விளக்கீடு

download

விழாக்கள் திருமணம்……………. என எந்த மங்கல நிகழ்வானாலும் தீபம் ஏற்றுவது முக்கியமான மரபாக இருக்கிறது.  திருமணம் கைகூடுவதற்கு செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றுகிறோம். குரு பலம் கிடைக்க தட்சிணாமூர்த்திக்கு அல்லது  நவக்கிரஹ சன்னதியில்  உள்ள  குருவுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றுகிறோம். கடன் நிவர்த்திக்கு தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றுவதும் உண்டு.  இப்படி எல்லா விதத்திலும் தீபம் ஏற்றுவது மிக முக்கியமானதாக இருக்கிறது.

download (1)மிகப் பழங்காலத்தில் இருந்தே விளக்கேற்றுவது என்பது வழிபாட்டின்  முக்கியமான பகுதியாக இருந்திருக்கிறது. மிகப் பழைமையான சங்க இலக்கியங்களில் இதற்கான குறிப்புக்களை காண்கிறோம்.

nanamina_iஅறுபத்து மூன்று நாயன்மார்களில் தீபம் ஏற்றும் திருத்தொண்டைப் புரிந்தவர் நமி நந்தியடிகள் நாயனார். விளக்கு ஏற்றுவதை விளக்கீடு என்றே குறிப்பிட்டு பாடுகிறார் ஞானசம்பந்த பெருமான். பூம்பாவை பதிகத்தில் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்றே பாடுகிறார்.

தத்வார்த்தமாக விளக்கேற்றுவது என்பது அறியாமையைப் போக்கி ஞானம் பெறுவதைக் குறிக்கிறது. அறியாமை இருள் ஞானம் வெளிச்சம். அஸதோமா ஸத்கமய  தமஸோமா ஜோதிர்கமய என்கிற வேதமுழக்கமும் இதைத்தான் குறிக்கிறது.

download (2)வீட்டில் மஹாலட்சுமி என்றும் நிலைத்திருக்க விளக்கு ஏற்றுதல் மிகவும் அவசியம். அதாவது பிரம்ம முஹூர்த்தத்தில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. சூரிய உதயத்துக்கு ஒரு நாழிகை முன்னாலும் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு ஒரு நாழிகை முன்னாலும் விளக்கு ஏற்றவேண்டும்.

தினசரி இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். வெள்ளீக்கிழமைகளில் குத்து விளக்கில் ஐந்துமுக தீபம் ஏற்றி மஹாலட்சுமி பூஜை செய்வது  மிகவும் சிறந்தது. சில பரிகாரங்களுக்காக மண்ணாலான அகல் விளக்கில்  நெய் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது. தீபம் ஏற்ற பஞ்சு திரியே மிகவும் சிறந்தது. நல்லெண்ணெய் நெய் இவற்றைப் பயன்படுத்தி விளக்கேற்ற மங்கலம் நிலைக்கும்

அறிவியல் விளக்கம்images

இரவு பகல் மாற்றம் ஏற்படும்போது சுற்றுப்புற சூழலில் நிகழும் சில மாற்றங்களால் விஷ பாதிப்பு உண்டாகும். விளக்கிலிருந்து வெளீப்படும் ஒளிக்கதிர்கள் இந்த பாதிப்பை தடுக்கவல்லது. இதை முன்னிட்டே அதிகாலையிலும் மாலையிலும் விளக்கேற்றச் சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

Advertisements

One thought on “விளக்கீடு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s