நின்ற கோலத்தில் ரங்க நாதர்

???????????????????????????????

கிட்டத்தட்ட ஒரு மாதமாக வாட்டி எடுத்த வெய்யிலில் வெந்து தணிந்த ஹைதிராபாதில் திடீரென வெள்ளிக்கிழமை மதியத்திலிருந்து வரமாக வந்தது நல்ல மழை.  கோடை மழை பூமியை மட்டுமல்ல எங்கள் மனங்களையும் குளிர வைத்தது.  விட்டு விட்டு நல்ல மழை. மழை வருமா என்பது போய்  இந்த மழை ஏன் என போரடிக்க ஆரம்பித்துவிட்டது.  ஆனால் நேற்று மதியம் இளம் வெய்யில் ஆரம்பித்தது. அதனால் பக்கத்தில் உள்ள கோயிலுக்குப் போக  நினைத்தோம்.  30 கிமீ தூரத்திலுள்ள கோதை சமேதராக நின்ற கோலத்தில் உள்ள ரங்க நாதரை தரிசிக்க கிளம்பினோம்.SriRangaNayaka3

ஹைதிராபாத் வாரங்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கட்கேசர் என்ற டவுனிலிருந்து தெற்கே 5.5 கிமீ தூரத்திலுள்ள யதிலாபாத்   என்ற கிராமத்தில் அமைந்துள்ள 600 வருடங்கள் புராதனமான ரங்க நாதர் கோயிலுக்கு சென்றோம். இந்த ஊர் பழங்காலத்தில் ராயபுரம் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன.  நகரத்திலிருந்து தூரத்தில் இருப்பதால் மண் சாலைதான்.  சுற்றிலும் வயல் வரப்புகள்  பிராணவாயு அதிகமுள்ள கலப்படமில்லாத காற்று மனதிற்கு வெகு சுகமாக இருந்தது.   ???????????????????????????????

ரங்க நாதர் என்றால் அனந்த சயனத்தில் உள்ள விஷ்ணுமூர்த்தியைத் தான் நாம் அறிவோம். ஆனால் இந்தக் கோயிலில் கோதை தான் முக்கியமான தெய்வம்  கோதை இங்கு சுயம்புவாக உருவானதால் இதனை வட ஸ்ரீ வில்லிப்புத்தூர் [உத்தர ஸ்ரீ வில்லிப்புத்தூர் ] என்றும் அழைக்கின்றனர்.  கூட்டம் அதிகமில்லை  அமைதியான கோயில். VenuGopola-Temple1

கோதையுடன்  நின்ற கோலத்தில் ரங்க நாதர் லட்சுமி தேவியுடன் நிற்கும் கர்ப்பக்கிரகம். அதற்கு எதிரே கருடன் சன்னதி.  சின்ன ஹனுமான் சன்னதி  என சிறிய கோயில்தான். அதை ஒட்டினாற்போல் வேணுகோபால சுவாமி சன்னதியும் உள்ளது.  புல்லாங்குழலுடன் மிக அழகான கிருஷ்ணவிக்ரகம். மனதை கொள்ளை கொள்கிறது. SriRama-Temple2

அங்கிருந்து கிளம்பி அருகிலுள்ள அதாவது இரண்டு கிமீ தூரத்திலுள்ள ஸ்ரீ ராம கல்யாண காமேஸ்வரி கோயிலையும் பார்த்துக்கொண்டு திரும்பினோம். அங்கே சுதையில் செய்யப்பட்ட சுமார் 15 அடி உயரமுள்ள சிவன் சிலையை தரிசித்தோம்.  ஒரு சின்ன வில்வ மரம்  அதில் இலைகளைவிட காய்களே அதிகம் இருந்தன.  சூரியன் அஸ்தமனத்தை கண்டு களித்துக்கொண்டே வீடு திரும்பினோம்.???????????????????????????????

Advertisements

6 thoughts on “நின்ற கோலத்தில் ரங்க நாதர்

 1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 2. வணக்கம்
  அருமையான தகவலை அறிந்து கொண்டேன்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s