நியூ[ஸ்]மார்ட்

caesarea_port_israel

இஸ்ரேல் நாட்டில் செசெரியா என்ற இடத்தில் பழமையான துறைமுகம் ஒன்று உள்ளது. இதன் அருகே சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக மூழ்கிப்போன கப்பல் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஏராளமான தங்க நாணயங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றை ஆட்சி செய்து வந்த பாதிவித் கலிபக் என்ற மன்னரின் காலத்தில் எகிப்து நாட்டிலிருந்து செசெரியா துறைமுகத்துக்கு இந்தக் கப்பலில் தங்க நாணயங்கள் வந்திருக்க வேண்டும் என்றும் அப்போது கப்பல் புயலில் சிக்கி மூழ்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

downloadஅமெரிக்காவில் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் இந்தியரான டாக்டர் புர்னெண்டு தாஸ் குப்தா. இவருக்கு அமெரிக்கன் வேதியியல் துறை அமைப்பின் சார்பில் 2015 ம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்குச் சிறப்பாக பாடம் நடத்துவது நவீனப்படுத்துவது போன்ற இவரது சேவைக்குக் கிடைத்துள்ள விருது இது.

torotiseஹைதராபாத்தைச் சேர்ந்த பாசல் ஷேக் என்ற இளைஞர் ஃபேஸ்புக்கில் போடுவதற்காக உயிரியல் பூங்காவில் இருந்த வயதான ஆமை ஒன்றின் மேல் ஏறி நின்று போஸ் கொடுத்து போட்டோ எடுத்திருக்கிறார். ஆமை இருக்கும் இடத்தைச் சுற்றி அமைக்க்ப்பட்டு இருந்த கம்பி வலையைத் தாண்டி உள்ளே நுழைந்து கூட வந்த நண்பனை போட்டோ எடுக்கச் சொல்லி அதை ஃபேஸ்புக்கிலும் போட்டுவிட்டார். அதிக லைக்குகள் கிடைத்தன. ஆனால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விட்டார்கள்.

antsஜெர்மனி நாட்டில் உள்ள ரெகன்ஸ் பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாமர் சேக்ஸ் மற்றும் அவரது சகாக்கள் எறும்புகளின் வாழ்க்கை முறை பற்றி ஓர் ஆராய்ச்சியை அண்மையில் செய்தனர். அதில் எறும்புகள் தங்கள் கூட்டின் ஓரத்தில் கழிவறைகளுக்கென்ரு தனி இடம் ஒதுக்கி வைத்து வாழ்கின்றன என்று தெரிய வந்துள்ளது. இதற்காக பல கட்டெறும்புக் கூடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவாம்.

அமெரிக்காவைச்  சேர்ந்தவர் மேரி நீல் என்னும் முதுகு தண்டுவட சீரமைப்பு நிபுணர்  இவர் சிலி நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது படகு விபத்தில் நீரில் மூழ்கிப் போனார். சுமார் 12  நிமிடங்கள் கழித்து மீட்கப்பட்டபோது உயிருடன் இருந்து பின்னர் சிகிச்சை பெற்றுத் தேறினார். பொதுவாக இவ்வளவு நேரம் நீருக்குள் இருந்தால் பிழைப்பது அதிசயம். ஆனால் இதைவிட அதிசயம் இவர் சொன்னதுதான். தான் மூழ்கிக்கிடந்த நேரத்தில் தான் பூமியில் இருந்து நேராக சொர்க்கத்துக்கு சென்றதாகவும் அங்கு தேவதைகளை சந்தித்ததாகவும் கூறி இருக்கிறார். மனிதர்களைப்போன்ற உருவத்துடன் மேலங்கி அணிந்து இருந்த அவை தன்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றதாகவும் சொல்கிறார்.

imagesப்ராஜெக்ட் லூன்  இது இணையதள் தொடர்புக்கான கூகுள் நிறுவனத்தின் பிரம்மாண்டமான திட்டம். ஹைடெக்கான செயற்கைகோளுக்கு பதிலாக வானில் 20 கிலோ மீட்டர் உயரத்தில் ஹீலியம் வாயு நிரம்பிய நூற்றுக்கணக்கான பலூன்களை  மிதக்கவிட்டு அதில் சிறிய தகவல் தொடர்பு சாதனங்களைப் பொருத்துவதன் மூலம் இணையதள தகவல்களை  wi fi சமிக்ஞைகளாக தகவல் பரிமாற்றம் செய்யவிருக்கிறது கூகுள். இதற்காக உலக நாடுகளின் அனுமதி கேட்டு வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்தில் இந்தத் திட்டம் முன்னோட்டம் பார்க்கப்பட்டுள்ளது. இப்போது உள்ள சிக்னல் டவர்கள்  புயல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. எத்தகைய விமானமாக இருந்தாலும் வானில் அதிகபட்சம் 10 கிலோமீட்டர் உயாத்தில்தான் பறக்கமுடியும். ஆனால் இந்த ஹீலியம் பலூன் 20 கிமீ தூரத்தில் பறப்பதால் ஒவ்வொரு இடத்திலும் காற்றின் வேகத்துக்கு தகுந்தாற்போல் பறக்கும். இதில் இருக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் வேகத்தைக் கணக்கிட்டு ஒரு பலூன் நகர்ந்தால் இன்னொன்றை அங்கே கொண்டுவந்து விடுவதால் பாலைவனம் நடுக்கடல் இமயமலை சிகரம் எங்கு வேண்டுமானாலும் தொடர்ந்து இணையதள சிக்னல் கிடைக்கும்.

Advertisements

2 thoughts on “ நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s