ஆண்டவன் உலகத்தின் முதலாளி

download

வயலுக்குச் செல்லும் வழியில் குளக்கரை பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு செல்வான் வேலு. விவசாயத்திற்கு ஏற்றது போல மழையோ வெயிலோ எப்போதும் இருப்பதில்லை என்பது உலகம் முழுமைக்கும் பொதுவான விதிதான். இருந்தாலும் அவன் “ பிள்ளையாரப்பா ஒரேடியா வெயில் அடிக்குது  வேண்டாத நேரத்தில் காத்தடிக்குது   நேரங்கெட்ட நேரத்தில் மழை பெய்யுது. விவசாயம் செய்யவே முடியமாட்டேங்குது “ என்று வருத்தப்பட்டு வணங்குவான். அவன் தினமும் இப்படி பிரார்த்திப்பதைக் கேட்ட பிள்ளையார் ஒரு நாள் அவன் முன் வந்தே விட்டார்.

வேலு அவரிடம் “ சுவாமி என்னைப்போல ஒரு விவசாயிக்கு தான் எப்ப வெயிலடிக்கணும்  எப்ப மழை பெய்யணுங்கற விவரம் நல்லா தெரியும். உங்களைப்போல தேவலோகத்தில் இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி விஷயத்திலே அனுபவமில்லே” என்றான். பிள்ளையாரும் “ நீ சொல்றது உண்மைதான். இன்று முதல் மழை காற்று வெயில் தேவதைகள் எல்லாமே உன் கட்டுப்பாட்டில் இருக்கட்டும். நீ நினைச்சபடியே வேலை வாங்கிக்கொள்.” என்று வரம் அளித்தார்.

இனிமேல் மனம் போல வேலை வாங்கி நிறைய மகசூல் அடையலாம் என்று வேலு மனதில் சந்தோஷம் கொண்டான். காலையில் எழுந்ததும் வானத்தை நோக்கினான். “ மழையே இப்போதே பெய்” என்று ஆணையிட்டான். என்ன ஆச்சர்யம்? பிள்ளையார் அளித்த வரத்தின் படியே நடந்தது. வானில் கருமேகம் கூடியது. மழை கொட்டத்தொடங்கியது. வயலுக்குச் செல்ல ஆயத்தமானான். கலப்பையுடன் வாசலுக்கு வந்தான். “ மழையே இப்போது நிற்கலாம்” என்றான். மழையும் நின்றது. ஈரமான வயலை கலப்பையால் உழத்தொடங்கினான். காற்றை  அழைத்து சீராக வீசச் செய்து விதைகளை தூவினான். மழை வெயில் காற்று என எல்லாம் அவன் கட்டளைக்கு கீழ்படிந்து நடந்தன.

images (1)பயிர்கள் பச்சைப்பசேல் என வளர்ந்து நின்றன. காற்றில் பயிர்கள் நர்த்தனம் செய்வதைக் கண்டு மகிழ்ந்தான். அறுவடை காலம் வந்துவிட்டது.

வேலு பயிரை அறுக்கத்தொடங்கினான். அதில் தானியம் இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனான், வேலுவிற்கு கண்ணீர் வந்தது. குளக்கரைக்கு ஓடினான். அங்கு பிள்ளையார் சிவனே என அமர்ந்திருந்தார். அப்பனே என அவரது காலில் விழுந்து அழத் தொடங்கினான். “ மழை காற்று வெயில் எல்லாமே தகுந்த நேரத்தில் இருந்தும் பயிர்கள் எல்லாம் தானியங்களைத் தரவில்லையே என் உழைப்பு வீணாகி விட்டதே ஏன்? “ என்றான். இப்போதும் பிள்ளையார் புன்முறுவல் பூத்தபடி அவன் முன் தோன்றினார்.

images“ வேலு என் கட்டுப்பாட்டில் அவை இருந்தபோது இயற்கை சீற்றங்கள் ஏன் நிகழ்ந்தன என்று நீ யோசிக்கவில்லை. நிலம் நன்றாக விளைந்து வருமானம் செழித்தபோது உலக மக்கள் என்னை நினைத்துப்பார்த்தார்களா? எல்லாம் அவரவர் திறமையால் வந்ததாக மார்தட்டிக்கொண்டனர். இறைவனாகிய நான் வகுத்த சட்டதிட்டங்கலை மறந்து பணம் தந்த மமதையால் தேவையில்லாத கெட்ட வழக்கங்களில் ஈடுபட்டார்கள். அதில் நீயும் அடக்கம். அது மட்டுமல்ல வாழ்வில் போராட்டமெ இல்லாவிட்டால் ஏது ருசி? சோம்பேறித்தனம் தான் மேலிடும். எனவே தான் இயற்கையை என் கட்டுப்பாட்டில் வைத்து மக்கள் அட்டூழியம் செய்யும் போது பூகம்பம் புயல் முதலான சீற்றங்களை தருகிறேன். அந்த சமயத்தில் நீங்கள் பயத்தில் என்னை சரணடைகிறீர்கள் அதனால் தான்  நான் உலகின் முதலாளியாக இருக்கிறேன் புரிகிறதா?” என்றார். பதில் சொல்ல முடியாத வேலு தலை குனிந்தான்.

Advertisements

3 thoughts on “ஆண்டவன் உலகத்தின் முதலாளி

 1. வணக்கம்
  அம்மா.
  உண்மைதான் எமக்கு துன்பம் வரும் போதுதான் இறைவனை நாடுவோம்… இறைவன் சொன்னதும் சரிதான் அம்மா. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s