கொள்ளை அழகு ‘ கொய்காலி ‘

nimpith

கொல்கத்தாவிலிருந்து சுமார் 90 கிமீ தூரத்தில் உள்ளது சின்னஞ்சிறு கிராமம் கொய்காலி.  நிம்பித் மற்றும் கொய்காலி ஆகிய இரண்டு இடங்களிலுமே ஸ்ரீ இராம கிருஷ்ணர் ஆசிரமம் உள்ளது.  மேற்குவங்க அரசின் முதலீடு ஆசிரம மேற்பார்வை உழைப்பு ஆகியவை சாலையின் நேர்த்தியில் பளிச்சிடுகிறது. கொய்காலியில் முன் அனுமதி பெற்று மேற்குவங்க சுற்றுலாத்துறை  விடுதியில் தங்கிக்கொள்ளலாம். விடுதியும் ஆசிரமும் மட்லா நதிக்கரையில் அமைந்துள்ளன.ramakrishna-ashram-Neempith

ஆசிரமத்தின் முகப்பில் ஆசிரமத்தை நிறுவிய படே ஸ்வாமிஜியின் படம். அவர் கடைசி காலத்தில் வசித்த் குடில் அய்லா புயலுக்குப் பின் புனரமைக்கப்பட்டுள்ளது. ஸ்வாமிஜியின் படத்தின் முன்னால் காவியுடையில் துறவிகள் ஸ்லோகங்களைச் சொல்லியிருப்பதைக் காணலாம். எதிரே பெரிய பெரிய மரங்கள் பூச்செடிகள் எங்கும் வியாபித்திருக்கும் பேரமைதி நமக்குள்ளும் பரவும்.ramakrishna-ashram-kaikhali

சற்றே நகர்ந்தால் சுவாமி விவேகானந்தரின் ஆளுயரப் படத்தைக் கொண்ட கட்டடம். அடுத்தது ஆசிரமக் கோயில் மிக அழகான கிருஷ்ணர் சிவபெருமான் சிலைகளுடன் நடு நாயகமாய் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் காட்சியளிக்கிறார் மட்லா நதி படித்துறை வந்தால்தான் நதியின் பிரம்மாண்டம் புரிகிறது. மிகப்பெரிய நதி கிட்டத்தட்ட சாகரம் போல கரையோரங்களிலும் நடு நடுவேயும்  mangrove காடுகள். சதுப்பு நிலத்திற்கே உரிய மரங்கள் இங்கு சிறப்பு அலைகள் குறையும்போது   [ lowtide ] இந்த மரங்களின் வேர்கள் வெளிக்கிளம்பி இருப்பதைப் பார்க்கலாம். இந்த நதியின் இனிப்பான நீரும் வங்காள விரிகுடாவின் உவர் நீரும் கலந்து விடுவதால் இதன் கரிப்புத்தன்மை அதிகமாகத்தான் இருக்கிறது.  இதுபோல வேறெங்கும் உண்டா என்பது சந்தேகமே. மட்லாவில் உள்ள படகு சவாரி மறக்கமுடியாதது. தீவுகளைக் கடந்து செல்கையில் ஆங்காங்கே காய வைக்கப்பட்ட படகுகள் மீன் வலைகள் வாழை மரங்கள் எப்போதாவது வெளிப்படும் குழந்தைகள் எல்லாமே தூரத்துச் சித்திரங்களாக இருக்கும்.download

,மறுபுறம் மிக அருகில் சதுப்பு நில மரங்கள் சுற்றி வேலி அமைக்கப்பட்டிருக்கிறது அது புலிகளின் தாக்குதல்பற்றி கதை கதையாக சொல்கின்றனர்.  பரந்து விரிந்த  வங்காள ஸர்வ் காடுகளிலிருந்து புலிகள் நீந்தியும் சில நேரங்களில் மரக்கட்டைகளைப் பிடித்துக்கொண்டு புத்திசாலித்தனமாக தண்ணீரில் நீந்தியும் வந்துவிடும். அப்படி அரிதாகத்தன் நிகழும் என்றாலும் கேட்கும்போதே பயமாக உள்ளது.

f3cbb45048aa3672ae143eedc20bd8c5 நீண்ட பயணத்திற்குப் பின் காடுகளின் ஒரு முனையில் போன்பீபி மோனோஷா சந்தோஷிமா கங்காதேவி ஆகிய பெண் தெய்வங்களின் கோயில் இருக்கிறது. காடுகளுக்குள் செல்லும் பழங்குடியினர் போன்றோர் இந்த வனதேவதைகளை வணங்கி செல்வர்.hqdefault

விறகு சேகரிப்போர்  தேன் சேகரிப்போர்  நண்டு வேட்டையில் ஈடுபடுவோர் என எல்லோருக்கும் காவல் தெய்வங்கள் இந்த தேவியர்தான். வங்கப்புலியும் பயங்கரமான முதலைகளும் ஆளும் ராஜ்ஜியம் இது. அவை ரகசியமாக இருப்பதால் மிகவும் ஈர்ப்புத்தன்மை உடையதாகவும் இருக்கிறது. சுந்தர்பன்ஸ்ற்கே உரிய சுந்தரி மரங்களைப் பார்த்து மகிழலாம். இவை பாதுகாக்கப்பட்டவை. கேன்ஸர் நோய்க்கு மருந்து தயாரிப்பதில் உபயோகமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

Matla Riverதிரும்பும் பாதையிலும் வாழ்க்கை பாதையிலும் இந்த தேவியர் நால்வரும் நமக்குத் துணை வரவேண்டும் என நாமும் வேண்டிக்கொண்டு கடல் போன்ற நீர்வெளியில் பயணித்தோம்  மட்லாவின் அகண்ட பரப்பு நம்மை பிரமிக்க வைக்கும். வங்கத்தின் மோரியும்  தேனீரும் சதுப்பு நிலக்காடுகளும் போல மட்லா நதி தீரமும் நம் மனதோடு வெகு  நாட்களுக்கு ஒட்டியிருக்கும் என்பது நிச்சயம்.

நன்றி  பூமா குமாரி  திருச்சி   [ மங்கையர் மலர் ]

Advertisements

2 thoughts on “கொள்ளை அழகு ‘ கொய்காலி ‘

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s