ஆஹா தகவல் 

Trans-Australian-Railwayஉலகின் மிக நீளமான நேரான ரயில் பாதை ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதன் நீளம் 478 கிமீ  இந்தப் பாதையில் எங்கும் வளைவுகளைக் காண முடியாது. பரந்த மணற்பாங்கான சமவெளியில் இந்தப் பாதை அமைந்துள்ளது. இது மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு மானிலங்களை இணைக்கிறது.

downloadதண்ணீரை உறிஞ்சிக்குடிக்கும் பறவை புறா மட்டும்தான். மற்ற பறவைகள் அனைத்தும் தலையை அண்ணாந்துதான் தண்ணீரை விழுங்கும்.

குமரி மாவட்டத்தில் பத்ம நாபபுரம் என்னும் இடத்தில் வேணாட்டு அரசர்களின் நினைவுச் சின்னமான அரண்மனை உள்ளது. அதில் 64 மூலிகை மரங்களால் செய்த கட்டில் இரண்டாயிரம் பேர் ஓரே நேரத்தில் அமர்ந்து உணவு அருந்தும் சாப்பாட்டு அறை [ REFECTORY ]  ஆகியவை இருப்பதை இன்றும் காணலாம்.

download (3)நாம் மிகவும் விரும்பி சாப்பிடுகின்ற வாழைப்பழத்திற்கு விஞ்ஞான பெயர் மூச செபியாண்டம். இதன் அர்த்தம்  புத்திசாலிகள் சாப்பிடும் பழம்.

7காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ். இவர் 2002ல்  மான்செஸ்டரில் நடைபெற்ற மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

download (4)நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க 2857 மணி 8 நிமிடம் 3 வினாடி எடுத்துக்கொள்கிறது. இது ஓராண்டு முழுவதும் தொடர்ந்து சென்றால் 3 மைல் தூரத்தைக் கடக்கும்.

download (1)அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா சுத்த சைவம். அவர் யாரை சந்தித்தாலும் சைவ உணவையே பரிந்துரை செய்வது வழக்கம். ஒரு முறை அவரது நண்பர் ஒருவர் ‘ நீங்கள் ஏன் சைவ உணவை மட்டுமே விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டதுக்கு ‘ என் வயிறு இறந்த மிருகங்களின் சுடுகாடு அல்ல “ என்றார்.

BeyondProfits_Gitai-Mandir_03மஹாராஷ்டிராவிலுள்ள வார்தா நகருக்கு அருகில் சிலையும் கூரையும் இன்றி ஒரு கோயில் இருக்கிறது. இதை கீதைக் கோயில் என்று அழைக்கிறார்கள். இங்கு 700 பளிங்குக் கற்களில் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள சுலோகங்களை மராத்திய மொழியில் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

download (3)அதிகமான  நாடுகளின் எல்லையைத் தொடும் நாடு சீனாதான்.  இந்தியா  பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தஜிகிஸ்தான்  கஸகஸ்தான் வடகொரியா லாவோஸ் மங்கோலியா வியட்நாம் மியான்மர் பூடான்  ரஷ்யா மற்றும் நேபாளம் என மொத்தம் 14 நாடுகளின் எல்லையைத் தொடுகிறது.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s