வேண்டாமே வீராப்பு

download

மனைவி மீது கோபம் வரும்போதெல்லாம் அவளை பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கணவன் “ இதோ பார் நான் சன்னியாசி ஆகி விடுவேன்” என்று சொல்லி வந்தான். அவன் கூறுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் வழக்கம்போல் தன் பல்லவியைத் தொடர்ந்தான். அவளும் நீங்கள் ஒன்றும் என்னைப் பற்றி கவலை பட வேண்டாம்  உங்கள் முடிவுக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். தாராளமாக இப்போதே சன்னியாசியாக  ஆகலாம்  என்று படபடவென பேசினாள். மனைவி இப்படி பேசுவாள் என கணவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

வேறு வழியின்றி துண்டை உதறி தோளில் போட்டபடி கால் போன திசையில் நடந்தான். ஒரு கோயிலுக்குச் சென்று மொட்டையடித்து ஆற்றில் குளித்தான். காவி உடை அணிந்தான். ஒரு மரத்தடியில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தான்.  ஓரிரு மணி  நேரம் ஆனதும் பசி உண்டானது. போவோர் வருவோரைப் பார்த்தான் யாரும் சாப்பிட எதுவும் தரவில்லை.

மாலை வேளை கழித்து இருள் சூழத் தொடங்கியது. பசியோடு பயமும் தொற்றிக்கொண்டது. கோயில் நடை சாத்தியதால் அந்தப் பகுதியே அமைதியானது. ஒருவர் கூட அவன் கண்ணில் தென்படவில்லை. பயம் அதிகரித்தது. இனியும் இங்கு இருப்பது நல்லதல்ல என வீட்டுக்குப் புறப்பட்டான்.

நன்றாக இருட்டியதும் பாதையில் இருந்த மேடு பள்ளம் கண்ணுக்குத் தெரியவில்லை. நடு இரவில் தன் சொந்த ஊருக்குள் நுழைந்தான். மொட்டைத்தலையுடன் வந்த இவனைக் கண்டதும் நாய் குரைக்கத் தொடங்கியது. உடம்பெல்லாம் வியர்த்தது. ஒரு வழியாக வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினான்.  “ யார் அது இந்த நேரத்தில்?” என்று உள்ளிருந்து மனைவியின் குரல் கேட்டது. “ நான் தான் வந்திருக்கிறேன் “ என்று பதில் கொடுத்தான். கணவரின் குரல் என்பதை அறிந்த மனைவி கதவைத் திறந்து விட்டாள். அவனது கோலம் கண்டு பலமாகச் சிரித்தாள். “ இது சன்னியாசி தங்குற இடம் இல்லை. ஏதாவது ஆசிரமத்துக்கு சென்று தங்கிக்கொள்ளுங்கள்” என்று கேலி செய்தாள்.

அவளிடம் “ அறியாமல் பிழை செய்த என்னை புண்படுத்தாதே  நான் விளையாட்டாக செய்தது உண்மை என எண்ணி பெரிதுபடுத்திக்கொள்ள வேண்டாம். காலையில் நீ கொடுத்ததை சாப்பிடாமல் போய்விட்டேன். இப்போதோ உடல் சோர்ந்து விட்டது  இனி கனவில் கூட சன்னியாசம் பற்றி நினைக்க மாட்டேன். என்னை ஏற்றுக்கொள்” என கெஞ்சினான்.

ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்காது என்பதை உணர்ந்த கணவன் மீது மனைவிக்கு இரக்கம் உண்டானது.

சன்னியாசம் என்பது விளையாட்டு அல்ல குடும்பப் பிரச்னைக்கு அது தீர்வும் அல்ல. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்தால் அதைப் பேசி தீர்க்கவேண்டும். பயமுறுத்தல் போன்ற வேலைகள் இருவருக்குமே நல்லதல்ல.

Advertisements

2 thoughts on “வேண்டாமே வீராப்பு

 1. வணக்கம்
  அம்மா
  கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை வந்தால்
  உண்மையில் பேசி தீர்க்க வேண்டும்.
  நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s