ஆஹா தகவல்

Parachute_(PSF)

பாரா மற்றும் சூட் என்ற இரு வார்த்தைகளின் கூட்டுச்சொல் தான் பாராசூட். இதன் பொருள் விழுவதில் இருந்து காப்பது   முதன்முதலில் பாராசூட்டை வரைந்து உலகிற்கு காட்டியவர் லியர்னோடோ டாவின்சி. 1783 ல் ப்ரெஞ்சு வேதியல் வல்லுனர் லூயி லெனார்மென்ட் என்பவர் நவீன பாராசூட்டை கண்டுபிடித்து அதனி பயன்படுத்தி குதித்தும் காட்டினார்.

Hanuman-Paritalaஆந்திர மானிலம் விஜயவாடா ஹைதிராபாத் நெடுஞ்சாலையில் விஜயவாடாவிலிருந்து சுமார் 10 கிமீ தூரத்திலுள்ள பரித்தாலா என்ற ஊரில் சாலையோரத்தில் ஆஞ்சனேயர் சிலை ஒன்று உள்ளது. 135 அடி உயரமுள்ள இந்த ஆஞ்சனேயரை மேலே ஏறிச்சென்று தரிசிக்க இரண்டு பக்கமும் படிகள் உள்ளன. ஆஞ்சனேயர் தவிர சிவன் ராமர் சன்னதிகளும் இங்கு உண்டு. கோயிலைச் சுற்றி அழகான பூங்காவும் உள்ளது.

imagesஉலகில்மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படமாக இது வரை லியனார்டோ டாவின்ஸி வரைந்த மோனலிசா ஓவியம் இருந்து வந்தது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 2002 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பீ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முகப்பு லால்பேப்பர் படமான பிளிஸ் [bliss ] இச்சாதனையை முறியடித்துள்ளது. இந்தப்படம் நேஷனல் ஜியாகிரஃபிக் சேனலின் முன்னாள் ஊழியர் சார்லஸ் ஓரி என்பவரால் கலிபோர்னியாவின் நாப்பா பள்ளத்தாக்குக்கு அருகே எடுக்கப்பட்டது உலகில் அதிக தடவைகள் பார்க்கப்பட்ட படமாக இது மாறி உள்ளது.

suryaசூரியனுடைய ரதத்தை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வதாக நமது சாஸ்திர நம்பிக்கை அந்த ஏழு குதிரைகளின் பெயர் காயத்ரி – ப்ருஹ்தி – உஷ்னிக்  -ஜகதி- திருஷ்டுப்- அனுஷ்டுப் பக்த்தி எனப்தாகும் இதையொட்டியே வாரத்துக்கு ஏழு நாட்களை ஏற்படுத்தினர்.-

downloadஜப்பானில் குழந்தைகள் தீராத நோய் வாய்ப்பட்டிருப்பின் நோய் நீங்கிடப் பெற்றோர்கள் ஓராண்டு முழுவதும் உப்புணவு உண்பதில்லை என்றும் தேனீர் அருந்துவதில்லை என்றும் புத்தர் பெருமானிடம் பிரார்த்தித்துக்கொள்வார்களாம்.

download (1)கோயில்களில் பொதுவாக சிவப்பு அல்லது அரக்கு நிறத்தில் மட்டுமே குங்குமம் தருகிறார்கள் ஆனால் வண்டலூர் ரத்தினமங்கலம் என்ற இடத்தில் உள்ள லக்ஷ்மி குபேரர் கோயிலில் பச்சை நிறத்தில் தான் குங்குமம் கொடுக்கிறார்கள். புதன் கிரகத்தின் நிறமான பச்சை நிறம்தான் காரணமாம்..

49984Birds_fullஇந்தியாவில் 735 பறவை இனங்கள் இருப்பதாக ஓர் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 325 பறவை இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 383 பறவை இனங்களுடன் உத்தரகாண்ட் மானிலம் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழ் நாடு.

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s