சிங்கம்

KANDARI

பொறாமை எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் குணம் இது. தலைசிறந்த கற்புக்கரசியான காந்தாரியைக் கூட ஆட்டிப்படைத்து அவளுக்கும் அவள் குழந்தைகளூக்கும் பெரும் அழிவை உண்டாக்கியது. துவாபரயுகத்திலேயே அந்த நிலையென்றால் கலியுகத்தில் சொல்வதற்கு ஏதும் இல்லை. காந்தாரிக்கு நல்ல குருநாதர் வாய்க்காததே பொறாமை ஏற்படக்காரணமானது.

நம் கலாசாரத்தையும் பண்பாட்டையும் காப்பதற்காக வீரதீரம் புரிந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் சத்ரபதி சிவாஜி.  அவருடைய குரு நாதர் சமர்த்த ராமதாசர். சிவாஜி தன் குரு நாதர் மீது அளவிட முடியாத பக்தி கொண்டிருந்தார். அதைப்போலவே குரு நாதரும் சிவாஜி மீது அளவில்லாத அன்பு வைத்திருந்தார். ஆனால் அதைக் கண்ட ராமதாசரின் மற்ற சீடர்கள் பொறாமை என்னும் பாழுங்கிணற்றில் வீழ்ந்தார்கள்.

imagesசிவாஜி ஒரு ராஜாவாக இருப்பதால்தான் அவர் மீது குரு நாதர் மிகுந்த அன்பு செலுத்துகிறார் என்று வாய்விட்டுப் பேசி தங்கள் பொறாமையை வெளிப்படுத்தினார்கள். சீடர்களின் உள்ளங்களில் மூண்ட பொறாமைத்தீயை அனுபவம் என்ற தண்ணீரால் அணைக்கத் தீர்மானித்தார் குரு நாதர். கடுமையான வயிற்றுவலி வந்தது போல நடித்தார். துடிதுடிப்பது போல் பாவனை காட்டினார். அதே நேரம் பார்த்து வீரசிவாஜியும் அங்கு வந்து விட்டார். குரு நாதர் சீடர்களிடம் “ சிங்கத்தின் பால் கொண்டு வந்தால் தான் என் வயிற்றுவலி குணமாகும்” என்றார்.  சீடர்கள் எல்லாம் சிங்கமாவது பாலாவது?  குட்டி போட்ட சிங்கத்திடம் பால் கறக்கப்போனால் மறு நாள் நமக்குப் பால் ஊற்றும்படி ஆகிவிடுமே என்று திகைத்தனர்.

downloadசிவாஜியோ ஒரு தங்கப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பெண் சிங்கத்தைத் தேடி புறப்பட்டார்.  ஒரு குகையில் இரண்டு சிங்கக்குட்டிகள்  இருந்தன. தாய்ச்சிங்கம் உணவு தேடிப்போயிருந்தது. அது வரும் வரையில் சிவாஜி காத்திருந்தார். தாய்ச்சிங்கமும் வந்தது. குட்டியும் தாயிடம் ஓடின. தாய்ச்சிங்கம் சிவாஜியைப் பார்த்ததும் குட்டிகளை அணைத்துக்கொண்டு சிவாஜியைப் பார்த்து சீறியது.

NHUKILசிவாஜி தான் இருந்த இடத்தில் இருந்தே கைகளைத் தூக்கி கும்பிட்டபடி “ தாய்ச்சிங்கமே என் குரு நாதரின் நோய்க்காக உன்னிடம் பால் வேண்டி வந்திருக்கிறேன் அருள் செய் “ என்றார்.  சிங்கத்தின் கண்களில் கனிவு தெரிந்தது. சிங்கம் போல் வீரமுடைய சிவாஜியும் தைரியமாகச் சென்று பாலைக் கறந்தார். குட்டிகளை நக்குவதுபோல் அவரையும் நாவால் நக்கிக் கொடுத்தது. பாலை எடுத்துக்கொண்டு குகையை விட்டு வெளியே வரும் போது சீடர்களுடன் குரு நாதர் வெளியே நின்றிருந்தார்.

“ என் அன்பிற்குரிய சீடனே உன் குருபக்தியை இவர்களுக்கு உணர்த்தவே  வயிற்று வலி வந்தது போல நடித்தேன்” என்றார். சிவாஜி குருவை வணங்கினார். மற்ற சீடர்கள் பொறாமை நீங்கி திருந்தினார்கள். சிவாஜிக்கு வீரம் விவேகம் எனப் பல முகங்கள் இருந்தாலும் அவருடைய குருபக்தியும் உயர்ந்தது. அவருடைய அனைத்துப் பெருமைகளுக்கும் அதுவே காரணமாக இருந்தது.

Advertisements

2 thoughts on “சிங்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s