வாசவி ஜயந்தி

download

ஆந்திர மானிலம் பஸ்ஸிம் கோதாவரி மாவட்டத்திலுள்ள பெனுகொண்டா பட்டினம்  நகரேஸ்வரர் ஜனார்த்தனர் போன்ற ஆலயங்கள் நிறைந்த அழகிய ஊராகும். அவ்வூரில் குசுமசெட்டி குசுமாம்பா தம்பதியினர் புத்திரபாக்கியம் வேண்டி யாகம் செய்தனர்.  வசந்த ருதுவில் வைசாக சுத்ததசமி வெள்ளிக்கிழமை மகம் நட்சத்திரத்தில் எல்லா கிரஹங்களும் உச்சஸ்தானத்தில் இருக்கையில் அன்னை பராசக்தியே பூவுலகில் ஸ்ரீ வாசவியாக அவதரித்தாள் அன்னை பார்வதி அவதரித்த திரு  நாளே ஸ்ரீ வாசவி ஜயந்து அவரது காலம் கிபி 1015 முதல் 1026 வரை அன்னை பார்வதியின் அம்சமான வாசவி அழகிலும் அறிவிலும் மிகச்சிறந்து விளங்கினாள் தன் குலகுரு பாஸ்கராச்சாரியரே வியந்து பாராட்டும் விதமாக சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்தாள்.

வாசவி வளர்ந்து வாழ்ந்த காலத்தில் கீழை சாளுக்கிய வேந்தன் ஏழாம் விஷ்ணுவர்த்தன் இராஜமகேந்திவரத்தை தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். தன் வலிமையைக் காட்ட திக்விஜய்ம் மேற்கொண்டு சென்ற இடமெல்லாம் வெற்றிவாகை சூடினான். வெற்றிக்களிப்புடன் பெனுகொண்டா நகர் வந்து குசுமசெட்டி வீட்டில் விருந்துண்டான். பெண்மையின் இலக்கணமாய் பேரழகு பெட்டகமாய் விளங்கும் வாசவியைக் கண்டதும் மையல் கொண்டான். திருமணம் செய்து கொள்ள விரும்பி அமைச்சரை தூதனுப்பினார்ன். பெனுகொண்டா மக்கள் பேதலித்துப்போயினர். அரசனுக்கு பெண் தரலாம் என ஒரு சாராரும்  அரசனே ஆனாலும் அன்னியனுக்கு குலக்கொழுந்தை மணமுடிக்கக்கூடாது என ஒரு சாராரும் வாதிட்டனர். இதற்கிடையில் மன்னன் விஷ்ணுவர்த்தன் தன் சேனையுடன் பெனுகொண்டா நோக்கிப் புறப்பட்டான். ஊர் மக்கள் கலங்கினர். குசுமசெட்டி செய்வதறியாது திகைத்தார்.

வாசவி உயிரைவிட குலமானம் பெரிது எனவே நான் அக்னிப்பிரவேசம் செய்ய உள்ளேன் என்றதும் தாய் தந்தையர் துடித்துப் போயினர். இதைக் கண்ட அவள் “ தந்தையே நான் பார்வதியின் அம்சம் உலகத்து மானிடர் யாரையும் மணாளனாக ஏற்றுக்கொள்ள முடியாதவள் அதனால்தானே எனக்கு கன்யகா என்ற இன்னொரு பெயரும் உள்ளது. அக்னிப்பிரவேசம் பற்றி கலங்காதீர்கள் “ என எடுத்தியம்பினாள்.

குசுமசெட்டி அமைதி அடைந்து அக்னிப்பிரவேதத்துக்கு யாகக் குண்டங்களை அமைக்குமாறு ஆணையிட்டார். அரசனின் படை பெனு கொண்டாவை நெருங்கியது. வாசவிக்கு அலங்காரங்கள் செய்ய்ப்பட்டன. இத்தனை அழகுள்ள கன்னிகையை அக்னிக்கு அர்ப்பணம் செய்வதை எண்ணி அனைவரும் கலங்கினர். வாசவியுடன் அவள் பெற்றோரும் அரசனுக்கு பெண் தரக்கூடாது எனக் கூறிய ஒரு சாராரும் அக்னிகுண்டத்தில் இறங்கி தம் ஜீவனை ஆத்மார்ப்பணம் செய்தனர். எங்கும் அழுகுரல் ஆணவத்தால் பெண்ணாசையால் மதியிழந்த மன்னன் விஷ்ணுவர்த்தன் தலை சுக்கு நூறாக வெடித்தது.

அன்னை வாசவி அக்னியிலிருந்து ஸ்ரீகன்யகா பரமேஸ்வரியாய் விசுவரூபம் காட்டி வைசியதர்மத்தை போதித்து சிவபெருமானுடன் ஐக்கியமானாள். ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்து காட்டிய இராமனிப் போல் அன்னை பார்வதி வாசவியாக அவதரித்து பூமிக்கு வந்தாள். பெனுகொண்டாவில் அழகிய ஆலயம் அன்னைக்கு அமைந்துள்ளது. உலகெங்கும் பல்வேறு ஆலயங்கள் அன்னைக்கு எழுப்பப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் உறையும் அன்னையின் அருட்கோலத்தை காண மெய் சிலிர்க்கும். ஸ்ரீ வாசவி ஜயந்தி அன்று [28-04-2015 ] அன்னையை தரிசித்து வாழ்வில் நலமும் வளமும் பெறுவோம்.

நன்றி  அருண்  தர்மபுரி

Advertisements

One thought on “வாசவி ஜயந்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s