முதுமையில் வெயிட் போடாமல் இருக்கணுமா?

download (5) - Copy

உடல் பருமன் எப்போதும் ஆரோக்கியமான விஷயமில்லை. வயதான காலத்திலோ கொஞ்சம்கூட ஆரோக்கியமான விஷயமில்லை. பிளட் பிரஷர்  சுகர் மூட்டுவலி என முதுமையில் வரும் முக்கால்வாசி பிரச்னைகளுக்கு உடல்பருமன் தான் காரணம்.

வெயிட் போடாமலிருக்க உணவு முறைகள்

download (2) - Copyநொறுக்குத் தீனிகளுக்கு டாட்டா சொல்லுங்கள். மூன்று வேளை ஹெல்தியான உணவு மட்டுமே போதும். நொறுக்குத் தீனியைவிட முடியவில்லை என்றால் அதை ஆரோக்கியமாக அதாவது ஆவியில் வெந்த ஸ்நாக் அயிட்டங்களை சாப்பிடுங்கள்.

வயிறு நிறைய சாப்பிடாதீர்கள்.

சர்க்கரை அல்லது சர்க்கரை கலந்த உணவுகள் வேண்டாம்.

download (1) - Copyஎண்ணெயில் நன்றாக பொரித்த வதக்கிய உணவுகள் கூடவே கூடாது. சாதாரணமாக சமைக்கும்போதும் எண்ணெயைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

சாப்பிடுவதற்கு சற்று முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தால் நீங்கள் சாப்பிடும் உணவின் அளவு குறைந்துவிடும்.

நம் வயிறு நிரம்பி விட்டது என்று நம்முடைய மூளை உணர 20 நிமிடம் ஆகும் என்பதால் மெதுவாகச் சாப்பிடுங்கள். மெதுவாக சாப்பிடும்போது நொறுங்க சாப்பிடுவீர்கள் நொறுங்க சாப்பிட்டால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்பது தெரிந்த விஷயம் தானே?

download - Copyநார்ச்சத்து நிறைந்த பிரெஷ் பழங்கள் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

download (3) - Copyமது கூடாது கூடாது கூடாது ….அது காலி கலோரிகளை அதாவது உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தே இல்லாத கலோரிகளை மட்டுமே தரும்.

உங்கள் உணவை ருசிமிக்கதாக்க உப்பு சோயா சாஸ் தக்காளி கெட்ச் அப் ஆகியவற்றை குறைவாக உபயோகிக்கவும். அதற்கு பதிலாக பிரெஷ்ஷான பூண்டு இஞ்சி தக்காளி சேர்த்த துவையல் சட்னி வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெயிட் போடாமலிருக்க உடற்பயிற்சிகள்

downloadதினமும் 30 நிமிடம் வாக்கிங் ரொம்ப ரொம்ப கட்டாயம்.

உணவு இடைவேளையின் போது வேலை இடைவெளியின் போது  சாப்பிட்டு அரைமணி  நேரம் கழித்து  இரவு படுக்கப்போகும் முன்பு என நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைப்பயிற்சி செய்யுங்கள்

உடற்பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டுக்கு அடுத்த வழி தவறாமல் செய்யும் உடற்பயிற்சியே  இதைக் கடைப்பிடித்தால் ஆரோக்கியமான உடல்வாகு நிச்சயம்.

நன்றி   முதுமை நோய்  நிபுணர்  டாக்டர் வ செ  நடராசன்

Advertisements

3 thoughts on “முதுமையில் வெயிட் போடாமல் இருக்கணுமா?

  1. நல்ல குறிப்புகள். வெயிட் போடாமல் இருக்கணும் என்றால் இந்தக் குறிப்புகள் சரி. ஏற்கனவே வெயிட் போட்டிருந்தால் என்ன செய்வது? (அதற்கும் குறிப்புகள் ப்ளீஸ்!)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s