மிளகு சிறிது பயன் பெரிது

images

பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம் என்று சொல்வார்கள். ரசம்  புளிக்குழம்பு அசைவ உண்வு வகைகளுக்கு மிளகு தரும் சுவையே தனி. உணவு வகைகளில் சுவை சேர்ப்பது மட்டுமின்றி உடல் நலத்துக்கும் பலம் சேர்க்கிறது. பல நோய்களை விரட்டும் சக்தியும் மிளகுக்கு உண்டு.

images (1)கருமிளகு வெண்மிளகு சிவப்பு மிளகு பச்சை மிளகு என மிளகில் பல வகைகள் உண்டு. மிளகு கொடியும் விதையும் அற்புதமான மருத்துவ குணம் கொண்டவை. மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் அல்கலாய்டு  புரதம் கனிமங்கள் உள்ளன.

குளீர் ஜூரம் ரத்த சோகை கோழை கழிச்சல் குன்மம் வாயு சுவையின்மை வெறி பைத்தியம் பிரமேகம்  இருமல் பக்கவாதம்  செரியாமை காமாலை ஆகிய நோய்களை மிளகு குணமாக்கும். மனித உடலின் ரத்த ஓட்ட மண்டலம் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் மீது செயல்பட்டு ஜீரணத்தை அதிகரிக்கிறது. உடலினை மித வெப்பமாக வைத்துக்கொள்ள உதவும்.  பசியின்மை வயிற்று உப்புசம் மலச்சிக்கல் ஆகியவற்றைப் போக்கும்.

மிளகு சுக்கு திப்பிலி தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி இருமல் உள்ளிட்ட கப நோய்கள் தீரும்.

மிளகு கீழா நெல்லி தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் மற்றும் பித்தப்பை கற்கள் கரையும்.

download (1)மிளகு ரசம் ………….. காய்ச்சலை போக்கக்கூடியது மிளகு ரசம். உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது.

மிளகு கஷாயம் ………… மிளகு கஷாயம் சளி காய்ச்சல் தலைவலி  வாந்தி ஆகியவற்றை குணமாக்கும்.

மிளகு பொடி………..பக்கவாதம் மூட்டுவலி ஆகியவற்றுக்கும் மிளகுபொடி மருந்தாகிறது. தொண்டை கரகரப்பு தோல்வியாதிகளை குணமாக்குகிறது. இது கல்லீரலையும் பலப்படுத்தும்.

விஷம் முறிய…….. சுக்கு மிளகு திப்பிலி சேர்த்து சாப்பிட்டால் விஷம் முறியும். எந்த வகை நஞ்சுக்கும் மிளகு நீர் சாப்பிடலாம்.

தொண்டைப்புண்  வயிறு சம்பந்தமான நோய்கள் தீர 50 கிராம் மிளகுத்தூளுடன் 100 மில்லி நீர் விட்டு அரைமணி நேரம் காய்ச்சி வடிகட்டி அதில் 30—60 மில்லி வீதம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட தொண்டை கமறல் தொண்டைப் புண் வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.

downloadமிளகு பெருங்காயம் சீரகம் சம அளவு எடுத்து வறுத்துப்பொடித்து எலுமிச்சை சாற்றில் அருந்த வாந்தி பேதி நிற்கும்.

மிளகு திப்பிலி சுக்கு பாறை உப்பு பெருஞ்சீரகம் இவற்றை சம அளவு எடுத்து பொடித்து இரண்டு முதல் நாலு கிராம் உணவிற்குப் பின் வாயிலிட்டு மென்று விழுங்க ஜீரணத்தை அதிகரித்து வயிற்று நோயைப் போக்கும்.

மிளகு 51 கிராம் பெருஞ்சீரகம் 68 கிராம் தேன் 340 கிராம் சேர்த்து லேகியமாக்கி தினம் இருவேளை 5 கிராம் உண்ண முதியோருக்கும் மெலிந்தோருக்கும் உண்டாகும் மூல நோய் தணியும்.

நன்றி     ஆர் சம்யுக்தா   ஈரோடு.

Advertisements

One thought on “மிளகு சிறிது பயன் பெரிது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s