வெய்யிலை மறக்கவைத்த வன அழகு

DSC06919

வெய்யில் காலம் முழுவதும் எங்குமே சுற்றுலா செல்ல வேண்டாம் என நினைத்திருந்தும் நேற்று விடிகாலை திடீரென கிளம்பி  ஹைதிராபாத்திலிருந்து  60 கிமீ தூரத்திலுள்ள நாச்சாரம் குட்டா என்ற இடத்திற்கு என் பிள்ளை அவனது இரு நண்பர்கள் என கிளம்பினோம். ஒன்பது மணி வரை அதிகம் வெய்யில் இல்லை. பிறகு சூடு பிடிக்க ஆரம்பித்தது.  ஒன்பது மணிக்கு வழியில் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.DSC06950

நெடுச்சாலைவழியாக சென்று நரசிம்மர் கோயிலை அடைந்தோம் அது ஒரு குடைவரை கோயில்  கோபுரத்தைப்பார்த்தேலே தெரியும்.  பாறைகளைக் குடைந்து எழுப்பப்பட்ட கோயில் நாங்கள் போனபோது சுவாமிக்கு கல்யாண உற்சவம் நடந்து கொண்டிருந்தது.  சின்ன ஊரானாலும் நல்ல கூட்டம். ஆனால் திவ்யமான தரிசனம்.

பத்து படிகள் ஏறி மேலே போனால் சுற்றிலும் கண்ணுக்கெட்டியதூரம் வரை பசுமை நிறைந்த வயல்களும் பாறைகளுமே காணப்பட்டன.  அந்த வெய்யிலிலும் கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தன. இதை நகரத்தில் பார்க்கமுடியாதே?DSC07015

வழிமுழுவதும் நரசாப்பூர் காடுகள் தான்.  இரு மருங்கிலும் அந்த காலத்தில் மாமன்னன் அசோகர் நட்டதுபோல் வானளாவிய மரங்கள்.  அதில் முழுவதும் நமது மூதாதையர்கள் [ அதாவது குரங்குகள் ]  இயற்கை நமக்கு ஒரு வரம்  பயணத்தில் அலுப்பே தெரியாமல் இயற்கையை ரசித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி பொந்தப்பள்ளி எனும் சிற்றூரில் உள்ள வீரபத்ர சுவாமியை தரிசிக்க கிளம்பினோம். மீண்டும் வழி முழுவதும் அடர்ந்த காடுகள். தூரத்தில் தென்படும் மான்கள்.  பல விதமான பட்சிகள் அவற்றின் ஓயாத கூவல்கள். மனதிற்கு மிக இதமாக இருந்தது.  வழியில் தங்கி காரிலேயே அமர்ந்து எடுத்துச் சென்ற சித்ரான்னங்களை ஆர அமர சாப்பிட்டு முடித்து  சுவாமியைப் பார்க்க கிளம்பினோம்.

DSC07050a

வீர பத்ர சுவாமி  இங்கு சிவன் லிங்க ரூபத்தில் இல்லாமல் மீசையுடன் கூடிய சிவரூபமாக காட்சியளிக்கிறார்.  வெளியே நந்தி  வெகு அழகு.  38 டிகிரி வெய்யிலையும் மறக்கவைத்த வன அழகு பிரம்மிக்கவைத்தது.DSC07083

எல்லாவற்றையும் கண்டு களித்து சுமார் மூன்று மணி அளவில் வழியில் இருக்கும் எனது பெரிய பெண்ணின் வீட்டிற்கு வந்தோம்  சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டபின் மாலை சுமார் ஆறு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

DSC07072

Advertisements

One thought on “வெய்யிலை மறக்கவைத்த வன அழகு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s