ஆறு படையப்பா

திருப்பரங்குன்றம்

downloadமுருகனின் அறுபடை வீடுகளில் முதல் தலமான திருப்பரங்குன்றம் தெய்வானையை மணந்த திருத்தலமாக விளங்குகிறது. நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையை முருகன் கேட்டு மகிழ்ந்த தலம். முருகமந்திரத்தை ஜெபித்து முருகனால் ஆட்கொள்ளப்பட்ட முருகம்மையார் இங்கு வாழ்ந்தவர். முருகன் மணக்கோலத்தில் காட்சியளிப்பதால் இங்கு வழிபடுவோருக்கு குறையில்லா மணவாழ்க்கை உண்டாகும்.

திருச்செந்தூர்

aaaaas10முருகனின் இரண்டாவது படைவீடான இது கடற்கரை தலம். இங்கு தான் முருகப்பெருமான் வியாழ பகவானிடம் சூரப்பத்மனின் வரலாற்றைக் கேட்டறிந்தார். வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் போரில் முருகனுக்கு உதவி புரிந்த தலம். இங்குள்ள முருகனை சுகப்பிரம்ம முனிவர் வழிபட்டுள்ளார். முருகன் தன் வேலினால் உண்டாக்கிய கந்தபுஷ்கரணி என்னும் நாழிக்கிணறு தீர்த்தம் விசேஷமானது பேச முடியாமல் இருந்த குமரகுருபரர் பாடும் திறன் பெற்று முருகனருளால் புலவராகி கந்தர் கலிவெண்பாவை பாடினார்.

பழனி

download (1)முருகனின் மூன்றாம் படைவீடான இங்கு தைப்பூச திருவிழா  மிகவும் விசேஷம். லட்சுமி காமதேனு சூரியன் பூமாதேவி அக்னி ஆகியோர் முருகனை வழிபட்டு பேறு பெற்றதலம். திரு ஆவினங்குடி என்ற சிறப்பு பெயர் பெற்றது. சூரபத்மனின் குருநாதரான இரும்பாசுரன் அகத்தியரின் சீடராக இருந்தான். அவனால் காவடியாக சுமந்து வரப்பட்ட சிவகிரி  சக்திகிரி மலைகள் பழனியில் உள்ளன.  இதன் காரணமாகவே இங்கு காவடி வழிபாடு பிரசித்தமாக இருக்கிறது. முருகன் இங்கு கோவணத்துடன் ஆண்டிக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.

சுவாமிமலை

download (2)படைப்புக்கு ஆதாரமான ‘ ஓம் ‘ என்னும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரம்மனை முருகன் சிறையிலிட்டார். அவரை விடுதலை செய்யும் நோக்கில் மந்திரத்தின் பொருள் தனக்கும் தெரியாதது போல சிவன் முருகனிடம் நடிக்க முருகப்பெருமான் தன் தந்தைக்கும் இதன் பொருளைக் கூறினார். இதனால் தகப்பன் சுவாமி என்று போற்றப்படுகிறார்.

திருத்தணி

fdcd2bc7-25d1-431d-a2a2-25779685e85b_S_secvpfமலைகளில் சிறந்தது தணிகைமலை என்கிறது  கந்த புராணம்.  திருச்செந்தூரில் சூரனுடன் போர் செய்த முருகன் இத்தலத்திற்கு வந்து கோபம் தணிந்து சாந்த நிலையில் இருக்கிறார். வள்ளியை அவர் மணந்த தலம் இது. நாரதர் பிரம்மா அகத்தியர் இவரை வழிபாடு செய்து நற்கதி அடைந்தனர். புராண காலத்தில் ‘ செருத்தணி ‘ என வழங்கப்பட்ட இத்தலம் திருத்தணியாக மாறியது. செருத்தணி என்றால் கோபம் தணிந்த இடம் என்பது பொருள். மாசியில் வரும் பூசம் நன்னாளில் வள்ளி முருகனுக்கு திருக்கல்யாணம் நிகழ்கிறது.

சோலைமலை

4691121742_016abb57f3கனிந்த பழங்கள் உதிர்கின்ற சோலைகள் நிறைந்த மலை என்பதால் சோலைமலை  இங்குள்ள முருகன் மும்மூர்த்தியாகவும் இருந்து உலக இயக்கத்தை நடத்துவதாக குறிப்பிருகிறார் அருணகிரினாதர்.  நாவல் மரத்தடியில் களைப்புடன் அமர்ந்திருந்த அவ்வையார் முன் முருகன் சிறுவனாக காட்சியளித்து “ பாட்டி சுட்டபழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா? “ என்று விளையாடல் புரிந்து பாடம் புகட்டியதோடு இனியது கொடியது பெரியது என கேள்வி கேட்டு அதற்கு விடை பெற்று மகிழ்ந்தார். ஆறாவது படைவீடான இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார்.

Advertisements

2 thoughts on “ஆறு படையப்பா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s