ஆஹா தகவல்

hippocampus-clipart-postbox

உலகத்தை ஒரு ரவுண்டு சுற்றி வந்தால் எல்லா நிற தபால் பெட்டிகளையும் பார்த்துவிடலாம். சீனா ஹாங்காங் தைவான் அயர்லாந்து பச்சை நிறம்.  ஜெர்மனி இத்தாலி சுவீடன் ரஷ்யா நீல நிறம். ஆஸ்திரேலியா பிரேசில் கிரீஸ் மலேசியா நார்வே மஞ்சள் நிறம். அர்ஜெண்டினா கனடா இந்தியா ஜப்பான் பெல்ஜியம் சிவப்பு நிறம். இந்தோனேஷியா நெதர்லாந்து ஆரஞ்சு நிறம்  சான்மரினோ வெள்ளை நிறம். பிலிப்பைன்ஸ்  சாம்பல் நிறம்.

downloadபறவை இனத்தில் மிகவும் பெரியது நெருப்புக்கோழி  இது 72 கிமீ வேகத்தில் ஓடக்கூடியது. அதிக எடை காரணமாக இதனால் பறக்க முடியாது. உலகிலேயே பெரிய முட்டையிடும் பறவையும் இதுதான். இதன் முட்டை கோழி முட்டையைவிட 18 மடங்கும்  வாத்து முட்டையைவிட பத்து மடங்கும் குருவி முட்டையை விட நூறு மடங்கும் பெரியது.

extra_1300742006-BBN-ITSNAKE-2009பரமபதம் விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டில் ஞானதேவ் என்ற கவிஞர் கண்டுபிடித்தார். இந்த விளையாட்டில் ஏணிகள் ஒழுக்கத்தையும் பாம்புகள் ஒழுக்கமின்மையையும் குறிக்கின்றன.

download (1)உலகின் முதல் கோடீஸ்வரர் பெட் ரோலிய பொருள் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கரான ஜான் டி ராக்பெல்லர். 1916ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி உலகின் முதல் கோடீஸ்வரர் என்று அவர் அறிவிக்கப்பட்டார்.

download (2)ஒரு யானையால் ஒரே சமயம் ஐந்து டன் எடையைத் தூக்கமுடியும். யானை நின்றுகொண்டே தூங்கக்கூடியது. அதன் தலையும் துதிக்கையும் அசையாமல் இருப்பதையும் துதிக்கையின்  நுனி தரையை தொட்டுக்கொண்டிருப்பதையும் வைத்து யானை நின்ரு கொண்டே உறங்குகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

download (3)மாங்காய் சாப்பிட்டு ஜீரணமாகவில்லை என்றால் அதற்கு பால் அருந்துங்கள்  நெய் சாப்பிட்டு ஜீரணமாகவில்லை என்றால் அதற்கு எலுமிச்சம் சாறு அருந்துங்கள். வாழைப்பழம் சாப்பிட்டு ஜீரணமாகவில்லை என்றால் அதற்கு உப்பு சாப்பிடுங்கள். ரொட்டி பலகாரம் சாப்பிட்டு ஜீரணமாகவில்லை என்றால் அதற்கு வென்னீர் குடியுங்கள். பால் சாப்பிட்டு ஜீரணமாகவில்லை என்றால் அதற்கு நீர் மோர் அருந்துங்கள். பலாப்பழம் சாப்பிட்டு ஜீரணமாகவில்லை என்றால் அதற்கு வாழைப்பழம் சாப்பிடுங்கள். தேங்காய் சாப்பிட்டு ஜீரணமாகவில்லை என்றால் அதற்கு சோறு சாப்பிடுங்கள்

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s