ஆஹா அஹோபிலம்

pavana6

ஆந்திராவில் உள்ள நல்லமல்லா மலைப் பகுதியில்  அல்லகட்டா என்ற ஊரிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். தன் பக்தன்  பிரகலாதனின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து ஹிரண்யனின் அரண்மனையிலுள்ள ஒரு தூணைப் பிளந்து கொண்டு நாராயணர் நரசிம்மராக அவதரித்த இடமே இந்த அஹோபிலம். அவரால் பிளக்கப்பட்ட தூண் இன்றும் மலையின் உச்சியில் உக்ரஸ்தம்பம் என்று பெயர் கொண்டு நிற்கிறது.

ganges-river-view-1-rishikeshமகாசர்ப்பமாக ஆதிசேஷன் சுருண்டு கிழக்கு மலைத்தொடராகப் படுத்திருக்கிறான் என்பது ஐதீகம். இதில் படமெடுத்த தலைப்பகுதி திருப்பதி. நீண்டு சுருங்கும் வால்பகுதி ஸ்ரீசைலம். மத்திய உடல் பகுதியே அஹோபிலம்.  பிலம் என்றால் குகை மலைச்சாரலில் குகைகளில் வீற்றிருந்து அழகாய் காட்சி தரும் நரசிம்மரைப் பார்த்து கருடன் அஹோ பிலம்  மஹாலயம்  என்று போற்றியதாலும்  ஆயுதம் ஏதுமின்ரி தன் விரல் நகங்களாலேயே ஹிரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மரைப் பார்த்து ஆஹா என்ன பலம் என்று வியந்து உரைத்தாலும் இந்தத் தலம்  அஹோபிலம் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

large_150305975இது மேல் அஹோபிலம் கீழ் அஹோபிலம் என்று இரண்டு தளங்களாக அமைந்திருக்கிறது. இந்த இரண்டு தளங்களிலும் சேர்த்து நவ நரசிம்மராக காட்சி தருகிறார்  ஒவ்வொரு நரசிம்மரும் ஒவ்வொரு கிரங்களுக்கு அதிபதியாய் விளங்குகிறார் என்பது சிறப்பம்சம். ஆஹ நவ நரசிம்மரை தரிசித்தால் நவ கிரகங்களையும் ஒரு சேர தரிசித்த பலன் கிடைக்கும்.

அடர்ந்த மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் இந்த க்ஷேத்திரம் அமைந்திருப்பதால் பச்சை புல்வெளி பறவைகளின் ரீங்காரம்  நீரோடைகளின் சலசலப்பு  ஜீல்லென்று வீசும் காற்று இவற்றை ரசித்தப்டியே நாம் ஒவ்வொரு கோயிலுக்கும் செல்லலாம். இது ரிசர்வ்டு பாரஸ்ட் ஏரியா என்பதால் பெரும்பாலான இடங்களில் மண் சாலைகள் மட்டுமே உள்ளது.

navanarasimhaஜ்வாலா அஹோபில் மாலோல் க்ரோட் காரஞ்ச பார்கவ யோகாந்த சத்ரவட பாவன என்ற நவ நரசிம்மர்களை மலைகளிலும் காட்டுப்பகுதிகளிலும் தரிசித்துவிட்டு பிரலாத வரதரை கீழ் அஹோபிலத்தில் தரிசனம் செய்யலாம்.

ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும். சில கோயில்களுக்கு மலை மேல் ஏறிச் செல்ல வேண்டும். மலை ஏறத்துவங்குமுன் காசு கொடுத்தால் ஒரு மூங்கில் கொம்பு கொடுக்கிறார்கள் கொம்பை வாங்கி ஊன்றிக்கொண்டு பாறைகளில் ஏறி இறங்கி நீர் நிலைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். சரிவாக செல்லும் பாறைகளில் மிகவும் கவனமாக மலை மீது ஏற வேண்டும்.  மலையின் வெவ்வேறு பகுதிகளில் எழுந்தருளி இருக்கும் மூர்த்திகள் அனைத்தும் தாமே உருவான சுயம்பு மூர்த்திகள். சுவாமி வீற்றிருக்கும் கோயில்களும் இயற்கையாய் அமைந்த குகைகளே. சில கோயில்கல் குடைவரை கோயில்கள்.

Image4இதில் பாவன நரசிம்மர் ஆலயத்திற்கு செல்லும் பயணம் மிகவும் ஆபத்தானது. இரண்டு மணி நேர் ஜீப பயணம் பெரியவர்களுக்கு பயத்தையும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் குதூகலத்தையும் கொடுக்கக்கூடியது. அவ்வப்போது பெய்யும் மழையால் சேறும் சகதியுமாக இருக்கும் பாதைகளின் இரு மருங்கிலும் இருக்கும் வெட்டப்படாத முட்செடிகள் நம்மை அவ்வப்போது பதம் பார்க்கின்றன.

நன்றி    ஆர் சாதனா   சைதாப்பேட்டை.   மங்கையர் மலர்

Advertisements

2 thoughts on “ஆஹா அஹோபிலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s