ஆஹா தகவல் 

Hadrian's_wall_at_Greenhead_Lough

சீனப் பெருஞ்சுவர் மட்டுமே நமக்குத் தெரியும்  ஆனாஅல் ரோமானியப் பேரரசிலும் ஒரு நெடுஞ்சுவர் கட்டப்பட்டது.  ஹாத்ரியன் என்ற பேரரசன் கட்டிய இந்த ரோம் நெடுஞ்சுவர் 112 கிமீ நீளம் கொண்டது.

downloadஸ்பெயினில் சாண்டியாகோ டி கம்போஸ்தெலா என்ற கதீட்ரல் சர்ச் உள்ளது. இந்த தேவாலயத்தில் புனித வாசல் கதவுகள் உள்ளன. இந்தக் கதவுகள் எந்த ஆண்டில் ஜூலை 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக வருகிறதோ அப்பொழுது மட்டுமே திறக்கப்படுகிறது. அவ்வகையில் இனி 2021 ஜூலை 25 அன்றுதான் புனிதக்கதவுகள் திறக்கப்படும்.

download (3)ஆண் பெண் இன வேறுபாடு உயிரினங்களில் மட்டும்தான் உண்டு எனக் கருதுவது தவறு. ராகம் ஆறு வைரம் வெற்றிலை ஆகியவற்றிலும் ஆண் பெண் உண்டு.  நாட்டை  ஆண் ராகம்  மோகனம் பெண் ராகம். மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் ஆண் ஆறுகள்  கிழக்கு வடக்கு தெற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் பெண் ஆறுகள்.  ஆறுமுகப் பட்டைகளுடைய வைரம் ஆண் வைரம்.  உருளை வடிவ வைரம் பெண் வைரம். அகலமான வெற்றிலை பெண் வெற்றிலை  நீளமான வெற்றிலை ஆண் வெற்றிலை.

teapot-3வானுயர்ந்த கட்டங்களையும் ஆச்சரியம் தரும் வினோத வடிவு கட்டடங்களையும் உருவாக்குவதில் சீனா முன்னணியில் உள்ளது. அந்த வகையில் சீனாவில் மெய்டீன் என்னும் நகரத்தில் உலகின் மிகப்பெரிய தேநீர்க் கோப்பை வடிவில் ஒரு கட்டடத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் உயரம் 73.8 மீட்டர்   ஐந்து ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் கட்டடம் தான் மெய்டீன் நகர தேநீர் அருங்காட்சியகம்

download (4)அமெரிக்காவின் அதிபராக லிங்கன் இருந்தபோது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் தன் காலைக் காட்டி “ இந்த செருப்பு உங்கள் தந்தை செய்து தந்தது “ என்று கூறினாராம். உடனே லிங்கன் “ மிக்க நன்றி ஒரு வேளை அது அறுந்து போனால் வெள்ளை மாளிகைக்குக் கொண்டுவாருங்கள்  தைத்துத் தருகிறேன்” என்று கூறி அவரது வாயை அடைத்தாராம்.

Irrawaddyrivermapகாலையில் ஒரு திசையிலும் மாலையில் ஒரு திசையிலும் பாயும் நதி ஐராவதி என்ற நதியாகும். பர்மாவில் ஓடும் இந்த நதி காலையில் மேற்கு நோக்கியும் மாலையில் கிழக்கு நோக்கியும் பாய்கிறது.

Berkeley_glade_afternoonஅமெரிக்காவில் பெர்க்கினி நகரத்தில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்திய இயல் என்னும் பாடம் கற்பிக்கப்படுகிறது.

download (5)அந்தமான் தீவுகளில் வசிக்கும் ஒரு பழங்குடியினர் முதல் மனைவியை இழந்தவர்களின் மறுமணத்தை சுடுகாட்டில்தான் நடத்துவார்களாம். இறந்து விட்ட முதல் மனைவியின் ஆசி இரண்டாவது திருமணத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் காரணமாம்.

rice-branகேரள மானிலம் கொடுங்கலூரில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள சண்டிகேஸ்வரி அம்மன் சிலைக்கு தினசரி தவிடால் அபிஷேகம் செய்கிறார்கள்.

8082697138_43d3936023_zமேற்குதொடர்ச்சி மலையின் ஆனைமலை புலிகள் காப்பக எல்லைக்குள் உள்ள ஒரு தேக்குமரம் 130 அடி உயரமும் 5 ஆட்கள் கட்டிப்பிடிக்கும் அளவு சுற்றளவும் கொண்டது. கன்னிமாரா என்ற இந்த மரத்திற்கு 463 வயது இருக்கலாம் என்று கணக்கிடபட்டுள்ளது. டாப்சிலிப் பகுதி வழியாக கேரள இல்லைக்குட்பட்ட பாம்பிக்குளம் பகுதியில் உள்ள இந்த மரத்தை சிறப்பு  அனுமதி வாங்கித்தான் பார்க்க முடியும். கன்னிமாரா என்றால் இளமை மாறாத மரம் என்று பொருள்.

download (2)திருமணமான பிறகு கணவனும் மனைவியும் எந்தக் காரணத்தை கொண்டும் விவாகரத்து வாங்க முடியாது. இப்படிச் சட்டம் இருப்பது அயர்லாந்திலும் மால்டாவிலும்தான்.

download (1)சிலந்தி  பின்னும் வலை ஒட்டும் தன்மை கொண்ட பட்டுப் போன்ற மெல்லிய இழைகளால் ஆனது. வலையில் ஒரு சிறிய இடம் மட்டும் பசை தன்மையில்லாமல் இருக்கும். பிற பூச்சிகளைப் பிடிக்க சிலந்தி அந்த இடத்தில்தான் காத்திருக்கும். சிலந்தியின் காலில் ஒருவித எண்ணெய் சுரக்கிறது. ஒட்டக்கூடிய அந்த இழைகளில் சிலந்தி சிக்கிக்கொள்ளாமல் அதுதான் காப்பாற்றுகிறது. எனவே சிலந்தி சுதந்திரமாக அந்த இழைகளின் மேல் நகர்ந்து இரையைப் பிடிக்கமுடிகிறது.

Advertisements

One thought on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s