ஆஹா தகவல் 

download

திருக்சியிலுள்ள கல்லணைதான் இந்தியாவின் மிகப்பழமையான கல்லணையாகும். கரிகாலனால் இலங்கையிலிருந்து பிடித்து வரப்பட்ட சிங்கள சிப்பாய்கள்தான் இதைக் கட்ட உதவினர்.

download (1)இலங்கையில் உள்ள கண்டி கதிர்காமம் முருகன் பெயருக்கு செக் எழுதி உண்டியலில் செலுத்தினால் அது செல்லுபடியாகும்.

ஜெகந்நாதர் எழுந்தருளும் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனி மாதத்தில் ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் மூன்று தேர்கள் பவனி வரும்

download (2)ஜெகந்நாதர் எழுந்தருளும் பெரிய தேர் 16 சக்கரங்களைக் கொண்டது. பாலபத்திரரின் தேர் 14 சக்கரங்கள் கொண்டது. சுபத்திரையின் தேர் 12 சக்கரங்களுடன் கூடியது. இந்த தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகச் செய்யப்படும். தேரோட்டம் முடிந்ததும் தேர் முழுவதும் பிரிக்கப்பட்டு பூரி கோயில் மடப்பள்ளியில் எரிக்கப்படும்.

download (6)தென் காசியில் அமைந்துள்ள குற்றால நீர்வீழ்ச்சிகளில் நீராடிய பின் குற்றால நாதரையும் குழல்வாய் மொழியம்மையையும் வழிபடுவதால் சுகமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. குற்றால நாதர் திருக்கோயிலுக்கு ஐந்து வாயில்கள் உள்ளன. சங்கு வடிவிலான இக்கோயில் வடக்கு வாயிலை பிரதானமாகக் கொண்டது. நான்கு வேதங்கள் நான்கு வாயில்களாகவும் இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது.

5709448275_525f208b24_zசுவிட்சர்லாந்து நாட்டில் குழந்தை பிறந்ததும் தந்தை எந்தப் பொருளை முதன்முதலில் பார்க்கிறாரோ அந்தப் பொருளின் பெயரே குழந்தைக்கு சூட்டப்படுகிறது.

download (3)சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது பெரிய பள்ளிவாசல். பெயருக்கேற்றவாறு இந்தியாவிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல் இது. இதன் உள்ளே 2000 பேர்களும் வெளிவளாகத்தில் 5000 பேர்களும் ஒரே சமயத்தில் அமர்ந்து தொழுகை செய்யலாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கர்னாடக நவாப்பால் கட்டப்பட்டது  இப்பொழுதும் நவாப் பரம்பரையினரிடம்தான் இதன் நிர்வாகம் உள்ளது.

shiva-ayyadurதமிழ் நாட்டில் ராஜபாளையம் அருகில் முகவூர் என்னும் கிராமத்தில் பிறந்து இன்று அமெரிக்காவில் வசித்துவரும் சிவா அய்யாதுரைதான் இ மெயிலை கண்டு பிடித்து 1982 ல் காப்புரிமை பெற்றார். அமெரிக்காவில் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் பல அரிய கண்டுபிடிப்புக்கள் வரிசையில் இவரது இ மெயில் கண்டுபிடிப்பையும் ஆவணப்படுத்தி கௌரவித்துள்ளது.

download (4)கோதுமையின் தாயகம் இத்தாலி வெற்றிலையின் தாயகம் மலேசியா வெங்காயத்தின் தாயகம் எகிப்து  உருளைக்கிழங்கின் தாயகம் பெரு  வாழையின் தாயகம் இந்தியா  சூரியகாந்தியின் தாயகம் வட அமெரிக்கா முந்திரியின் தாயகம் பிரேசில்

stk145428rkeகியூபா  நாட்டில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தை  வழியில் நிறுத்தி யாராவது லிப்ட் கேட்டால் வாகனத்தில் இடமிருந்தால் அவசியம் அவரை ஏற்றிச் செல்லவேண்டும். மறுக்கக்கூடாது காரணம் லிப்ட் கேட்டவர் புகார் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

download (7) நாய்கள் மோப்ப சக்தி மிக்கவை என்பதால்தான் அவற்றை காவல் துறையினர் துப்பறியும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள்  தென்னாப்பிரிக்காவில் டாபர்மேன் வகை போலீஸ் நாய் ஒன்று 1925ல் ஒரு திருடனை மோப்பம் பிடித்தபடி 160 கிமீ பயணித்ததாம்.

Advertisements

One thought on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s