முறை அமலுக்கு வந்தது.

download (2)1954 ல் சாகித்ய அகாதெமி விருதுகள் தொடங்கப்பட்டன. ஆண்டு தோறும் சிறந்த எழுத்தாளர்களுக்காக வழங்கப்படும் இவிருதை இதுவரை ராஜம் கிருஷ்ணன் [ வேருக்கு நீர் ] லக்ஷ்மி திரிபுரசுந்தரி [ ஒரு காவிரியைப் போல ] மற்றும் திலகவதி [ கல்மரம் ] ஆகிய தமிழ் பெண் எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s