எறிபத்தர்

naeripat_i

எறிபத்த நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூரிலே அவதரித்தவர். அவ்வூரிலுள்ள ஆனிலையப்பரை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வந்தார். அடியார்களுக்கு ஒரு இடர் வந்து உற்றவிடத்து உதவும் இயல்பினை உடையவர். தீங்கு புரிந்தோரைப் பரசு என்னும் மழிப்படையால் எறிந்து தண்டிப்பார். இந்நகரில் சிவகாமியாண்டார் என்னும் தொண்டர் ஆனிலையப்பருக்கு மலர் தொண்டு புரிந்து வந்தார்.p18

ஒரு  நாள் நந்தவனத்தில் மலர் பறித்து வருகையில் வழியில் புகழ்ச்சோழரின் பட்டத்து யானை பூக்கூடையைப் பறித்து கீழே எறிந்தது. யானையின் செயல்கண்டு வெகுண்டு அதனை தண்டு கொண்டு அடிப்பதற்கு விரைந்து ஓடினார். ஆனால் முதுமை காரணமாக இடறி விழுந்து நிலத்திலே கைகளை மோதி அழுதார்.

TN_20140218104021849675அடியாரது ஓலத்தைக் கேட்டு அண்டு வந்த எறிபத்தர் யானையின் செய்கையைக் கண்டு வெகுண்டார். யானையைப் பின் தொடர்ந்து சென்று யானையின் துதிக்கையை மழுவினால் துணித்தார். அதற்கு முன்னும் இருமருங்கும் சென்ற குத்துக்கோற்காரர் மூவரையும் யானை மேலிருந்த பாகர் இருவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தினார்.

தமது பட்டத்து யானையும் பாகர் ஐவரும் பட்டு வீழ்ந்த செய்தியைக் கேட்ட புகழ்சோழர் வெகுண்டார். இது பகைவர் செயலாகும் என எண்ணி நால்வகை சேனைகளுடன் அவ்விடத்தை அடைந்தார். யானையும்  பாகரும் வெட்டப்பட்டிருந்த அவ்விடத்தில் பகைவர் எவரையும் காணாதவராய் இருகை யானைபோல் தனித்து  நிற்கும் எறிபத்தராகிய சிவனடியாரைக் கண்டார்.

download (1)தன் யானையையும் பாகர்களையும் கொன்றவர் அங்கு நிற்கும் அடியவரே என அருகிலுள்ளவர்கள் கூறக் கேட்டறிந்த வேந்தர் சிவபெருமானுக்கு அன்பராம் பண்புடைய இச்சிவனடியார் பிழைகண்டாலல்லாது இவ்வாறு கொலைத்தண்டம் செய்யமாட்டார் என எண்ணி யானை செய்த் குற்றத்துக்கு அதனையும் பாகரையும் கொன்றது போதுமோ? என வினவினார். நாயனார் நிகழ்ந்ததைக் கூறினார். இக்குற்றத்துக்காக என்னையும் கொல்ல வேண்டும் எனச் சொல்லி தன் உடை வாளை எறிபத்தரிடம் கொடுத்தார் அரசர்.

வாளை வாங்காவிட்டால் அரசர் தம்மைத் தானே மாய்த்துக்கொள்வார் என எண்ணிய நாயனார் தம்மையே மாய்த்துக்கொள்ள முயன்றார். அரசர் அவரை தடுத்து நிறுத்தினார்.

இறைவன் அருளால் யானையும் பாகரும் உயிர் பெற்றனர். பூக்கூடையில் பூ  நிறைந்தது. சிவகாமியாண்டார் முன்பு போல் மலர்ப்பணீ புரிந்தார். எறிபத்தர் சிவகணங்களுக்குத் தலைவராகும் பேறு பெற்றார்.

நன்றி   சக்திப்பிரியன்    தீபம்

Advertisements

2 thoughts on “எறிபத்தர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s