கிருஷ்ணன் ஏன் அழுதான்?

padmaviyukam

பத்மவியூகத்துக்குள் புகுந்து விட்டான் அபிமன்யு. தன் தாய் சுபத்திரையின்  கர்ப்பத்திலிருந்தபோது பொதுவான போர் முறைகளையும் அதில் பத்மவியூக தந்திரத்தையும் கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டபடி இருந்தான் அபிமன்யு. ஆனால் அந்த வியூகத்திலிருந்து வெளியே வரும் உத்தியை கிருஷ்ணன் சொல்ல ஆரம்பித்தபோது திரௌபதி அங்கிருந்து ஏதோ வேலையாக எழுந்து போய்விட்டாள்.   ஆகவே தப்பிக்கும் சூட்சமத்தை அவன் அறியவில்லை. அதனாலேயே அவனை துரியோதன படைகள் எளிதாகக் கொன்று விட்டன. மகன் இறந்த செய்தி கேட்ட அர்ஜூனன் புத்திரசோகம் தாங்காமல் கதறினான். அருகிலிருந்தபடியே அதைப் பார்த்த கிருஷ்ணன். அர்ஜூனனைவிட பெரிதாகக் குரலெடுத்து அழுதான்.

இது என்ன வேடிக்கை? பரமாத்மா கிருஷ்ணன் ஏன் அழவேண்டும்? தான் கூடுதலாக அழுதால் அர்ஜூனன் அந்த ஆறுதலில் மனம் அமைதியடைவான் என்று எண்ணினானோ?

0702_arjunkrishnaஇது எப்படி இருக்கிறதென்றால் தன் பர்ஸிலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் திருட்டு போய்விட்டதே என்று ஒருவன் கதறினானாம் உடனே பக்கத்திலிருந்தவன் “ என் பர்ஸிலிருந்தும்தான் பத்தாயிரம் ரூபாய் களவு போய்விட்டது  நான் கவலைபடுகிறேனா பார் “ என்றானாம். அட தன் துக்கத்தைவிட இவனுடையது பெரிதாக இருக்கிறதே என முதலாமவன் கொஞ்சம் ஆறுதலடைந்தானாம். இப்படித்தான் இருக்கிறது கிருஷ்ணன் அழுததும்.  ஆனால் உண்மை காரணம் என்ன தெரியுமா? “ இந்த இழப்புக்காக அழும் உனக்குப் போய் மன ஒருநிலைப்பாடு துன்பம் இன்பம் இரண்டையும் ஒன்று போல் பாவிக்கும் மனப்பக்குவம் என்று கீதையை உபதேசித்தேனே” என்ற் நினைத்து அதற்காக அழுதானாம் கிருஷ்ணன்.

4 thoughts on “கிருஷ்ணன் ஏன் அழுதான்?

 1. வணக்கம்
  அம்மா.
  அருமையாக கதை பகிர்வுக்கு நன்றி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015:  

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s