108 சிவாலயம்

Ambika_Kalna___img_01_by_asbiswas

திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபிரானுக்கு பஞ்சபூத தலங்கள்  சப்தவிடங்கத் தலங்கள் ஜோதிர்லிங்கத் தலங்கள் அட்டவீரட்டத் தலங்கள் என சிறப்புப் பெற்றத் தலங்கள் பல உண்டு.  இவை அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள ஆலயங்களை ஒன்றாக்கி சொல்பவை. ஆனால் ஒரே இடத்தில் சிவபிரானுக்கு 108 ஆலயங்கள் அமைந்துள்ளன என்றால் ஆச்சர்யமானது தானே. அது மேற்கு வங்காள மானிலம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள அம்பிகா கால்னா.

downloadஅம்பிகா கால்னா ‘ எனப்படும் இந்தப் பகுதி இங்குள்ள கோயில்களால் சிறப்புப் பெற்றது. கோயில் நகரம் என்ற பெயருக்கு ஏற்ப இந்த ஊரின் மத்தியில்  இருபுறமும் பல கோயில்கள் அமைந்துள்ளன.  ஒவ்வொன்றும் அதன் கட்டிடக்கலைக்கும் சிற்ப வேலைப்பாடுகளுக்கும் பெயர் பெற்றவை. கி பி 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் இங்கு ஆட்சி புரிந்த மன்னர்களின் பராமரிப்பில் இது மிக உன்னத நிலையில் இருந்துள்ளது.

IMG_8896பாகீரதி நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் அந்தக் காலகட்டத்தில் மிகச் சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் விளங்கி கடல் வாணிபத்தை ஊக்குவித்துள்ளது.  இந்த நகரில் உள்ள பல கோயில்களும் ஒவ்வொரு கட்டத்திலும் ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன. இதன் பெருமைக்கு முக்கிய காரணமாக விளங்குவது இந்த 108 சிவலிங்க கோயில்கள்  இவை வட்டவடிவில் இரண்டு வட்டங்களாக அமையப்பட்டுள்ளன. இது உள் வட்டத்தில் 34 கோயில்களையும் வெளி வட்டத்தில் 74 கோயில்களையும் கொண்டுள்ளது.  வெளி வட்டத்தில் உள்ள கோயில்களின் சிவலிங்கங்கள் ஒன்று வெண்மையான கல்லினாலும் அடுத்தது  கருப்புக் கல்லினாலும்……………………இப்படி மாறி மாறி 37 ஜோடி லிங்கங்கள்.

உட்புற வட்டத்தில் அமைந்துள்ள 34 கோயில்களின் லிங்கங்களும் வெண்மையான ஸ்படிக லிங்கங்கள்   இது நம் வாழ்க்கைத் தத்துவத்தை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது.  கருப்பு லிங்கங்கள் உலகத்தின் பாபங்களையும் வெள்ளை லிங்கங்கள் புண்ணீயத்தையும் குறிக்கின்றதாம்.

மனிதப்பிறவி எடுத்ததின் பயன் இந்த உலகத்தின் பாபச் செயல்களை தவிர்த்து புண்ணியத்தையே  நாடி நற்கதி அடைய வேண்டும் என்னும் தத்துவத்தை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளன இக்கோயில்கள். இந்த 108 சிவலிங்க கோயில் மஹாராஜா தேஜாசந்திரபகதூர் அவர்களால் கி பி 1809 ல் கட்டப்பட்டது. இந்தக்கோயில் சுவர்கள் ராமாயண மஹாபாரத நிகழ்ச்சிகளை விவரிக்கும் வகையில் சித்திரங்கள் கொண்டவை.

Maa-Ambikaஇந்த ஊரில் புனிதமானதும் சக்தி வாய்ந்ததுமாகக் கொண்டாடப்படும் மற்றொரு கோயில் வங்காள மானிலத்துக்கே உரித்தான மஹாசக்தி காளி மாதா கோயில். இதுதான் இந்த ஊரிலேயே மிகப் புராதனமான கோயிலாகும். இதை சித்தேஸ்வரி கோயில் என்று அழைக்கிறார்கள். கி பி 1740ல் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் அந்தக் காலக்கட்டத்தில் இந்த ஊரை ஆண்ட சித்திரசேன மஹாராஜாவினால் கட்டப்பட்டதாகும்.

இந்தக் கோயிலுக்குச் செல்ல 14 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த 14 படிகள் நவக்கிரஹங்களையும் ஐந்து வித தாந்திரீக வழிபாட்டு முறையையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

இங்குள்ள வழிபாட்டு தெய்வமான காளி மாதா ஒரே வேப்பமரத்தில் செதுக்கப்பட்ட  பிரதிமையாகும். இந்தக் கட்டிடங்களில் மூன்று சிவாலயங்களும் உள்ளன.  அருகிலுள்ள அனந்த வாசுதேவ பெருமாள் கோயில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோயில். ஆனால் துரதிருஷ்டவசமாக கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

இங்குள்ள லாலாஜி கோயிலும் கிருஷ்ண சந்திரா கோயிலும்

3199587049_3433918e7bமூன்று நிலை விமானங்களை உடையது. இவை கி பி 1739 ல் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. தவிர மேற்கு வங்கத்தையே தன்னுடைய பக்தியினால் கொள்ளை கொண்ட சைதன்ய மஹாபிரபு வுக்கும் கோயில் உள்ளது. காலம் எவ்வளவோ மாற்றங்களை அடுத்தடுத்து ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த மாற்றங்களால் மாற்றமடையாததாக ஜீவித்து நிலை பெற்ற பக்தி உணர்வு ஆலயங்களாக நம்மை வழி நடத்திக் கொண்டே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது இந்த அம்பிகா கால்னா.

செல்லும் வழி   கொல்கத்தாவிலிருந்து 82 கிமீ . ரயில் மற்றும் பேருந்து வசதி உண்டு.

Advertisements

3 thoughts on “108 சிவாலயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s