ஆஹா தகவல்  

download

மட்ஸ் கீப்பர் என்னும் மீன் தரையில்  நடக்கும். வெப்ப மண்டலப் பகுதிகளில் கடற்கரையோரம் உள்ள சேறு சகதி நிறைந்த இடங்களில் காணப்படும் இந்த மீனுக்கு வளமையான துடுப்புகளும்  மார்புத் தசைகளும் உண்டு.  இவற்றைப் பயன்படுத்தி தண்ணீரிலிருந்து இவை தரைக்கு வந்து நடக்கின்றன.

T_500_641நந்தி கொடி மரம் பலிபீடம் ஆவுடை இல்லாத இறைவன் என்ற பெருமை திருப்பெருந்துறை ஆத்ம நாதர் கோயிலில் குடிகொண்டுள்ள ஈசனுக்கு உண்டு. வாசலில் இருந்தே ஈசனை முழுமையாக தரிசிக்கலாம்.

download (1)ஊர்வனவற்றில் தேளின் ஆயுட்காலம்தான் மிக அதிகம். 30 முதல் 50 வருடங்கள் வரை கூட வாழும் கொடிய விஷமுள்ள  தேள்கள் உண்டு. அவை ஆறு மாதம் கூட உணவு எதுவும் உண்ணாமலேயே வாழக்கூடிய மன வலிமை பெற்றவையாகும். சமீபத்தில் தேளை வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் 420 நாட்கள் எவ்வித ஆகாரமும் இன்றி வாழ்ந்து சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாம்.

download (2)தேனிக்கு மொத்தம் ஐந்து கண்கள் உண்டு. அதில் மூன்று ஒற்றைக் கண்கள். மீதி இரண்டும் கூட்டுக்கண்கள்.  ஒற்றைக் கண்களைக் கொண்டு மிக அருகில் உள்ள பொருட்களை உணர்ந்து கொள்ளும். கூட்டுக் கண்களின் உதவியோடு தொலைவில் உள்ள பொருட்களின் தன்மையை அறிந்து கொள்ளும் திறன் வாய்ந்தது.

ganges-river-view-1-rishikeshகங்கைக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா? பகீரதன் பூமிக்கு அழைத்து வந்ததால் பாகீரதி சிவனாரின் சடையில் இருப்பதால் ஜடாமங்கை  ஜான்றவி முனிவரின் செவி வழியே வந்ததால் ஜானவி. தேவலோகத்தில் வாழ்வதால் சுரநதி  பக்தர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பதால் வரநதி  மூவுலகிலும் பாய்வதால் திரிபத காமினி. மாந்தராவின் புதல்வி என்பதால் மந்தாகினி. சகல பாபங்களையும் தீர்ப்பதால் சர்வ பாப ப்ரணாசினி எனப் பல பெயர்களுடன் திகழ்கிறாள்.

download (3)தர்மபுரியிலுள்ள மல்லிகார்ஜூனா கோயிலில் உள்ள நவரங்க மண்டபத்தில்  நூறு தூண்கள் உள்ளன.  அதில் இரு தூண்களின் அடிப்பகுதி பூமியைத் தொடுவதில்லை. இத்னை மெல்லிய குச்சி அல்லடு துணியைக் கொண்டு பரிசோதிக்கலாம்.  தூண்கள் ஒவ்வொன்றும் இரண்டு டன் முதல் மூன்று டன் வரை எடை கொண்டவை.

Peacekeeper_missileஅமெரிக்காவில் உள்ள ஏவுகணை ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்கும் பயங்கரமான அணுகுண்டு ஒன்றின் பெயர் என்ன தெரியுமா?  தி பீஸ் கீப்பர் [ THE PEACE KEEPER ] என்பதுதான் இதன் பொருள் சமாதானக் காவலன்.

download (4)தரை ஆமை என்பவை பெரும்பாலும் தரையில் வாழக்கூடியவை. இவைகளுக்கு தரையில் நடக்க வசதியாகக் கால்கள் இருக்கும். இவைகளே டார்டாய்ஸ் எனப்படும். நீர் ஆமை என்பவை நீரில் மட்டுமே வாழக்கூடியவை.  நீரில் நீந்த வசதியாக இவைகளுக்குத் துடுப்பு போன்ற பட்டைகள் இருக்கும் இவை ட்ரடில் எனப்படும்.

unnamedஇந்தியாவின் பாரம்பரிய உடையான புடைவையை சந்திரகுப்த மௌரியரின் கிரேக்க மனைவியான ஹெலன் தான் இந்தியாவில் அறிமுகம் செய்தார்.

Advertisements

One thought on “ஆஹா தகவல்  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s