நெற்றிக்கண் ஆழ்வார்

bhaktisar=thirumazisai

திருமழிசையாழ்வார் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் திருமாலின் சக்கரத்தின் அம்சமாகப் பார்க்கவ மகரிஷி கனகாங்கிக்கும் மகனாகப் பிறந்தார். திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர் என்பதால் திருமழிசையாழ்வார் எனப் பெயர் பெற்றார்.

குழந்தை சதைப் பிண்டமாக இருந்ததான் பிரம்புச்செடிகள் சூழ்ந்த புதர் ஒன்றில் பெற்றோர் விட்டுச் சென்றனர். அதன் பின் பிண்டத்தில் இருந்து கை கால முதலிய உறுப்புக்கள் உண்டாகி குழந்தை வடிவம் பெற்றார். தெய்வீகமான அந்தக் குழந்தையின் அழுகுரல் கேட்ட திருவாளன் பங்கயச்செல்வி தம்பதியர் கண்டெடுத்தனர். தங்களின் குழந்தையாக வளர்த்தனர். ஒரு நாள் குழந்தைக்கு கொடுத்த பசும்பாலில் சிறிதளவு மிச்சம் இருக்க அதை தாய் அருந்தினாள். அதன் காரணமாக கருவுற்று  ஆண்குழந்தை பெற்றெடுத்தாள். அந்த பிள்ளையே பிற்காலத்தில் திருமழிசை ஆழ்வாரின் முதன்மை சீடராகும் பாக்கியம் பெற்றார். அவர் பெயர் கணிகண்ணன். எட்டு வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த ஆழ்வார் பேயாழ்வாரை குருவாக ஏற்று திருமந்திர உபதேசம் பெற்றார்.

ஒரு சமயம் திருமழிசயாழ்வாரின் பக்தியை சோதிக்க பார்வதியோடு சிவன் தோன்றி நெற்றிக் கண்ணை திறந்து காட்டினார். ஆழ்வாரும் தன் யோக வலிமையால் நெருப்பை எழச் செய்து  உலகை தரிசிக்கத் தொடங்கினார். இதையறிந்த திருமால் ‘ புட்கலாவர்த்தம் ‘ என்னும் மேகத்தை வரவழைத்து மழையால் குளிர்வித்தார். தீ அணைந்து எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. சிவபெருமானே ஆழ்வாரின் பக்தியை பாராட்டி மகிழ்ந்து ‘ பக்திசாரர் ‘ என்னும் பட்டம் வழங்கினார். திருமழிசை ஆழ்வாரின் வலது திருப்பாதத்தில் நெருப்பை உண்டாக்கிய நெற்றிக்கண் உள்ளது.TN_111213172351000000

இவரால் பாடப்பெற்ற தலங்கள் 16.  காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளை தன் சீடன் கணிகண்ணனுக்காக சொன்னபடி செய்ய வைத்த பெருமை இவருக்குண்டு. அதனால் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் பெருமாளுக்கு ஏற்பட்டது.

‘ எழுந்திருந்து பேசு வாழி கேசவனே “ என்று இவர் கேட்டதற்கு இணங்க கும்பகோணம் ஆராவழுதப் ப்எருமாள் எழுந்த கோலத்தில் ‘ உத்தான சயனம் ‘ என்ற நிலையில் காட்சியளித்தார். இறுதிக்காலத்தில் கும்பகோணத்தில் திரு நாடு என்னும் பரமபதத்திற்கு எழுந்தருளீனார். வேதாந்த தேசிகன் அருளிய பிரபந்தசாரம் என்னும் நூலில் இவருடைய வரலாறு கூறப்பட்டுள்ளது.

Advertisements

2 thoughts on “  நெற்றிக்கண் ஆழ்வார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s