ஆஹா தகவல்

ants

பூமியில் எறும்புகளின் எண்ணிக்கை மனிதர்களின் எண்ணிக்கையைவிட பத்து லட்சம் அதிகம்   மேலும் பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எடை பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எடைக்குச் சமமாகும். 10000 வகையான எறும்புகள் நம்மைச் சுற்றி வசிக்கின்றன.

downloadபெண் யானை ஆண் யானையை விட அதிக புத்திக்கூர்மை உடையது. பெண் யானைக்கு மதம் பிடிப்பதில்லை. பெண் யானை தன் குட்டியை சிறப்பாக 10 வருடங்கள் வரை பராமரிக்கும். தாயை இழந்த குட்டியை மற்றொரு பெண் யானை வளர்க்கும். பெண் யானை  50 வயது வரை 4 வருடங்களுக்கு ஒரு முறை குட்டி ஈனும். யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்.

Ellen-Churchமுதன் முதலில் விமானப்பணிப்பெண்ணாக பணியாற்றிய பெருமை எல்லன் சர்ச் [ 1930 ] என்ற அமெரிக்க நர்ஸையே சேரும். இவர் துணிவுமிக்க ஏழு பெண்களுக்கு பயிற்சி அளித்து சான்பிரான்சிஸ்கோ  சிகாகோ நகரங்களுக்குச் செல்லும் தனியார் விமானத்தில் பணிப்பெண்களாக நியமித்தார். இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் விமானப் பணிப்பெண்களாகப் பணிபுரிவதற்கு இப்பெண்களே முன்னோடிகள்.

download (3)1921 ல் இங்கிலாந்து நூலகர் ஆலிவரின் முயற்சியால் செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த 4 தன்னார்வத் தொண்டர்கள் ரத்த தானம் செய்ய அவை லண்டன் அரசுக்கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்பட்டது. இதுவே வரலாற்றில் முதல் ரத்த வங்கியாகும். முதலில் ரத்த தானம் செய்தது ஒரு பெண்   அவர் லின்சென்ட் என்ற செவிலியர்.

download (1)எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் நடந்தது நடந்தபடியே எழுதப்பட்ட நாட்குறிப்புக்கு ஆங்கிலத்தில் ‘ ப்ளூ டைரி ‘ என்று பெயர். லெனின் நாட்குறிப்பு ‘ ப்ளூ டைரி ‘ என்றழைக்கப்படுகிறது.

imagesஉலகில் பகல் இரவு எந்த நேரமும்  எங்காவது வானவில்லை காணமுடியுமா?  அந்த அதிசயம் ஆப்பிரிக்காவில் உள்ள பிரமாண்ட விக்டோரியா நீர்வீழ்ச்சியில் நிகழ்கிறது. அதிலிருந்து எழும் நீர்த்திவலைகள் பல நூரு அடிகள் உயரத்துக்கு எழும்பி ஒரு பெரிய நீர்த்திரையையே உருவாக்குகின்றன. இதனால் சூரிய ஒளியில் மட்டுமல்ல நிலவொளியிலும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வானவில்லை கண்டு ரசிக்கின்றனர்.

download (4)ரத்தத்தில்  ஏ பி ஓ ஏபி………….. எனப் பிரிவுகள் உண்டு என முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஆஸ்திரேலிய  நாட்டைச் சேர்ந்த  கார்ல் லான்ட்ஸ்டெய்னர்.

amrthya-senதேசிய கீதத்தை   எழுதிய  ரவீந்திர நாத் தாகூரிடம் உதவி கவிஞராக பயிற்சி பெற்ற ஒருவர் தனது மகள் வயிற்றுப் பேரனைத் தூக்கி வந்து அவனுக்கு பெயர் சூட்ட வேண்டினார். உடனே தாகூர் அவனுக்கு ‘ அமர்த்தியா ‘ என்று பெயர் சூட்டினார். அறுபது ஆண்டுகள் கழித்து அந்தக் குழந்தை பொருளாதாரத்தில் இந்தியாவிற்காக நோபல் பரிசு பெற்றுத்தந்தது. ஆம் அவர்தான் அமர்த்தியாசென்.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s