நியூ[ஸ்]மார்ட்

1

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற 27 வயது இளைஞர் இரவில் மது அருந்தி காற்றுக்காக வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்துள்ளார். தனது செல்போனில் வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு படங்களை அனுப்பியபடியே அயர்ந்து தூங்கி இருக்கிறார். அப்போது நள்ளிரவில் நாகப்பாம்பு ஒன்று  சந்திரக்குமார் மீது ஊர்ந்திருக்கிறது. போதையில் இருந்த சந்திரக்குமார் நாகப் பாம்பை கண்டு அதிர்ச்சி அடையாமல் அதை கையில் பிடித்தபடி தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அந்த படத்தை “ எனது வீர தீரச் செயலைப் பாருங்கள் “ என்ற வாசகத்துடன் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருக்கிறார். அதைப் பார்த்த பாம்பு டென்ஷனாகி அவரை கொத்தி விட்டது. உடனே சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்து போனார். சமீபத்தில்தான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.

download (1)தமிழ் நாட்டில் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் வெங்கடராமன் ராமகிருஷ்ணன்.  நோபல் பரிசு பெற்றவரான இவர் பிரிட்டிஷ் அறிவியல் ஆராய்ச்சித் து/றையில் மிக உயரிய அமைப்பான ராயல் சொஸைட்டியின் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தேர்வான முதல் இந்தியர் இவரே. தற்சமயம் கேம்பிரிட்ஜெல் உள்ள மூலக்கூறு உயிரியல் துறையின் பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆய்வகத்தில் துணை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு  2009ம் ஆண்டு வழங்கப்பட்டது.

download (2)தேனி மாவட்டத்தை சேர்ந்த 74 வயதான் விவசாயி பி ராமராஜ் என்பவர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர 400க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி சாதனை படைத்துள்ளார்.  தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பை கிராமம் ஒரு மழை மறைவுப் பிரதேசம். இங்கே சில இடங்களில் சோளம் கம்பு கேழ்வரகு என மானாவாரி சாகுபடி மட்டும்  நடந்து வந்தது. கோம்பை பேரூராட்சித் தலைவரான ராமராஜ் மற்ற காய்கறிகளை சாகுபடி க்ஹெய்ய தமிழக அரசுடன் இணைந்து இந்த தடுப்பணைகளைக் கட்டியுள்ளார்.

Volkswagen-Temporary-Autopilot-Systemஉலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம். தானியங்கி முறையில் ஒரு மாடலும் மனிதர்களே ஓட்டும் வகையில் இன்னொரு மாடலும் என இரு வகைகளில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.  பெட்ரோலில் ஓடும் இதில் இருவர் பயணம் செய்ய முடியும். தரையில் வேகமாக ஓடி பின்னர் சிறிய விமானம் போல மேல் எழும்பிச் செல்லும்  மேலும் 400 மைல் தூரம் வரை விண்ணில் பறந்து சென்று பாராசூட்டின் உதவியுடன் இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

BZ28SHIVANI_1_2355257gபெரியவர்களே அஞ்சும் வில்வித்தை களத்தில் சாதித்து வருகிறார் ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு வயதான டாலி ஷிவானி வாடகைத் தாய் மூலமாக இந்த உலகிற்கு வந்த டாலி ஷிவானி  5 மற்றும் 7 மீட்டர் அளவிலான வில்வித்தை போட்டியில் 200 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் இளம் வயதில் அதிக புள்ளிகள் பெற்ற இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். இந்த சாதனை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த குட்டிப்பெண் டாலி சில நாட்களில் தனது மூன்றாவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறாள். வாழ்த்துக்கள் டாலி.

downloadசிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ க்வான் யூ உடல் நலக் குறைவால் அண்மையில் காலமானார். 1965 ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்க்ப்பூர் விடுதலையடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை  அமைத்த லீ மக்கள் செயல் கட்சியை தொடங்கி அந்த நாட்டின் முதல் பிரதமராக 31 ஆண்டுகள் பதவி வகித்தார்.  துறைமுக நகரமாக மட்டுமே அறியப்பட்ட சிங்கப்பூரை பிரமிக்கும் வகையில் வர்த்தக நகரமாக மாற்றினார். திறமையான பொறுப்பான முற்போக்கான சிந்தனையுடைய ஊழலை தடுக்கும் ஆட்சியை வழங்கியதால் மக்கள் மத்தியில் அவர் சிறந்த தலைவராக திகழ்ந்தார். சுத்தத்தையே தனது முதல் நோக்கமாக கொண்ட அவர் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிங்கப்பூரை சுத்தம் செய்தார். அதற்குப் பின்னரே சுத்தத்தின் மதிப்பையும் அவசியத்தையும் உணர்ந்த சிங்கப்பூர் மக்கள் அவரது வழியில் இன்று வரை நடந்து வருகின்றனர்.

Advertisements

One thought on “நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s